Published:Updated:

''அல்சர் நீக்கிய டாக்டரை ஆதீனம் ஆக்கலாமா?''

முடிவில்லாமல் தொடரும் நித்தி காமெடி!

''அல்சர் நீக்கிய டாக்டரை ஆதீனம் ஆக்கலாமா?''

முடிவில்லாமல் தொடரும் நித்தி காமெடி!

Published:Updated:
##~##

ரபரவென இருக்கிறது மதுரை. ஆதீனமும் நித்தியானந்தாவும் தினமும் சுடச்சுட பேட்டி கொடுக்கிறார்கள். நித்திக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ ஏதாவது ஒரு கூட்டம் ஏதாவது ஒரு மூலையில் நடக்கிறது. 'மதுரை ஆதீன மடத்துக்கு வழிபாடு நடத்தச் சென்ற இந்து அமைப்பினர் மீது செருப்பு வீச்சு’ - இது, கடந்த  ஞாயிற்றுக் கிழமை ஸ்பெஷல்! 

மதுரை ஆதீன மடத்தைச் சுற்றி பக்தர்கள் கூடுகிறார்களோ இல்லையோ காக்கிகள் அதிக எண்ணிக்கையில் நிற்கிறார்கள். 'மதுரை ஆதீனத்தை 13-ம் தேதி மீட்கப்போகிறோம். ஆதீன மடத்துக்குள் புகுந்து ஞானசம்பந்தரை வழிபடப்போகிறோம்’ என்று ஒரு குரூப், நாள் குறித்தது. உடனே, '13, 14-ம் தேதிகளில் மதுரை ஆதீன மடத்தில் தியான சத்சங்கம் நடக்கும்’ என அவசர அவசரமாய் போஸ்டர் ஒட்டியது நித்தியானந்தா தரப்பு. 'நிச்சயம் ஏழரைதான்’ என்று பலரும் உஷாரானார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அல்சர் நீக்கிய டாக்டரை ஆதீனம் ஆக்கலாமா?''

ஆதீன மடத்தின் தெற்கு வாசல் பக்கம்தான் திருஞான சம்பந்தர் சந்நிதி. அந்த வழியாக யாரும் அத்து

''அல்சர் நீக்கிய டாக்டரை ஆதீனம் ஆக்கலாமா?''

மீறி உள்ளே புகுந்துவிடக் கூடாது என்பதற்காகவே தெற்கு வாசல் கதவை இழுத்து மூடிவிட்டார்கள். காரணம் கேட்டவர்களுக்கு, 'திருப்பணி வேலைகள் நடப்பதால் மூடிவைத்து இருக்கிறோம்’ என்று சொன்னார்கள் நித்தியானந்தாவின் சீடர்கள். 'பிரச்னை​களைச் சமாளிப்பதற்காக, நெல்பேட்டை ஏரியாவைச் சேர்ந்த ஒரு கும்பலை உள்ளே வைத்திருக்கிறார்கள். அதுவும்போதாது என்று 13-ம் தேதி காலையில் திருவண்ணாமலையில் இருந்து மூன்று வேன்களில் திடகாத்திரமான ஆட்கள் சிலரையும் கொண்டுவந்து இறக்கினார்கள்’ என்று ஊரெங்கும் பேச்சு கிளம்பியது.

13-ம் தேதி காலை 7 மணிக்கு சத்சங்கம் தொடங்கியது. அதேநேரத்தில், மதுரை ஆதீன மீட்பு மாநாடு வடக்கு மாசி வீதியில் தொடங்கியது. ''அரசியல்வாதிகள் ஆள் பிடிப்பது மாதிரி ஆரப்பாளையம் ஆதீனம், மாட்டுத்தாவணி ஆதீனம், திருவல்லிக்கேணி ஆதீனம்னு யார் யாரையோ கூட்டிட்டு வந்து நித்தியானந்தாவுக்கு ஆதரவு கொடுக்க வைத்திருக்கிறார்கள்'' என்று கலகலப்பாய் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்.  

தேவர் தேசியப் பேரவையின் திருமாறன், பாரதிய ஃபார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி ஆகியோர் பேசியபிறகு, திருப்பனந்தாள் காசி திருமடத்து இணைஅதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் பேசினார். ''சைவத்துல குருவைத் தேடி சிஷ்யன் போறதுதான் பதிவாகி இருக்கு. ஆனால் அருணகிரி, சிஷ்யரைத் தேடிக்கிட்டு இருந்ததாச் சொல்றார். நித்தியானந்தர், குருவுக்கு நமஸ்காரம் பண்ணி இருக்காரா, திருமேனியில் 16 இடங்களில் விபூதி பூசணுமே பூசி இருக்காரா? 'எனது வியாதியைக் குணப்படுத்தினார். அதனால், அவரை ஆதீனமாக்கி விட்டேன்’ என்கிறார் அருணகிரிநாதர். எனக்கும்தான் 20 வருஷமா இருந்த அல்சர் பிரச்னையை டாக்டர் ஒருத்தர் சரிபண்ணிருக்கார். அதுக்காக அவரை அடுத்த பட்டமா அறிவிச்சிடலாமா? ஐ.ஏ.எஸ். பணியில் நேரடியாய் சேருவது போல் திருமடங்களில் ஆதீனங்​களை டைரக்ட் ரெக்ரூட்​மென்ட் எல்லாம் பண்ண முடியாது. தாசில்தாராகச் சேர்ந்து படிப்​படியாக பயிற்சி எடுத்து கன்ஃபர்ம்டு ஐ.ஏ.எஸ். ஆவது போலத்தான் ஆதீனங்கள் பட்டத்​துக்கு வர முடியும்'' என்று முத்தாய்ப்பு வைத்தார்.

''அல்சர் நீக்கிய டாக்டரை ஆதீனம் ஆக்கலாமா?''

மதுரை ஆதீன மீட்புக் குழுவின் தலைவர் நெல்லை கண்ணன் நம்மிடம் பேசினார்.''மதுரை

''அல்சர் நீக்கிய டாக்டரை ஆதீனம் ஆக்கலாமா?''

ஆதீனத்திடம் போன்ல நேத்திக்கு பேசினேன். 'ஆசீர்வாதம்’னு சொன்னார். 'எனக்கு வேண்டாம்’னேன். நான் என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. இளைய பட்டத்துக்குத் தம்பிரான் ஒருவரை அனுப்பி வையுங்கன்னு தருமை ஆதீனத்துக்கிட்ட நாலு வருஷமா கேட்டுக்கிட்டு இருந்தேன். அவங்க அனுப்பவே இல்லை. அதனால், நானே முடிவெடுத்​திட்டேன்’னு சொன்னார். இளைய பட்டத்துக்காகத் தருமை ஆதீனத்தில் இருந்து நான்கு தம்பிரான்களை அனுப்பியது எனக்குத் தெரியும்.

'நான் ஆண்தன்மை இல்லாதவன்’னு பெங்க​ளூரு கோர்ட்டுல பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த நித்தியானந்தனை, மதுரை ஆதீனமா எப்படி நியமிக்க முடியும்?  'பிடதி, மடமும் இல்லை; நான் பிரம்மச்சாரியும் இல்லை, பிரம்மச்சரியத்தைப் போதிக்கவும் இல்லை’னு சொன்னவர்தான் நித்தியா​னந்தன். பிரம்மச்சாரியாக இல்லாதவர் எப்படி மதுரை ஆதீனமாகலாம்? ஞானப்பால் அருந்திய ஞான​சம்பந்தர் மடத்துக்கு, காமப்பால் அருந்திய நித்தியானந்தன் ஆதீனகர்த்​தரா?'' என்று கேட்டார்.

மாநாட்டின் முடிவில், சிவ வாத்தியங்கள் முழங்க பன்னிரு திருமுறைகளையும் நந்திக் கொடிகளையும் ஏந்தி பேரணியாகப் புறப்பட்டவர்கள், மேல மாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 'குஞ்சிதபாதம் (நர்த்தன நடராஜரின் அழகிய குவிந்த திருவடி) பார்க்க வேண்டியவர்கள் எல்லாம் ரஞ்சிதா பாதம் பார்க்கிறார்கள். நித்தியானந்தா நாசமாப் போகணும்’ என்றெல்லாம் கோஷம் போட்டார்கள். ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டு இருந்தபோதே, ஆதீன மடத்தில்

''அல்சர் நீக்கிய டாக்டரை ஆதீனம் ஆக்கலாமா?''

வழிபாடு நடத்த நித்தியானந்தாவிடம் அனுமதி கேட்பதற்காக திருவாவடுதுறை ஆதீனத்து சைவ சித்தாந்த சபையைச் சேர்ந்த அமிர்தலிங்கம், ராமசாமி ஆகியோரைபோலீ​ஸாரே அழைத்துச் சென்றனர். ஆனால், நித்தியானந்​தரின் சீடர்களோ, 'இது பொது மடம் அல்ல; வழிபாடு நடத்துவதானால்ஆதீனத்​திடம் முறையாக முன்​அனுமதி பெற்றுத்தான் வரவேண்டும்’ என்று திருப்பி அனுப்பினார்கள்.

இதைக்கேட்டதும் ஆர்ப்​பாட்டத்தில் இருந்தவர்கள், இன்னும் ஆவேசமாகி மறியலில் குதித்தார்கள். போலீஸ் அவர்களைக் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு இருந்தபோதே, ஆதீன மடத்தில் அடுத்த ரகளை. தேவர் தேசியப் பேரவை, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஏழு பேர், ஆட்டோவில் வந்து தடையை மீறி, மூடிக்கிடந்த மதுரை ஆதீன வாசலில் தேங்காய் உடைத்து பூஜை செய்தார்கள். பதறிப்போய் ஓடி வந்த போலீஸார், அவர்களைக் குண்டுக்கட்டாய்த் தூக்கி வேனில் ஏற்றினார்கள். அப்போது, ஆதீன மடத்தின் மேல்தளத்தில் இருந்து சரமாரியாக வீசப்பட்ட செருப்புகள் போலீஸ் மீது விழுந்தன. அதை சகித்துக்கொண்டு, வாக்குவாதம் செய்துகொண்டு இருந்த நித்தியானந்தாவின் ஆட்களை ஆதீன மடத்துக்குள் தள்ளிக் கதவுகளைச் சாத்தியது போலீஸ்.

மாலை, சத்சங்கத்துக்கு வந்த நித்தியானந்தா, மீடியாக்களிடம் பதற்றமாகப் பேசினார். ''எனக்கு எதிராகக் கிளம்பிய 13 மடாதிபதிகளில் மூன்று பேரின் பிரதிநிதிகள்தான் மீட்பு மாநாட்டில் கலந்துகொண்டு இருக்கிறார்கள். மீதி 10 விக்கெட் நேத்திக்கே அவுட். அவங்களோட முதல் போராட்டமே காமெடியா முடிஞ்சிருச்சு. ஜெயேந்திரர் எனக்கு எதிராகக் கூறிய கருத்துக்களை வாபஸ் வாங்குவதற்காக, சங்கர மடத்து மேலாளர் சுந்தரேச அய்யர் நாளை வருகிறார். மற்ற ஆதீனங்களும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கச் சம்மதித்து இருக்கிறார்கள். அந்தக் கடிதங்களை ஒவ்வொன்றாய் வெளியிடுவோம். அந்த நெல்லைக் கண்ணன் பேரையே நான் கேள்விப்பட்டது இல்லை. அவரு என்ன பெரிய அரசியல்வாதியா? காமெடி கீமெடி பண்ணிடாதீங்கய்யா. நாளைக்கு நண்பர்களாக சந்திக்க வேண்டி இருக்குமே என்ப​தற்காக, நாங்கள் அமைதியாக இருக்கிறோம். அதற்காக எங்களைப் பற்றி அவதூறுகளை சொல்லிக் ​கொண்டே இருந்தால் சும்மா இருக்க முடியாது'' என்று சொன்னார்.

ஆதீன வழக்கு சம்பந்தமான நீதிமன்றத் தீர்ப்பின் நகலை அவசரமாய் கேட்டு வாங்கி இருக்கிறதாம் அரசு. ஆக, அடுத்த ஆட்டம் ஆரம்பமாகிறது!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism