Published:Updated:

தூத்துக்குடி: கௌதாரிப் பறவைகளை வேட்டையாடிய 2 சிவில் இன்ஜினீயர்கள் கைது... துப்பாக்கிகள் பறிமுதல்!

கௌதாரிகளை வேட்டையாடிய இருவர்

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக கௌதாரிப் பறவைகளை வேட்டையாடிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி: கௌதாரிப் பறவைகளை வேட்டையாடிய 2 சிவில் இன்ஜினீயர்கள் கைது... துப்பாக்கிகள் பறிமுதல்!

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக கௌதாரிப் பறவைகளை வேட்டையாடிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Published:Updated:
கௌதாரிகளை வேட்டையாடிய இருவர்

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகிலுள்ள அரசன்குளம் கிராமத்தைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. துப்பாக்கியால் சுடும் சத்தம் தொடர்ந்து கேட்கவே, அந்த கிராம மக்கள் குளத்தூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். இதனையடுத்து குளத்தூர் காவல் நிலைய போலீஸார் காட்டுப் பகுதியில் தீவிரமாகச் சோதனையிட்டனர்.

வேட்டைக்குப் பயன்படுத்திய துப்பாக்கிகள்
வேட்டைக்குப் பயன்படுத்திய துப்பாக்கிகள்

நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து போலீஸாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் துப்பாக்கியுடன் இரண்டு பேர் வந்துள்ளனர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன், அசோக் எனத் தெரியவந்திருக்கிறது. இருவரும் சிவில் இன்ஜினீயர்கள். அவர்கள் வந்த காரைச் சோதனையிட்டதில் சுட்டுக்கொல்லப்பட்ட ஏழு கௌதாரிப் பறவைகள் இருந்துள்ளன. அத்துடன் வேட்டைக்குப் பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏழு கௌதாரிகள், இரண்டு துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இருவரிடமும் வனத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தியதுடன், இருவருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

``அரசன்குளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதி மது அருந்தும் இடமாக மாறிவிட்டது. இங்கே கொலை முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளன. அந்தப் பகுதியில் அடிக்கடி கண்காணிப்பில் ஈடுபடுவோம். இந்த நிலையில்தான் காட்டுப்பகுதிக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம், தொடர்ந்து 10 முறைக்கும் மேல் கேட்டிருக்கிறது.

வேட்டைக்குப் பயன்படுத்திய கார்
வேட்டைக்குப் பயன்படுத்திய கார்

காட்டுப்பகுதியில் ஏதோ இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடக்கிறதோ என கிராம மக்கள் அச்சப்பட்டு காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு சொன்னார்கள். நாங்களும் காட்டுப்பகுதியில் தீவிரமாகச் சோதனை நடத்தினோம். போக்குவரத்து போலீஸாரையும் அலர்ட் செய்தோம். அவர்களும் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். சட்டவிரோதமாக கௌதாரிகளை வேட்டையாடிய இரண்டு பேரையும் மடக்கிப் பிடித்தோம்” என்றனர் போலீஸார்.