Published:Updated:

`வழிப்பறிப் பணத்தில் சொத்து; தங்க நகைகள்!' -கோவைக்கு அதிர்ச்சி கொடுத்த 2 கொள்ளையர்கள்

வழிப்பறி கொள்ளையர்கள்
வழிப்பறி கொள்ளையர்கள்

கோவையில் பல்வேறு வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் நெகமம் போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொள்ளாச்சியை நோக்கி கேடிஎம் டியுக் பைக்கில் வந்த இரண்டு பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கொள்ளையர்கள்
கொள்ளையர்கள்

பைக்கில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சூலூர் வலசுபாளையத்தில் நடந்து வந்த பெண்ணிடம் கத்தியைக் காண்பித்து 2 சவரன் தங்கச் செயினைப் பறித்ததாகக் கூறியுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கிஷோர், தஞ்சாவூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

கொள்ளையர்கள்
கொள்ளையர்கள்

காரமடையில் நடந்துசென்ற பெண்ணிடம் 6 சவரன் தங்கச் செயின், பெரியநாயக்கன்பாளையம் அமஞ்சி நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் தங்க செயின் பறிப்பு, செல்வகணபதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகைகள் கொள்ளை என்று இவர்கள் 14-க்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

`பகலில் கஞ்சா விற்பனை... இரவில் வழிப்பறி!’ - நெல்லை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்கள்

அவர்களிடமிருந்து ஒரு கார், இரண்டு பைக்குகள், 80 சவரன் நகைகள், ரூ.70,000 ரொக்கம் என்று ரூ.25 லட்சம் மதிப்பிலான திருட்டுச் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

கொள்ளையர்களுடன் தனிப்படை போலீஸ்
கொள்ளையர்களுடன் தனிப்படை போலீஸ்

கோவை மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைப் பிடிப்பதற்காக, தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இரண்டு முக்கியத் திருடர்களைப் பிடித்த தனிப்படையை, கோவை காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.

அடுத்த கட்டுரைக்கு