Published:Updated:

`ஊரடங்கால் சும்மா இருக்க முடியவில்லை' -முயல் வேட்டைக்குச் சென்ற நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்

சட்ட விரோத மின்வேலி
சட்ட விரோத மின்வேலி

தோட்டத்துக்குள் மான், மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்டவை நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தியதால் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் அருகே ஆ.மருதப்பபுரம் கிராமம் அமைந்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த விஜயன், செல்வகணபதி, கணேசன் ஆகிய மூவரும் சிறுவயது முதலாகவே நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். 

`மின்வேலியில் சிக்கி சுருண்டுவிழுந்த காட்டுயானை!’ - குடியாத்தம் வனப்பகுதியில் `தந்தம்’ வேட்டை?

மூவரும் கேரள மாநிலத்தில் உள்ள இரும்புக் கடையில் பணியாற்றி வந்துள்ளனர். தற்போது கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் மூவருக்கும் வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

`நாய்களைப் பழக்கி கடமான் வேட்டை!'- அதிரடி காட்டிய நீலகிரி  வனத்துறை

உள்ளூரில் சுற்றித் திரிந்த மூவருக்கும் முயல் வேட்டைக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால் காலையிலேயே மூன்று பேரும் அருணாசலபுரம் பகுதியில் உள்ள வயல்வெளிக்குச் சென்றிருக்கிறார்கள். 

உயிரிழந்த செல்வகணபதி
உயிரிழந்த செல்வகணபதி

முயல் வேட்டையில் ஈடுபட்டபோது, ஒரு வயலில் வனவிலங்குகளைத் தடுக்க சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியைத் தாண்டியிருக்கிறார்கள். முதலில் சென்ற செல்வகணபதியை மின்சாரம் தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்ற ஓடிய விஜயனும் மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இருவரும் மின்சார வயரை மிதித்து உயிரிழந்ததால் பதறிப்போன கணேசன் உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் கூறியுள்ளார். அதனால் அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது இருவரும் உயிரிழந்து கிடந்ததால் ஆலங்குளம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். 

முயல் வேட்டைக்குச் சென்று பலியான விஜயன்
முயல் வேட்டைக்குச் சென்று பலியான விஜயன்

சம்பவ இடத்துக்கு வந்த ஆலங்குளம் போலீஸார் மின்சாரத்தைத் தடை செய்து இரு உடல்களையும் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மான், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளைத் தடுக்க வயல்பகுதியில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் கிருஷ்ணபாண்டியனை போலீஸார் கைது செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு