Published:Updated:

ராமநாதபுரம்: வீட்டுக்குள் எரிந்த நிலையில் இறந்துகிடந்த தாய், மகள் - தற்கொலையா, கொலையா?

எரிந்த நிலையில் இறந்து கிடந்த தாய், மகள்
News
எரிந்த நிலையில் இறந்து கிடந்த தாய், மகள்

தாயும் தங்கையும் எரிந்து சாம்பலாகி, எலும்புக்கூடாகக் கிடந்திருக்கின்றனர். அதைக் கண்டு அதிர்ந்துபோனவர் கதறி அழுதார்.

மண்டபம் ரயில் நிலையம் எதிரிலிருக்கும் மீனவர் குடியிருப்பில் 58 வயதான காளியம்மாள் வசித்துவந்தார். கணவரை இழந்த இவர் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவந்தார்.

காளியம்மாள்
காளியம்மாள்

காளியம்மாளுடன் அவரின் 33 வயது மகள் மணிமேகலையும் வசித்துவந்தார். இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திறக்கப்படாமலேயே இருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதனால், அக்கம் பக்கத்தினர், காளியம்மாளின் மற்றொரு மகள் சண்முகப்பிரியாவுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, சண்முகப்பிரியா உடனடியாக சென்று வீட்டைத் திறந்து பார்த்திருக்கிறார்.

மணிமேகலை
மணிமேகலை

அங்கு தாயும் தங்கையும் எரிந்து சாம்பலாகி, எலும்புக்கூடாகக் கிடந்திருக்கின்றனர். அதைக் கண்டு அதிர்ந்துபோனவர், கதறி அழுதார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இது தொடர்பாக மண்டபம் போலீஸாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, ராமநாதபுரம் எஸ்.பி உத்தரவின் பேரில் இருவரும் கொலை செய்யப்பட்டார்களா, தற்கொலை செய்துகொண்டார்களா?, இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது பற்றி மண்டபம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்துவருகிறார்கள்.