Published:Updated:

இன்ஸ்டாகிராம் மூலம் வலை... 20 பெண்களை ஏமாற்றிய மாடல்! - சிக்கவைத்த காதலி

கைதான சையத்

இதுவரை 20-க்கும் மேற்பட்ட பெண்களைத் தனது காதல்வலையில் சிக்கவைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் வலை... 20 பெண்களை ஏமாற்றிய மாடல்! - சிக்கவைத்த காதலி

இதுவரை 20-க்கும் மேற்பட்ட பெண்களைத் தனது காதல்வலையில் சிக்கவைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Published:Updated:
கைதான சையத்

சென்னை கீழ்பாக்கம் மில்லர்ஸ் சாலையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் 27 வயதான சையத். இவர் சின்னத்திரையில் துணை நடிகராகவும், மாடலாகவும் இருந்துவருகிறார். இவர் மாடல் மற்றும் நடிகர் என்பதால், பல பெண்கள் இவரை இன்ஸ்டாகிராலமில் தொடர்புகொண்டு பேசிப் பழகிவந்துள்ளனர். அவர்களில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த மூன்று வருடங்களாக இவருடைய ஆசைவார்த்தைகளை நம்பி காதலில் விழுந்து பழகிவந்துள்ளார்.

இந்தச் சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பெண்ணிடம் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார் சையத். சமீபத்தில் சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் அறையெடுத்து இருவரும் ஒன்றாக இருந்தபோது சையத் செல்போனை அந்தப் பெண் யதேச்சையாகப் பார்த்துள்ளார். அப்போதுதான் தன்னைப்போல இன்னும் பல பெண்களிடம் இப்படி ஆசைவார்த்தைகள் கூறி அவர்களையும் சையத் பயன்படுத்திக்கொண்டது தெரியவந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

சையத்திடம் இது எதையும் வெளிக்காட்டாமல் அந்தப் பெண்களைத் தனியாக இன்ஸ்டாகிராலமில் தொடர்புகொண்டு பேசியபோது அவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதைத் தொடர்ந்து அந்த மூன்று பெண்களும் தங்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தங்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் சையத் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதைத் தொடர்ந்து வேப்பேரி அனைத்து மகளிர் காவல்துறை சையத்தைக் கைதுசெய்து, அவரது காரையும் பறிமுதல் செய்தது. மேலும் அவரிடம் விசாரித்த போது, ``நான் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. அனைவரும் சொந்த விருப்பத்துடன்தான் என்னிடம் நெருங்கிப் பழகினார்கள்" எனக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சையது இதுவரை 20 -க்கும் மேற்பட்ட பெண்களைத் தன் காதல் வலையில் சிக்க வைத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருப்பதாக வெளியாகும் தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சையத்
சையத்

கைதுசெய்யப்பட்ட சையத்தை காவல்துறையினர் மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பிறகு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதால், சையத்தை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism