விருதுநகர் மாவட்டம், தடங்கம் அருகே உள்ள அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் கண்ணன்(56). விருதுநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொழிற்சங்க அணி துணை செயலாளராக உள்ளார். இவர் மனைவி வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியிருக்கு 3 ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். மூத்த மகன் சுப்பிரமணியன் திருமணம் முடிந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் மாரிமுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்து விட்டார். மூன்றாவது மகன் சந்தனக்குமார்(23), கோயம்புத்தூரில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மகள் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் வெளியூரில் தங்கி வேலை பார்த்துவந்த சந்தனக்குமார் கடந்த 3 நாள்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பி வந்தார். விடுமுறையில் வந்திருந்த சந்தனக்குமார், அவருடைய நண்பர் மணிகண்டன்(18) என்பவருடன் ஊர்சுற்றி வந்ததாக தெரிகிறது. நேற்றிரவு 9 மணிக்கு நண்பர் மணிகண்டனுடன் வீட்டிலிருந்து வெளியேச்சென்ற அவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸூக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு வந்த போலீஸார், இறந்து கிடந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,கொலை தொடர்பாக கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கொலை சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``முன்பகை காரணமாக இரண்டு பேரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.ஆர். நகர் ரயில்வே கேட் அருகே மேய்ச்சலிட்ட ஆடுகள் சில காணாமல் போயுள்ளன. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தடங்கம் பகுதியைச் சேர்ந்த பொத்தையன் என்பவரின் உறவினர்கள்தான் எனக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால் ஆடுகளை திருடியது கொலைசெய்யப்பட்ட சந்தனக்குமாரும், மணிகண்டனும்தான் என பொத்தையனும் அவர் மகன் மணிகண்டனும் கூறி வந்துள்ளனர். இதனால் சந்தனக்குமார் தரப்பினருக்கும், பொத்தையன் மகன் மணிகண்டன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த முறை சந்தனக்குமார் ஊருக்கு வந்திருந்தபோது நண்பர் மணிகண்டனுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த பொத்தையன் மகன் மணிகண்டன், 'என்னைப் பார்த்து ஏன்டா சிரிச்சீங்க' எனக்கேட்டு தகராறு செய்துள்ளான். இது பின்னர் கைக்கலப்பாகி முன்பகை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த சந்தனக்குமாரையும், மணிகண்டனையும் பொத்தையன் மகன் மணிகண்டன் தனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவருகிறது. இதுதொடர்பாக மணிகண்டனை பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும் இந்தக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் விரைவில் பிடிப்போம்" என்றனர்.