Published:Updated:

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்

ஜூ.வி. நூலகம்

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்

ஜூ.வி. நூலகம்

Published:Updated:

சாரா காம்பிள் - டோரில் மோய், தமிழில்: ராஜ்கௌதமன், விடியல் பதிப்பகம்,

88 இந்திரா கார்டன் 4-வது வீதி, உப்பிலிப்பாளையம் அஞ்சல்,

கோயம்புத்தூர் - 15. விலை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்

60 

##~##

ண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள்  காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை... மனிதர்களுக்குள் உடல் உறுப்பு மாற்றம் மட்டுமே உண்டு என்பார்கள். அந்த உடல் உறுப்பு மாறுபாட்டையும் கூட கேள்வி கேட்டவர்கள் பெண் உரிமைச் சிந்தனையாளர்கள். பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்ணியம் என்று பேசப்படும் வார்த்தைகள் எப்போது உருவானது, எப்படி உருவானது, இதனை முன்னெடுத்த மனிதர்கள் யார் என்ற வரலாற்றுத் தகவல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்!

''ஒருவர் பெண்ணாகப் பிறப்பது இல்லை. ஆனால் பெண்ணாக மாறுகிறார்'' என்று, தனது 'செகண்ட்

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்

செக்ஸ்’ என்ற புத்தகத்தில் சிமோன் தி பூவ எழுதியது முதலாவது அதிர்ச்சியாக ஆண்களின் ஆதிக்க மனதில்  விழுந்தது.

''மானிடப் பெண்பால், இந்தச் சமூகத்தில் வெளிப்​படுத்துகிற உருவ​​மானது, உளவியல், உயிரியல், பொரு​ளாதார விதி ஆகியவற்றால் தீர்மான​மாவது இல்லை. நாகரிகம் ஒட்டுமொத்தமாக இந்த ஜந்துவை உற்பத்தி செய்கிறது. இது ஆணுக்கும் அலிக்கும் இடைப்பட்டது. இதனை பெண்பால் என்று அழைப்பர்'' என்றும் தி பூவ எழுதினார். ஆணும் அல்லாத, அலியும் அல்லாதவள் பெண் என்றும் அவர் வரையறுத்துச் சொன்னார். 'பிறர்’ என்று வரையறை செய்வதன் மூலமாக  பெண்ணின் அடையாளத்தை மீட்க அடித்தளம் அமைத்தார் இவர். இதன் தொடர்ச்சியாக எத்தனையோ படைப்புகள் வந்தன.

இதில் ஆண்கள் எழுதியதும் உண்டு. ஆண்களின் எழுத்துக்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. ''பெண்களின் நூல்களைப் பற்றிய ஆண்களின் கலந்துரையாடல் நிச்சயம் பெண்மையை நோக்கி வந்து சேரும். ஆனால், பெண்களின் நூல்கள் பெண்கள் என்றே கொள்ளப்படும். ஆண்களின் விமர்சனம் அவற்றின் மார்பு, இடுப்பு பற்றிய அறிவார்ந்த அளவெடுப்பாக இருக்கும்'' என்ற எல்மானின் விமர்சனத்தில் எள்ளல் மட்டுமல்ல யதார்த்தமும் தெறித்தது. இதையே எளிய தமிழில், ''பூனைகளால் எலிகளுக்கு எப்போதும் விடுதலை வராது'' என்று, பெரியார் ஈ.வெ.ரா. சொன்னார்.

ஆண்கள் வைத்திருக்கும் எத்தனை​யோ சொத்துக்களில் ஒன்றாகத்தான் இன்றுவரை பெண் பார்க்கப்படுகிறாள். அவரை உரிமை கொண்டவளாக மீட்பது என்பது எந்த வகையில் சாத்தியம் என்பதை அமெரிக்காவில், பிரான்சில், பிரிட்டனில் நடந்த போராட்​டங்களின் மூலமாக சாரா காம்பிள் மற்றும் டோரில் மோய் ஆகிய இருவரும் விளக்குகிறார்கள். பெண்களுக்கு ஓரளவு கிடைத்துள்ள உரிமைக்காகக் கூட இழந்ததுதான் அதிகம் என்பதை உணர முடி கிறது. பொரு​ளாதார விடுதலை பெற்ற, சமூகக் கட்டுப்பாடுகள் அதிகம் இல்லாத மேற்கத்திய பெண்களுக்குக்கூட முழுமை​யாக வாய்க்காத விடுதலையை  இந்தியப் பெண் எப்படி அடைய முடியும் என்ற கேள்விக்கான விடையை அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் பயன்படும்!

''பழஞ் சமூகங்களின் எச்சங்களாக ஆகாமல் வாழ வேண்டுமானால், புதிய ஞானங்களை அறிந்து​கொள்ள வேண்டும்'' என்பதற்காகவே இந்தக் கட்டுரைகளை மொழிபெயர்த்ததாகச் சொல்கிறார் ராஜ்​கௌதமன். இந்தப் புத்தகம் சொல்வது அனைத்துமே பழமையை நொறுக்கு​வது பற்றித்தான்!

 புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism