Published:Updated:

கோத்தகிரி காட்டேஜில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி... கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?!

ரேஷன் அரிசிக் கடத்தல்

கோத்தகிரியில் ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

கோத்தகிரி காட்டேஜில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி... கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?!

கோத்தகிரியில் ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
ரேஷன் அரிசிக் கடத்தல்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த ஆடத்தொரை அருகில் இருக்கும் ஒரு தனியார் காட்டேஜிலிருந்து ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக வாகனத்தில் சிலர் ஏற்றிவருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்திருக்கிறது. அதையடுத்து உடனடியாக விரைந்த அதிகாரிகள் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது குறிப்பிட்ட தனியார் காட்டேஜிலிருந்து இரண்டு பேர் அரிசி மூட்டைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதைக் கண்ட அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் அரிசிக் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் போலீஸார் இரண்டு பேரையும் கைதுசெய்தனர். ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கோத்தகிரி காவல் நிலையம்
கோத்தகிரி காவல் நிலையம்

ரேஷன் அரிசிக் கடத்தல் குறித்து நம்மிடம் பேசிய வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், ``கூடலூர்ப் பகுதியைச் சேர்ந்த ஜூனேஷ், கவியரசன் ஆகிய இருவரைக் கைதுசெய்திருக்கிறோம். கார், சரக்கு வாகனம், 48 மூட்டைகளில் இருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. குடிமைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் அந்தத் தனியார் விடுதியைச் சோதனை செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி சாக்குப் பைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ரேஷன் அரிசியை சட்டவிரோதமாகக் கடத்திய கும்பல் மற்றும் விற்பனை செய்த ரேஷன் கடைகளின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். அரிசியைக் கேரளாவுக்குக் கடத்துவதாகத் தெரிகிறது" என்றார்.

ரேஷன் அரிசிக் கடத்தல்
ரேஷன் அரிசிக் கடத்தல்

இது குறித்து பேசிய கோத்தகிரி மக்கள், ``ரேஷன் கடை பணியாளர்கள் முதல் வழங்கல்துறை அதிகாரிகள் வரை இந்த அரிசிக் கடத்தலில் தொடர்பிருக்கிறது. நடவடிக்கை என்ற பெயரில் கூலித் தொழிலாளிகளை கடமைக்குக் கைதுசெய்து கணக்கு காட்டுகிறார்கள். செல்வாக்கைப் பயன்படுத்தி காட்டேஜை கடத்தல் அரிசி குடோனாகவே பயன்படுத்திவருகின்றனர்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism