உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

ஐஸ்வர்யாவுடன் பிரச்னைக்குக் காரணம் ஸ்ருதியா?

மாமனார் கஸ்தூரிராஜா விளக்கம்!

##~##

நீர்த்துப்போனதாக நினைத்த '3’ பட விவகாரம், மீண்டும் எரிமலைக் குழம்பாக வெடித்து இருக்கிறது. இத்தனை நாட்கள் அமைதி காத்த நட்டிகுமார், திடீரென்று ஹைதராபாத் காவல் நிலையத்தில், தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா மீது புகார் கொடுத்து இருக்கிறார். 

''என்னதான் நடக்கிறது'' என்று கஸ்தூரிராஜாவிடம் கேட்டோம்.

''நான் '3’ படத்தின் தெலுங்கு உரிமையை 4.35 கோடிக்கு நட்டி குமாருடன் ஒப்பந்தம் போட்டேன்.

ஐஸ்வர்யாவுடன் பிரச்னைக்குக் காரணம் ஸ்ருதியா?

ஆனால், அவர் என்னிடம் 2.5 கோடி ருபாய் மட்டுமே கொடுத்தார். மீதிப் பணத்துக்கு அவர் கொடுத்த செக்குகள் பணம் இல்லாமல் திரும்பி விட்டன. ஏமாற்றப்பட்ட செக்குகளை கோர்ட்டில் கொடுத்து இருக்கிறேன். '3’ பட ஆடியோ உரிமையை ஏற்கெனவே சோனி நிறுவனத்துக்கு விற்றுவிட்டோம். இது ஹைதராபாதில் ஆடியோ விழா நடத்திய நட்டி குமாருக்கு நன்றாகவே தெரியும். ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் பி.லிட். நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் உரிமை எனக் கும், என் மகள் விமலகீதாவுக்கும் மட்டுமே உண்டு. அப்படித்தான் '3’ படத்தின் தெலுங்குப் பட ஒப்பந் தத்தில் கையெழுத்துப் போட்டு இருக்கிறோம். இதற்குத் துளியும் தொடர்பு இல்லாத ரஜினி சாரிடமும் ஐஸ்வர்யாவிடமும் நஷ்டஈடு கேட்பேன் என்று நட்டி குமார் பேசுவது என்ன நியாயம்? ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்தார் என்பதற்காக, கமல் சார் வீட்டு வாசலிலும் போய் நிற்பார் போலிருக்கிறது.

நட்டி குமார் மட்டும் அல்ல... தமிழ்நாட்டில் '3’ படத்தை விலைக்கு வாங்கியவர்களில், நான்கு பேரைத் தவிர அத்தனை பேருமே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட தொகையில் பாதியைக்கூட தராமல்தான் படப்பெட்டியை எடுத்துச் சென் றார்கள். அதிலும் ஒருவர், 30 லட்ச ரூபாய்க்குக் கையெழுத்து போடாத செக் கொடுத்து ஏமாற்றியது உச்சக்கட்ட கொடுமை. அதனால் படத்தை ரிலீஸ் செய்வதற்கு முதல்நாள் ராத்திரி 2 மணிக்கு பிபி எகிறிப்போய், ஜெமினி லேப்பில் 3 லட்ச ரூபாய் டெஃபிசிட்

ஐஸ்வர்யாவுடன் பிரச்னைக்குக் காரணம் ஸ்ருதியா?

வைத்துவிட்டுத்தான் வந்தேன்.

எங்கள் படத்துக்கும் ரஜினி சாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உலகத்துக்கே நன்றாகத் தெரியும். ஆனாலும், ரஜினி எதற்காக அறிக்கை வெளியிட்டார் என்பது எனக்கு இன்றுவரை புரியாத புதிராக இருக்கிறது''.

''தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இடையில் என்னதான் பிரச்னை?''

''இந்த உலகத்தில் சண்டையே போடாத ஒரு புருஷன் பொண்டாட்டியைக் காட் டுங்க பார்ப்போம். குடும்பம் என்றால் 24 மணி நேரமும் கொஞ்சிக்கிட்டேதான் இருப் பாங்களா? தனுஷ் - ஐஸ்வர்யா சண்டை போட்டுப்பாங்க. அடுத்த நிமிஷமே எல்லாத்தையும் மறந்துட்டு ஒண்ணாச் சிரிப்பாங்க. நானும் என் மனைவியிடம் எத்தனையோட தடவை கோபிச்சுட்டுப் போய் இருக்கேன். ராத்திரிக்கு வீட்டுக்கு வராமல் வெளியில் சுத்தி இருக்கேன். ஊடல் இல்லாத உறவுகளே இல்லை.

அதுமாதிரிதான் தனுஷ் - ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவதும் தவறு. ஸ்ருதியுடன் தனுஷ் நெருக்கமாக நடிப்பதைப் படமாக்கியபோது மருமகளுக்குக் கோபம் வந்திருக்கிறது. ஒரு டைரக்டரா அந்தக் காட்சி ஒகே. ஆனா, மனைவியா அந்த நெருக்கத்தைப் பார்த்துக் கோபமாகிட்டாங்க. அதுக்காக வீட்டுல தினம் தினம் சண்டை போட்டுக்கிட்டா இருப்பாங்க. அன்பு இருக்குற இடத்துலதான் சண்டை வரும். அதுபோல தனுஷ§க்கும் மருமகளுக்கும் மனஸ்தாபம் வரும், போகும்''

''ஆனால், தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிக்கிறாராமே?''

''எந்த வீடு என்று எனக்குக் காட்டுங்கள், நானும் பார்க்க வேண்டும். தனுஷ் மட்டும் அல்ல, செல்வா, மகள்கள் எல்லோருமே தனித்தனி வீட்டில்தான் வசிக்கிறார்கள். தனுஷ் இருக்கும் வீட்டில் அவரோடு ஐஸ் வர்யாவும் அவர்களது குழந்தைகள் யாத்ரா, லிங்கா... எல்லோரும் இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் தனுஷ், செல்வா, என் மகள்கள் எல்லோரும் குடும்பத்தோடு மாமல்லபுரம் அருகில் இருக்கும் ஃபார்ம் ஹவுஸில் சந்தோஷமாய் தங்கிவிட்டு வந்தார்கள். இப்போதுகூட ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்துக்காக தென் ஆப்பிரிக்காவுக்குத் தனுஷ் தனியாகச் செல்லவில்லை. ஐஸ்வர்யா, யாத்ரா, லிங்கா என்று குடும்பத்தோடுதான் போயிருக்கிறார்கள். என் மனைவி விஜயலட்சுமி குடும்பத்தைக் கட்டுக் கோப்பாக நடத்தி வருகிறார். அவர் அன்புக்கு எல்லோருமே அடிமையாக இருக் கிறோம். அதனால், என்னுடைய அன்பான குடும்பத்தை எந்தக் கொம்பனாலும் உடைக்க முடியாது!''

- எம். குணா