Published:Updated:

தண்ணீர்த் திருட்டு... துப்பாக்கி மிரட்டல்!

போலீஸ் பிடியில் ரோகிணி நாராயணன்

தண்ணீர்த் திருட்டு... துப்பாக்கி மிரட்டல்!

போலீஸ் பிடியில் ரோகிணி நாராயணன்

Published:Updated:
##~##

தி.மு.க-வினர் மீதான வழக்குகளை எதிர்கொள்வது குறித்து, கட்சி வழக்கறிஞர்களுடன் 12-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி ஆலோ​சனை நடத்தினார். அதேநேரம், நெல்லையைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர் ஒருவரை வளைத்துப் பிடித்திருக்கிறது காவல்துறை. 

அவர், பாளையங்​கோட்டை உதயா நகரில் வசிக்கும் ரோகிணி நாராயணன். தி.மு.க-வின் மாநிலத் தொண்டர் அணி முன்னாள் அமைப் பாளராகச் செயல்​பட்டவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர் மீது, புகார் கொடுத்த மேலப்பாளையம் பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் சண்முககுமாரைச் சந்தித்தோம். ''நான் அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி பகுதிச் செய​லாளராகவும், உதயா நகர் குடி​யிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறேன். ரோகிணி நாராயணன், தன் வீட்டில் மின் மோட் டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவதால், இந்தப் பகுதியில்

தண்ணீர்த் திருட்டு... துப்பாக்கி மிரட்டல்!

குடியிருக்கும் பலரது வீடுகளுக்கும் தண்ணீர் கிடைப்பது இல்லை. அதனால், ரோகிணி நாரா​யணன் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டேன்.உடனே அவர் ஆத்திரத்துடன், 'எங்கிட்ட நேருக்கு நேராப் பேச எவ்வளவு தைரியம் உனக்கு? நீ சொன்னா நான் கேட்கணுமா... இதுக்கு மேல இங்கே நின்னேன்னா உன்னை சுட்டுக் கொன்னுடுவேன்’னு கைத்​துப்பாக்கியை எடுத்து நீட்டினார். அதனால், நான் பயந்துபோய் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து, பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தேன்'' என்று சொன்னார். ரோகிணி நாராயணன் மீது கொலை மிரட்டல், பயங்கர

தண்ணீர்த் திருட்டு... துப்பாக்கி மிரட்டல்!

ஆயுதத்தைக் காட்டி மிரட்டுதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்​யப்பட்டு உள்ளது. அவர் சார்பாகப் பேசி​னார் வழக்கறிஞர் சிவகுமார். ''சம்பவம் நடந்ததாகச் சொல்​லப்படும் தினத்தில் ரோகிணி நாராயணன் வீட்டிலேயே இல்லை. அவர் நாகர்​கோவிலில் இருந்தார். இதன் பின்னணியில் ஆளும் கட்சியின் உள்ளூர்ப் பிரமுகருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது'' என்று படபடத்​தார்.

இந்த விவகாரம் குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகரிடம் கேட்டதற்கு, ''நாரா​யணன் வீட்டில் நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன. கூடுதல் நீர்த்தேவைக்காக, சட்ட விரோதமாக மூன்று இஞ்ச் பைப் போட்டு தண்ணீர் எடுத்து இருக்கிறார். அதைத் தட்டிக்கேட்ட சண்முககுமார் என்பவரை, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இருக்கிறார். ரோகிணி நாராயணனிடம் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி இருக்கிறது. அவர் கொலை மிரட்டல் விடுத்தது உண்மைதான் என்பது தெரிய வந்ததால், உடனடியாகக் கைது செய்​துள்ளோம். இதில் அரசியல் தலையீடு இல்லை'' என்றார் உறுதியுடன்.

நாராயணன் வீட்டில் சோதனை நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், சுமார் நான்கு சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்களாம். அதனால், அடுத்தடுத்து வழக் குகள் பாயும் என்றே தெரிகிறது!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism