Published:Updated:

'அட்டாக்' வழக்கில் அகப்பட்ட போலீஸ்!

'அட்டாக்' வழக்கில் அகப்பட்ட போலீஸ்!

'அட்டாக்' வழக்கில் அகப்பட்ட போலீஸ்!

'அட்டாக்' வழக்கில் அகப்பட்ட போலீஸ்!

Published:Updated:
##~##

ரு காலத்தில் அழகிரியின் வலது கரமாக இருந்தவர் 'அட்டாக் பாண்டி’. தினகரன் அலு​வலகம் எரிப்பு வழக்கில் பிரபலம் ஆனவர். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, நிதிநிறுவன அதிபர் அசோக்குமாரைக் கடத்தி கோடிகளைப் பறித்த வழக்கும், நில அபகரிப்புப் புகார்களும் 'அட்டாக்’ பாண்டி மீது பாய்ந்தன. அதைத்தொடர்ந்து, குண்டர் சட்டமும் பாய்ந்தது. ஒரு வழியாக குண்டர் சட்டத்தை உடைத்து வெளியே வந்தவர், அழகிரி பிறந்த நாளில் வெள்ளிக் கதாயுதம் வழங்கி, மீண்டும் தன்னுடைய இருப்பை நிலை நாட்டிக்​கொண்டார். 

இதற்கிடையே கடந்த வாரம், மதுரை தெற்கு வெளி வீதியைச் சேர்ந்த எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரியான பிருத்​விராஜ், வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் உள்ள தனது வீட்டை அபகரித்துக்கொண்டு அட்டாக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அட்டாக்' வழக்கில் அகப்பட்ட போலீஸ்!

பாண்டி தரப்பினர் மிரட்டுவதாக எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், பாண்டி, அவரின் மனைவி தயாளு, மைத்துனர் கருணாநிதி, வீட்டுக் காவலாளி மாலிக் பாட்சா உள்ளிட்ட ஏழு பேர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அட்டாக் பாண்டி சிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டதால், அவரது மனைவி, மைத்துனர், காவலாளி ஆகிய மூவரையும் அதிகாலையிலேயே அள்ளி வந்து விசாரணையில் இறங்கிய போலீஸ், ஏனோ தயாளுவை

'அட்டாக்' வழக்கில் அகப்பட்ட போலீஸ்!

மட்டும் உடனே விடுவித்தது. அன்று ஞாயிற்றுக்​கிழமை என்பதால், இரவு 7.30 மணிக்கு, மற்ற அனைவரும், ஜே.எம். 4 மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர் படுத்தப்​பட்டார்கள்.

அப்போது, அட்டாக் தரப்பில் ஆஜரான வக்கீல் மணிகண்டன், 'இதே வீட்டை அபகரிச்சு மிரட்டினதா ஏற்கெனவே அவனியாபுரம் போலீஸ்ல ஏழு பேர் மீது எஃப்.ஐ.ஆர். போட்டாங்க. ஒரு சிவில் வழக்கில் போலீஸ் தலையிடுகிறது என்று, உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். மனுதாரர்களை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. பல மாதங்கள் கழித்து, மீண்டும் அதே புகாரை, மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸில் கொடுத்திருக்கிறார் பிருத்விராஜ். முறையாக விசாரணை செய்யாமல், அவசர அவசரமாக எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. அந்த வீட்டை புகார்தாரரிடமே ஒப்படைத்து காம்ப்ரமைஸ் ஆகி விட்டார்கள்' என்றார்.

'அட்டாக்' வழக்கில் அகப்பட்ட போலீஸ்!

திடீரென அங்கு வந்த பிருத்விராஜ், ஒரு அஃபிடவிட்டை மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்தார். அதில், 'இப்போது, நாங்களும் எதிரிகளும் சமரசமாகி ​விட்டோம். அதைப் போலீஸிலும் சொல்லி விட்டேன். இருந்தாலும், எதிரிகளை ரிமாண்டுக்குக் அழைத்து வந்து இருக்கிறார்கள். எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து அவர்களை விடுவிக்கு​மாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று, அதில் கூறப்பட் டிருந்தது.

'அட்டாக்' வழக்கில் அகப்பட்ட போலீஸ்!

அதைச் சுட்டிக்காட்டிப் பேசிய வக்கீல், 'புகார் கொடுத்தவரே எங்களோடு வந்திருக்கிறார். அவர் மேல் ஒரு சின்னக் காயம்கூட இல்லை. ஆனால், கொலை முயற்சி வழக்குப் போட்டிருக்காங்க. எல்லா நீதிமன்றங்களும் சமரசத்தைத்தான் விரும்பு கின்றன. ஆனா, போலீஸ்தான் அதைத் தடுக்கிறது' என்று எகிறினார்.

கோபம் அடைந்த மாஜிஸ் திரேட், இன்ஸ்​பெக்டர் ஜான் பிரிட்டோவைப் பார்த்து, 'இங்க இருக்கிற போலீஸ் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாத்தான் செயல்படுறீங்க. என்னத்​தையாவது பண்ணி​விட்டு, எங்ககிட்ட வந்து தொல்லை இழுத்து விடுறீங்க.

'அட்டாக்' வழக்கில் அகப்பட்ட போலீஸ்!

நான் ரெண்டு மூணு விஷயத்துல பார்த்தாச்சு. போலீஸ் வேலை​யை முதல்ல ஒழுங்காப் பாருங்க. புகார் கொடுக்கிறது, அப்புறம் இல்லைன்னு சொல்றதுன்னு சிலர் இதே சோலியா இருக்காங்கன்னா, நீங்களும் அதுக்கு கோ-ஆபரேட் பண்ணினா எப்படி? நீங்க என்ன சார் விசாரணை செஞ்சீங்க. பாருங்க புகார் கொடுத்தவரே இங்கே வந்து நிக்கிறார்' என்று விளாசினார்.

உடனே குறுக்கிட்ட இன்ஸ்பெக்டர், 'புகார்தாரரை மிரட்டிக் கூப்பிட்டு வந்​திருக்காங்க' என்றார்.

உடனே பிருத்விராஜைப் பார்த்து, 'நீங்க என்ன மிஸ்டர் சொல்றீங்க? நாங்க எல்லாம் விளையாட்டுப் பொருளா உங்களுக்கு?' என்று, மாஜிஸ்திரேட் கேட்க, பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக நின்றார் அவர்.

பிருத்விராஜிடம், 'நீங்க எல்லாம் எதுக்கு சார் எஸ்.பி-கிட்ட வந்து புகார் கொடுக்குறீங்க?' என்று இன்ஸ்பெக்டர் பாய, குறுக்கிட்ட மாஜிஸ்திரேட், 'உங்க பிரச்னையை இங்கே வந்து பேசாதீங்க. மற்றதை ரெகுலர் கோர்ட்டில் பார்த்துக்கிடலாம்'' என்று சொல்லி, கைதான இருவரையும் ரிமாண்ட் செய்தார்.

''என்னதான் நடந்தது?'' என்று பிருத்விராஜிடம் கேட்டோம். 'என்னுடைய புகாருக்கு போலீஸ் எக்சலென்ட்டா நடவடிக்கை எடுத்திருக்காங்கன்னு மட்டும் போட்டுக்கோங்க' என்றபடி நடந்தார். 'அட்டாக் தரப்பு உங்களை மிரட்டியதா?' என்று கேட்டதற்கு, 'எல்லாம் முடிஞ்சுபோச்சு. ஆரம்பத்தில் மனஸ்​தாபம் இருந்தாலும் இப்ப எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சி. வீட்டை ஒப்படைச்சிட்டாங்க' என்றார் கூலாக.

இந்த விவகாரம் குறித்து எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கிடம் கேட்டோம்.''வழக்குப் பதிவு செய்துவிட்டால், அதன் பிறகு நாங்கள் எதுவும் செய்ய​முடியாது. நீதிமன்றத்தில்தான் அவர்கள் சமாதான​மாகப் போகமுடியும். நீதிமன்றத்தில் சமாதானத்துக்கு ஒப்புக்கொண்ட பிருத்விராஜ் இன்று, 'மிரட்டியதால்தான் நான் வழக்கை வாபஸ் வாங்கினேன்’ என்று எங்களிடம் எழுதிக் கொடுத்து இருக்கிறார்'' என்று சொன்னார்.

மாஜிஸ்திரேட் கேட்டது நியாயம்தான்!

- கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism