Published:Updated:

விஜிலென்ஸ் அதிகாரிகள்போல் நகைக்கடைக்குள் நுழைந்த அழகுநிலையப் பெண்கள் - போலீஸில் சிக்கவைத்த ஊழியர்கள்

மோசடியில் ஈடுபட முயன்ற பெண்கள்

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்போல நடித்து நகைக்கடையில் 10 சவரன் தங்கச் சங்கிலியை அபகரிக்க முயன்ற அழகுநிலையப் பெண்கள் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விஜிலென்ஸ் அதிகாரிகள்போல் நகைக்கடைக்குள் நுழைந்த அழகுநிலையப் பெண்கள் - போலீஸில் சிக்கவைத்த ஊழியர்கள்

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்போல நடித்து நகைக்கடையில் 10 சவரன் தங்கச் சங்கிலியை அபகரிக்க முயன்ற அழகுநிலையப் பெண்கள் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
மோசடியில் ஈடுபட முயன்ற பெண்கள்

தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஜவுளிக்கடையும், அதனுடன் இணைந்த நகைக்கடையும் இருக்கின்றன. டிப்டாப் உடையணிந்த இரண்டு பெண்கள் இந்த நகைக்கடைக்குள் நுழைந்தனர். சுமார் 30 நிமிடங்கள், தங்கச் சங்கிலிகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அவற்றில், 10 சவரன் மதிப்புள்ள ஒரு தங்கச் சங்கிலியை தேர்வுசெய்துள்ளனர். கடையின் ஊழியர்களிடம் , “நாங்க விஜிலென்ஸ் ஆபீஸர்ஸ். உங்க கடை முதலாளி எங்கே... நாங்க அவங்களைச் சந்திக்கணும்” எனக் கேட்க, கடையின் மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன் என்பவர் அந்த இரண்டு பெண்களிடம் பேசியிருக்கிறார்.

``ஏரலில் உள்ள உங்களோட கடை மேல புகார் வந்திருக்கு. நாங்க ரெய்டு நடத்தினா உங்க கடையோட பேரு கெட்டுப்போகும். நாங்க செலக்ட் பண்ணிவெச்சுருக்குற நகைகளை எங்களுக்குக் கொடுத்துடுங்க. இல்லைன்னா நடக்குறதே வேற” எனக் கூறியுள்ளனர் அந்தப் பெண்கள்.

மத்தியபாகம் காவல் நிலையம்
மத்தியபாகம் காவல் நிலையம்

``விரும்பும் நகைகளோட விலையைக் குறைத்துக்கொள்ளச் சொல்வார்களே தவிர இதுவரையில் யாரும் நகைகளை இனாமாகக் கேட்டதில்லை” என மேற்பார்வையாளர் சிவராம கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ``உங்ககிட்ட நாங்க விளக்கம் சொல்லவேண்டிய அவசியமில்ல. உங்க முதலாளியைக் கூப்பிடுங்க” என மீண்டும் அவர்கள் சொல்ல, சந்தேகமடைந்த மேற்பார்வையாளர், இருவரின் ஐ.டி கார்டுகளைக் கேட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், ஒருவர் மட்டும் ஐ.டி கார்டைக் காட்டியிருக்கிறார். ``முதலாளியை வரச் சொல்றோம்” எனச் சொல்லிவிட்டு, இரண்டு பேரையும் தனியாக அமரவைத்துவிட்டு ஊழியர்கள் அவர்களுக்குக் குடிப்பதற்காக கூல் டிரிங்க்ஸ் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் கடையின் மேற்பார்வையாளர், மத்தியபாகம் போலீஸாருக்கு போனில் தகவல் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து, மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் சில போலீஸார் நகைக்கடைக்கு வந்து அந்த இரண்டு பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஏரலைச் சேர்ந்த பாபி என்ற ராஜலெட்சுமி, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள பெரிய கடையைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பது தெரிந்தது.

கைது
கைது

அழகுக்கலை நிபுணர்களான அவர்கள் இருவரும் விஜிலென்ஸ் அதிகாரிகள்போல் நடித்து தங்க நகைகளை அபகரிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இதில், பாபி என்ற ராஜலெட்சுமி மீது ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி காவல் நிலையத்தில் ஏற்கெனவே மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. விஜிலென்ஸ் அதிகாரிகள்போல நடித்து மோசடியில் ஈடுபட முயன்ற பெண்களை சமயோஜிதமாகச் செயல்பட்டு போலீஸாரிடம் பிடித்துக்கொடுத்த கடையின் ஊழியர்களை போலீஸார் பாராட்டினர்.