Published:Updated:

''கணக்குப் புத்தகங்களைத் திருடினார் பாலமுருகன்!''

''கணக்குப் புத்தகங்களைத் திருடினார் பாலமுருகன்!''

பிரீமியம் ஸ்டோரி
##~##

டந்த ஜூ.வி. இதழில், 'பாண்டிராஜ் என்னை ஏமாற்றி விட்டார்’ என்று, வெளியிட்டு இருந்த கட்டுரை தொடர்பாக மேலும் சில தகவல்களைத் தெரிவிக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

''நேர்மையும் திறமையையும் மட்டுமே நம்பி, திரைப்பட இயக்குநராக வளர்ந்தவன் நான். நல்லவர்கள் பலருக்கு இடையே தவறான சிலரை நம்பி, நொந்ததுதான் இப்போதையப் பிரச்னை. எனது, 'வம்சம்’ படப்பிடிப்பு நடந்த நேரத்தில், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வோம் என்று கூறி,

''கணக்குப் புத்தகங்களைத் திருடினார் பாலமுருகன்!''

பாலமுருகன் என்னிடம் 10 லட்ச ரூபாய் வாங்கி இருந்தார். அதை, இரண்டு வருடத்தில் லாபத்துடன் சேர்த்து 15 லட்சமாக எனக்குத் திருப்பித் தருவதாகவும் கூறி இருந்தார். அப்படி அவர் எனக்குத் தர வேண்டிய 15 லட்ச ரூபாயையும் சேர்த்துத்தான், 25 லட்ச ரூபாயை அவர் 'மெரினா’ படத்துக்கு செலவு செய்திருந்தார். பாலமுருகன் இந்தப் படத்துக்கு செலவு செய்ததாக ஆடிட்டர் மூலமாக கணக்குப் பார்த்துச் சொன்னது, 12.5 லட்சம் மட்டுமே. அவருடைய சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்திய காரை விற்றதில் ஏற்பட்ட நட்டத்தையும், என் மீது வழக்குத் தொடுத்ததற்கு ஆன செலவையும் சேர்த்து என்னிடமே கேட்பதை என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். என் மீது பொய் வழக்குப் போட்டு, என் வீட்டுக்கு போலீஸையும் அமீனாவையும் வரவழைத்ததற்கு ஆன செலவையும் நான் கொடுக்க வேண்டும் என்றால், அது எப்படி முடியும்?

மேலும், முன்பு என்னிடம் மேனேஜராக இருந்த சாம்பசிவத்துடன் சேர்ந்து பாலமுருகன் கணக்கு வழக்குகளிலும் ஏகப்பட்ட முறைகேடுகளைச் செய்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. என்னுடைய அலுவலகத்தில் இருந்த கணக்குப் புத்தகங்களைத் திருடி போலிக்கணக்குகள் தயார் செய்துள்ளனர். இதுபற்றி,  திரைப்பட மேனேஜர்கள் யூனியனில் புகார் கொடுத்து இருக்கிறேன். போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க உள்ளேன். நீதிமன்றமே, நீதி சொல்லட்டும்.'' என்கிறார் பாண்டிராஜ் உறுதியாக!

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு