Published:Updated:

டெல்லி: மங்கோலிய புத்த மத குருவிடம் போலீஸ் எனக் கூறி நகை, பணத்தைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

திருட்டு, கொள்ளை

இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த இரண்டு மங்கோலிய சுற்றுலாப்பயணிகளிடம் போலீஸ் எனக் கூறி பணம், நகைகளை அபகரித்த கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

டெல்லி: மங்கோலிய புத்த மத குருவிடம் போலீஸ் எனக் கூறி நகை, பணத்தைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த இரண்டு மங்கோலிய சுற்றுலாப்பயணிகளிடம் போலீஸ் எனக் கூறி பணம், நகைகளை அபகரித்த கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
திருட்டு, கொள்ளை

இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்த இரண்டு மங்கோலிய சுற்றுலாப்பயணிகளிடம் தங்களை போலீஸ் எனக் கூறிக்கொண்டு பணம், நகைகளை அபகரித்த கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

மங்கோலியா நாட்டைச் சேர்ந்தவர் சுலுகு (44). புத்தமத குருவான இவர், தன் நண்பர் ஒருவருடன் சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு வந்திருக்கிறார். பெங்களூருக்குச் சென்ற இருவரும், பின்னர் அங்கிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு இருவரும் ஜன்பத் அங்காடிக்குச் சென்று தங்களுக்குத் தேவைப்பட்ட பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, தங்களை போலீஸ் என அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர், உடைமைகளைப் பரிசோதனை செய்வதுபோல அவர்களின் பையிலிருந்த பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

போலீஸ்
போலீஸ்

அதையடுத்து இது தொடர்பாக சுலுகு, போலீஸில் புகாரளித்தார். அதில், ``ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், ஒரு கடைக்குள் பொருள்கள் எதையோ நான் வாங்கிக்கொண்டிருந்தேன். என் நண்பர் சொட்னோம்தாஜா வெளியேதான் நின்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு பேர் தாங்கள் போலீஸ் எனக் கூறி ஏதோ அட்டையைக் காட்டி சொட்னோம்தாஜா-விடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் சொட்னோம்தாஜாவின் பையை வாங்கி பார்த்துவிட்டுச் சென்றனர். அதன் பிறகுதான் தெரிந்தது, பையிலிருந்த 100 டாலர், 300 யூரோ மற்றும் ரூ.10,500 மதிப்புள்ள நகைகளை அவர்கள் இருவரும் எடுத்துச் சென்றுவிட்டனர் என்று. இரண்டு வாரங்களாக நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம். அவர்கள் பேசிய இந்தி எங்களுக்குப் புரியவில்லை. மேலும், எங்களுக்கு இந்தி தெரியாது. எனவே, எங்கள் பணம், பொருள்களை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், வழக்கு பதிவுசெய்து அந்த விற்பனை அங்காடியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!