Published:Updated:

ஐந்தாம் வகுப்புத் தேறியவர், ஐ.டி. மினிஸ்டர்?

முக்கூர் சுப்பிரமணியனுக்கு எதிராக மல்லுக்கட்டு

பிரீமியம் ஸ்டோரி
ஐந்தாம் வகுப்புத் தேறியவர், ஐ.டி. மினிஸ்டர்?

'ஐந்தாம் வகுப்பு மட்டுமே தேறிய, சரியாக எழுதப் படிக்கத் தெரியாத, பல வழக்குகளில் சிக்கிய ஒருவர் தமிழ்நாட்டின் அமைச்சராக, அதுவும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சராக இருப்பது தமிழர்களுக்கே தலைக்குனிவு. அவரை உடனே பதவியில் இருந்து தூக்கிவிட்டு, கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும்’ என்று, அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் மீது திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க-வினரே புகார் மனுக்களைத் தட்டி​ விடுகிறார்கள்.

 இதுகுறித்து, மாவட்டத்தின் முக்கிய அ.தி.மு.க. புள்ளிகளிடம் பேசியபோது, ''முக்கூர் சுப்பிரமணியன் அமைச்சராகவே இருக்க​வே தகுதி இல்லாதவர். பி.ஏ. படித்து இருப்பதாக கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு எல்​லோரையும் ஏமாற்றி இருக்கிறார். தமிழக அரசின் இணையதளத்தில், இவர் பி.ஏ. படித்ததாகவே குறிப்பிட்டு இருந்தார்கள். இப்போது, உண்மை வெளியே கிளம்பியதும், பி.ஏ. அடைப்புக் குறிக்குள் போடப்பட்டு உள்ளது. அவர், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராகஇருந்த 2009-ம் ஆண்டு, நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்

பட்டது. அப்போது, அவர் தாக்கல் செய்த அஃபிடவிட்டில், 6-ம் வகுப்பு தோல்வி அடைந் திருப்​பதாகக் கூறி இருந்தார்.

##~##

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்​கழகத்தில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்று வருவதாக, அஃபிடவிட்டில் குறிப்பிட்டு இருக்கிறார். உண்மை​​யில் அவருக்கு நாலு வரிகள் எழுதவோ, படிக்க​வோ தெரியாது. பிறகு எப்படி பி.ஏ. பயில முடியும்?

அவர் மீது 1986 முதல் 1993 வரை ஆற்காடு, ராணிப்​பேட்டை, வாழப்பந்தல் போன்ற காவல் நிலையங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. வாழப்பந்தல் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கில் கிரைம் நம்பர் 52/86-ல் 379 ஐ.பி.சி. செக்ஷனில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. புகார் கொடுத்தவர் அப்போ​தைய ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத். இந்தப் புகார் தவறு என்றால், புகார் கொடுத்தவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கலாமே, ஏன் இவர் செய்யவில்லை?  

ஐந்தாம் வகுப்புத் தேறியவர், ஐ.டி. மினிஸ்டர்?

அதுபோல கடந்த 93-ம் ஆண்டு இவரது வீட்டில் குடி இருந்த ப்ளஸ் டூ மாணவி​யான ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து விட்டார். அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் பேசி, இர​வோடு இரவாக சடலத்தை எரிக்கச் சொல்லி இருக்கிறார். அவசரகதியில் எரிக்கச் சொன்னது ஏன் என்பது இன்றுவரை புரியாத புதிர். அதற்காக ஊர்ப்பஞ்​சாயத்தில்கூட இவ ருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதப் பணத்தை, இவரது அண்ணன் செலுத்தி இருக்கிறார்.

அவர் அமைச்சரானதில் இருந்து இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கிறார்கள். வாய்க்கு வந்தபடி வசைபாடுவதால், வெளியில் சொல்ல முடியாமல் கொதித்துப்போய் இருக்கிறார்கள். பல்வேறு குற்றப்பின்னணி உள்ள இவர், தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்த அஃபிடவிட்டில், அவர் மீதான வழக்கு பற்றி தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் கல்வித் தகுதியையும் தவறாகக் கொடுத்து அம்மாவையும் ஏமாற்றி இருக்கிறார். அதனால்தான் இவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று புகார் அனுப்பி வரு​கிறோம். அம்மா விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது'' என்று ஆவேசத்​துடன் பேசி​னார்கள்.

ஐந்தாம் வகுப்புத் தேறியவர், ஐ.டி. மினிஸ்டர்?

''நீங்கள் பி.ஏ. படிக்க​வில்லை; பொய்​யான தகவல் கொடுத்திருப்​​ப​தாகச் சொல்​றார்களே..?'' என்று முக்கூர் சுப்பிர​மணி​யனிடம் கேட்டோம்.

ஐந்தாம் வகுப்புத் தேறியவர், ஐ.டி. மினிஸ்டர்?

''நான் பி.ஏ. படித்ததற்கான ஆதாரங்​கள் இதோ இருக்​கின்றன'' என்று ஃபீஸ் கட்டிய ரசீது, ஐ.டி. கார்டு, ஹால் டிக்கெட் ஆகியவற்றை நம்மிடம் காட்டியவர், ''என் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சிலர் என் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்'' என்றார். தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் படிப்பதற்​காக அவருக்கு அடையாள அட்டை (2009 - 2011) என்று குறிப்பிட்டுத் தரப்பட்டு உள்ளது. படிப்பதற்காக ரூ 970 கட்டியதற்கான ரசீது வைத்துள்ளார். அவர் நம்மிடம் காட்டிய மார்க் சீட்டில் பெரும்பாலான பாடங்கள் ஃபெயில் என்று இருந்தது. ஆனால், டிகிரி வாங்கிய சான்றிதழ் அவரிடம் இல்லை. ஆனால், வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜெயலலிதா, செய்யார் தொகுதி வேட்பாளர் 'முக்கூர் சுப்பிரமணியம் பி.ஏ.’ என்று அறிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்த முக்கூர் சுப்பிரமணியம், கல்வித் தகுதி என்ற இடத்தில் 'பி.ஏ. இரண்டாம் ஆண்டு’ என்று குறிப்பிட்டு உள்ளார். நம்மிடம் காட்டிய சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணியம் பணம் செலுத்தியுள்ளார். டிகிரி பெறவில்லை.  

கட்சிக்காரர்கள் கூறிய வழக்குகள் பற்றி கேட்டோம். ''என் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்​பட்டது உண்மைதான். அது மிஸ்டேக் ஆஃப் ஃபேக்ட் (பொய்யான குற்றச்சாட்டு) என்று, விசாரணையில் தெரிந்ததும் எஃப்.ஐ.ஆர். குளோஸ் செய்யப்பட்டுவிட்டது. மற்ற அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் முழுக்க முழுக்கப் பொய்யானது'' என்றார் அழுத்தம் திருத்தமாக.  

அம்மா கோர்ட்டில் என்ன தீர்ப்போ?

- கோ.செந்தில்குமார், படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு