Published:Updated:

அப்துல் கலாமின் வல்லரசுக் கனவும் இந்தியாவின் பசித்த வயிறுகளும்

அப்துல் கலாமின் வல்லரசுக் கனவும் இந்தியாவின் பசித்த வயிறுகளும்

பிரீமியம் ஸ்டோரி

ரா.பி.சகேஷ் சந்தியா, ரியோ பதிப்பகம், 107/1, 14-வது குறுக்குத் தெரு, சவகர் தெரு,

அரசு அலுவலர் 'அ’ குடியிருப்பு, திருநெல்வேலி-7. விலை

அப்துல் கலாமின் வல்லரசுக் கனவும் இந்தியாவின் பசித்த வயிறுகளும்

40

##~##

'இந்தியா வல்லரசு ஆக வேண்டும்’ - இது, பிரதமர் முதல் பட்டிமன்ற, அரட்டை அரங்கப் பேச்சாளர்கள் வரை எல்லோரும் சொல்வது. வல்லரசு வேண்டுமா... நல்லரசு வேண்டுமா என்பதே சகேஷ் சந்தியா எழுப்பும் கேள்வி!

'வல்லரசு நாடு என்பது பலருக்கு மாயையாகவும், சிலருக்கு ஒரு வகை போதையாகவும் உள்ளது. வல்லரசு நோக்கமே பலவீனமான நாடுகளை அடிமைப்படுத்திச் சுரண்டுவது, ஒடுக்குவது, படையெடுத்து ஆக்கிரமிப்பது, எதேச்சதிகார அரசுகளுக்குத் துணை நிற்பது. மறைமுகக் காலனிகளாக வைத்திருப்பது மற்றும் கடன் அளித்து அந்த நாட்டின் சுயசார்புப் பொருளாதாரத்தை அழிப்பது போறவைதான். இதனால் வல்லரசு நாடு என்பதே உலக மக்களால் அருவருப்புடன் வெறுக்கப்படுகிறது’ என்று, அமெரிக்காவை வைத்து பல் வேறு உதாரணங்கள் மூலம் வாதிடும் நூலாசிரியர், 'உலகம் முழுவதும்

அப்துல் கலாமின் வல்லரசுக் கனவும் இந்தியாவின் பசித்த வயிறுகளும்

வெறுக்கக்கூடிய வல்லரசுக் கருத்தியல், இந்திய மக்களின் கருத்தியலாக எப்படி மாறியது?’ என்றும் கேள்வியை எழுப்புகிறார்.

எவ்வளவு அணுகுண்டு வைத்திருக்கிறோமோ அதுவே வல்லரசு அந்தஸ்தை வாங்கிக் கொடுக்கும் என்று பலரும் சிறுபிள்ளைத்தனமாக நினைக்கும் காலம் இது. பக்கத்து நாட்டையோ அடுத்திருக்கும் நாட்டையோ, நாம் எத்தனை அணுகுண்டுகள் வைத்திருக்கிறோம் என்பதைப் பட்டியலிட்டுப் பதற வைப்பதா அல்லது அடுத்தவரிடம் கையேந்தி கடனுக்குக் காத்திருக்காத தலைமையும், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆனபிறகும், அடிப்படைத் தேவைகளைக்கூட பெறாத குடும்பத் தலைவர்கள் இருக்கும் நாட்டின் நிலைமையை மாற்றுவதா? இந்த இரண்டில் எது சரி என்பது குறித்துத் தேர்ந்தெடுப்பதில் அரசியல்வாதிகளுக்குக் குழப்பம் வரலாம். அப்துல் கலாமுக்கு வரலாமா?

வல்லரசுக் கனவை தமிழகத்தில் வளர்த்து​ விட்டவர்களில் ஒருவராக அப்துல் கலாம், இந்தப் புத்தகத்தில் புகார் கூறப்படுகிறார். 'ஆளும் வர்க்கங்களின் ஆசைக்கு ஏற்ப கதாநாயகன் அப்துல் கலாம் பரப்பியதுதான் இந்த வளர்ச்சி சித்தாந்தம். இயல்பாக அவரிடம் அமைந்து இருந்த ஆளும் வர்க்கங்களின் கருத்தியலை அப்படியே இளைஞர்​களின் கருத்தியலாக, கனவாக மாற்றுவதற்குப் பயன் படுத்துகிறார்’ என்கிறார் சகேஷ் சந்தியா.

அப்துல் கலாம் குறித்து அமர்த்தியா சென் எழுதியது கவனிக்க வேண்டியதாக இருக்​கிறது. பொக்ரான் அணுகுண்டு வெடிப்பைப் பற்றி எழுதிய கலாம், 'எங்களது கால்களுக்கு அடியில் பூமி இடி முழக்கமிட்டதை நான் கேட்டேன். இது எழில்மிகு அழகுக் காட்சியாக இருந்தது’ என்றாராம். இதைச் சுட்டிக்காட்டிய அமர்த்தியா சென், 'இளகிய மனம் கொண் டவர் கலாம் என்பதை அறிவேன். படுமோசமான இந்தச் சதியை வன்மையாகப் போற்றுவதற்கு பொதுவான கவர்ச்சிதான் காரணம்’ என்று குற்றம் சாட்டினார். அப்துல் கலாம் அறிவும் பொதுக் கவர்ச்சிக்கு பலியானதுதான் விநோதம்.

'அணுவால், ஆலையால் மேகம் செத்தது.

பொழிந்த மழையும் அமிலமாய்ப் பொய்த்தது.

அத்தனை அழிவும் யாரால்?’ - என்று கலாம் எழுதிய கவிதை மூலமே கலாமை விமர்சிக்கும் புத்தகம்!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு