Published:Updated:

``அல்தாஃப் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான்; போலீஸிடம் கூறுங்கள்!" - 2020-ல் கடிதமெழுதிய ஷ்ரத்தா

அல்தாஃப் பூனாவாலா - ஷ்ரத்தா வால்கர்

``போலீஸிடம் இதை சொல்லுமளவுக்கு எனக்குத் தைரியமில்லை. ஏனெனில் அவன் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறான்." - ஷ்ரத்தா வால்கர் கடிதம்

``அல்தாஃப் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான்; போலீஸிடம் கூறுங்கள்!" - 2020-ல் கடிதமெழுதிய ஷ்ரத்தா

``போலீஸிடம் இதை சொல்லுமளவுக்கு எனக்குத் தைரியமில்லை. ஏனெனில் அவன் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறான்." - ஷ்ரத்தா வால்கர் கடிதம்

Published:Updated:
அல்தாஃப் பூனாவாலா - ஷ்ரத்தா வால்கர்

சமீபத்தில் நாட்டையே உலுக்கிய சம்பவம், லிவ்-இன் பார்ட்னர் அல்தாஃப் பூனாவாலாவால் ஷ்ரத்தா வால்கர் என்ற பெண் கொலைசெய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் பல பகுதிகளில் வீசப்பட்டதுதான். ஷ்ரத்தா கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு முன்பே கொலைசெய்யப்பட்டிருந்தாலும், இப்போதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் அல்தாஃப் பூனாவாலாமிடருந்து நாளுக்குநாள் வெளிவரும் வாக்குமூலங்கள் பெரும் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன. இந்தக் கொலையை கடும் ஆத்திரத்தில் செய்ததாகவும் அல்தாஃப் கூறியிருக்கிறார். அதோடு அல்தாஃப்புக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும், விரைவில் அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அஃப்தாப் பூனாவாலா - ஷ்ரத்தா
அஃப்தாப் பூனாவாலா - ஷ்ரத்தா

இந்த நிலையில் தற்போது போலீஸ் விசாரணையில், 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ல் ஷ்ரத்தா போலீஸுக்கு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியிருக்கிறது. அந்த கடிதத்தில், ``இன்று அவன் என்னை கொல்ல முயன்றான். அதோடு என்னைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி எறிந்து விடுவேன் என்று மிரட்டுகிறான். அவன் என்னை அடித்து ஆறு மாதங்கள் ஆகின்றன. ஆனால் போலீஸிடம் இதை சொல்லுமளவுக்கு எனக்குத் தைரியமில்லை. ஏனெனில் அவன் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறான்" என ஷ்ரத்தா எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தை பக்கத்துவீட்டு நபருடன் சென்று மகாராஷ்டிராவிலுள்ள வசாய் காவல் நிலையத்தில் புகாராக அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அஃப்தாப் பூனாவாலா - ஷ்ரத்தா
அஃப்தாப் பூனாவாலா - ஷ்ரத்தா
ட்விட்டர்

மேலும் ஷ்ரத்தா இவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டது அல்தாஃப்பின் பெற்றோருக்கும் ஏற்கெனவே தெரியும் என்று டெல்லி போலீஸார் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஷ்ரத்தா இந்த கடிதத்தை தன் சக ஊழியரான கரண் என்பவருக்கு வாட்ஸ்அப்பில் பகிர்ந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது டெல்லி போலீஸ், இதில் வசாய் போலீஸின் நடவடிக்கைகள் என்னவென்று ஆராய்ந்துவருகின்றனர். அல்தாஃப்பின் பெற்றோர் மற்றும் கரணிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.