Published:Updated:

தேனி: பழக்கத்தைக் கண்டித்த உறவினர்கள்! - தற்கொலை முடிவை நாடிய இருவர்

Suicide
Suicide ( Representational Image (Pixabay) )

தகாத உறவைக் கண்டித்த உறவினர்களால், அத்தை, மருமகன் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது சின்ன ஓவுலாபுரம் கிராமம். இங்குள்ள இந்திரா காலனியில் வசித்து வருபவர் முத்து என்கிற அஜித்குமார் (வயது 22). ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார் அஜித்குமார். அதே பகுதியில் வசித்து வருபவர் சசிக்குமார் மனைவி முத்துலெட்சுமி (வயது 30). கணவன் மற்றும் இரு மகன்களோடு வாழ்ந்து வருகிறார். அஜித்குமாருக்கு முத்துலெட்சுமி அத்தை முறை வேண்டும். இருவரும் கடந்த சில ஆண்டுகளாகப் பழகி வந்துள்ளனர்.

Representational Image
Representational Image

இருவரும் பழகிவந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆட்டோ ஓட்ட முடியாமல் வீட்டில் முடங்கிய அஜித்குமார், அடிக்கடி, முத்துலெட்சுமி வீட்டுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட முத்துலெட்சுமியின் கணவர் சசிகுமாரும் உறவினர்களும், அஜித்குமார் மற்றும் முத்துலெட்சுமியைக் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை, முத்துலெட்சுமியின் வீட்டில், அவரது குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். வீட்டினுள், அஜித்குமாரும் முத்துலெட்சுமியும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இருவரையும் உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே, இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியில் இருவரும் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். சம்பவம் அறிந்து வந்த ராயப்பன்பட்டி போலீஸார், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி: `கறுப்பு கவுணி புட்டு; சிவப்பு அவல் உப்புமா!’ - அசத்தும் சித்த மருத்துவ சிகிச்சை மையம்
Suicide
Suicide
Representational Image

முத்துலெட்சுமியின் கணவர் சசிக்குமார் புகார் கொடுத்துள்ளார். முதல்கட்ட விசாரணையில், அத்தையுடன் இருந்த தகாத உறவைக் கண்டித்ததாலே, இருவரும் தற்கொலை செய்துகொண்டதாகவும், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரித்து வருவதாகவும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு