Published:Updated:

திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் பலி!

விகடன் விமர்சனக்குழு
திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் பலி!
திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் பலி!
திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் பலி!

மதுரை: மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

மதுரையை அடுத்த, திருமங்கலம் அருகே வி.பி.எம். ஆனந்த் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

##~~##
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.