Published:Updated:

மைக்கேல் ஆஞ்சலோ வரலாறு

ஜூ.வி.நூலகம்

இளஞ்சேரன், நீர் வெளியீடு, எண்.10, 6வது தெரு, முதல் பிரிவு, கே.கே.நகர், சென்னை- 78. விலை

மைக்கேல் ஆஞ்சலோ வரலாறு

120

கல்லுக்கும் உயிர் கொடுத்த கடவுள், மைக்கேல் ஆஞ்சலோ!

##~##

லகம் இன்று உன்னதம் எனக் கொண்​டாடுகிற பல படைப்புகள்,  அவரின் கைவண்ணம். கன்னி மேரி, செண்டார்களின் யுத்தம், உறங்கும் மன்மதன், மதுக் கிண்ணம் கையில் ஏந்தி வாளிப்பான உடலைக் காட்டி நிற்கும் டயோனிஸஸ், சலவைக் கல்லில் ஒரு தவம் போல அமைந்த பியட்டா, அடிமைகள், அப்போஸ்தலர்களின் சிற்பங்கள், பத்துக் கட்டளைகளைத் தாங்கி நிற்கும் மோசஸ், பர்னிஸ் அரண்மனை என்று அடுக்கிக்​கொண்டே போகலாம். ஆனாலும் தான் இறக்கும் நேரத்தில் ஆஞ்சலோ என்ன சொன்னார் தெரியுமா?

'என் ஆத்மா முக்தி பெறப் போதுமான எதையும் நான் செய்யவில்லை. என் தொழிலுக்குரிய முதல்

மைக்கேல் ஆஞ்சலோ வரலாறு

எழுத்துக்களைப் படிக்கத் தொடங்கும்போதே நான் இறந்து கொண்டு இருக்கிறேன். இதுவே என் துயரம்’ என்றார். நான் எதையுமே சாதிக்கவில்லை என்று சொல்லிச் செத்துப்போனவரின் படைப்புகளைத்தான் 500 ஆண்டு​கள் கழிந்த பிறகும் உலகம் தரிசித்துக்கொண்டு இருக்கிறது.

மைக்கேல் பொறாமைப்பட்டது தனது காலத்தில் வாழ்ந்த டாவின்சியைப் பார்த்து மட்டும்​தான் என்பார்கள். டாவின்சியிடம் தன்னை நிரூபிப்​பதற்​காகவே செதுக்கிக்கொண்டே இருந்ததாகவும் சொல்வார்கள். அதேபோல் ரபேலையும் தன்னுடைய எதிரியாக மைக்கேல் நினைத்தார். இந்த இருவரின் மரணங்கள் நிகழும் போதும், மைக்கேலுக்கு 45 வயது. ஆனால், மரணம் தன்னையும் நெருங்கி விட்டதாக நினைத்து... ஒருவித மன அழுத்தத்திலேயே இருந்தார். ஆனாலும் அதை அவரின் கலை மனோபாவம் வென்றது. 89 வயது வரை இறக்க மைக்கேலை சிற்பம் அனுமதிக்கவில்லை. சிற்பம், ஓவியம், கவிதை, கட்ட​டக் கலை என அனைத்திலும் அவரின் தீர்க்கமான பதிவுகள், படைப்புகள் இன்றும் உள்ளன.

குழந்தை ஏசுவை மடியில் வைத்துக்கொண்டு படிக்கட்டுகளில் அமர்ந்து இருக்கும் கன்னி மேரியின் சிற்பம்தான் மைக்கேலின் முதல் படைப்பு. இன்று அது ஃபிளாரன்ஸ் காஸா புனரோட்டிக் காட்சி சாலையில் இருக்கிறது. கிரேக்க இதிகாசக் கதைகளை வைத்து செண்டார்களின் யுத்தம் என்கிற சிற்பம் தீட்டும்போதுதான், மைக்கேல் கவனிப்பைப் பெற்றார். போராடும் நிலையில் உடல் திரண்ட நிர்வாண மனிதர்களை அதில் மைக்கேல் படைத்திருப்பார். அந்தக் காலத்தில் பிணங்களை ஆராய்ச்சிக்குப் பயன்​படுத்துவது சட்டப்​படி குற்றம். உடற்கூறு சாஸ்திரங்களை அறிவதற்​காக பெரும்பாலும் ரகசியமாக, பிணங்களை ஆய்வு செய்வதில் இறங் கினார். அதன்பிறகு, செதுக்கப்பட்டதுதான் ஹெர்குலிஸின் சிற்பம். சிஸ்டைன் தேவாலயத்தின் உத்திரத்தில் சுமார் நாலரை ஆண்டு காலம் மல்​லாந்து படுத்தபடியே ஓவியங்கள் வரைந்த கதையைப் படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. மல்லாந்து படுத்தே ஓவி​யங்கள் வரைந்த கார​ணத்தால், தனக்கு வந்த கடிதங்களைக்கூடதலைக்கு மேல் உயர்ந்து படிக்கும் பழக்கம் மைக்கேலுக்கு அதன் பிறகு ஏற்பட்டதாம். மேலும், தன்னுடைய கலையை யாருக்கும் அடமானம் வைக்காதவராக இருந்தார். தேவாலயங்​களில் நிர்வாண நிலை ஓவியமா என்று திருத்தச் சொன்னபோது மறுத்தவர், ''முதலில் உலகைச் சீர்திருத்த அவர்கள் முயற்சிக்கட்டும்'' என்று கர்ஜித்தார்.

ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய பக்தியும் கம்பீரமும் மைக்கேல் ஆஞ்சலோவுக்கு நிரம்பவே இருந்ததைத் தொகுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்!

-  புத்தகன்