Published:Updated:

இருட்டிலிருந்து வெளிச்சம்

ஜூ.வி. நூலகம்

இருட்டிலிருந்து வெளிச்சம்

ஜூ.வி. நூலகம்

Published:Updated:

அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், பழைய எண் 123 ஏ, புதிய எண் 243 ஏ,

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 5. விலை

இருட்டிலிருந்து வெளிச்சம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

240

##~##

'என் வாழ்க்கையில், சினிமா பெரும்பங்கு வகித்தது. நான் ஒரு சினிமா தயாரிப்புக் கூடத்​தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேரா திருந்தால், இந்தத் தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்​காது. இவற்றில் உள்ள தகவல்கள் அதிகம் அறியப்படாதவை. இந்த நூலே அறியப்படாதவை பற்றித்தான்’ - என்று அசோகமித்திரன் சொல்வது உண்மை. ஏனென்றால், பெரும்பாலான சினிமா புத்தகங்கள்... குறிப்பிட்ட படம் எந்த ஆண்டு வெளியானது, யார் நடித்தது, அதே நடிகர், நடிகையர் முன்னர் நடித்த படங்கள் எவை, அந்தப் படத்தை எடுத்த கம்பெனியின் மற்ற படங்கள் எவை... என்று புள்ளிவிவரங்களைக் கொட்டு​பவையாகவே இருக்கும். அவர்களிடம் இருந்து மாறு​படுகிறார் அசோக​மித்திரன். பழைய பாட்டுப் புத்த​கங்களையோ, சினிமா இதழ்களையோ பக்கத்தில் வைத்துக்கொண்டு எழுதாமல்... தன்னுடைய அனுபவங்களால் எழுதி இருக்கிறார்.

இருட்டிலிருந்து வெளிச்சம்

எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டூடியோவில் பல ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம்தான், இந்த சினிமாக் கட்டுரைகளை எழுதுவதற்கு அசோகமித்திரனுக்கு அடித்​தளம். 'ஒளவையார்’ படத்தை எடுப்பதற்கு வாசன் பட்ட சிரமமும், அதனை வியாபாரம் ஆக்கவும் சமூக அந்தஸ்தைக் கூட்டவும் அவர் எடுத்த முயற்சிகளும் மலைப்பைத் தருகின்றன. புதிய யோசனைகள்தான் அவரை பெரிய அளவுக்கு உயர்த்தின என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்​கிறார். வைஜெயந்தி மாலா- அவரது அம்மா வசுந்தராவின் நளினங்கள்,  பத்மினி, சாவித்திரி ஆகியோரின் கம்பீரமான நடிப்புத் திறமை, சினிமாத்தனம் அற்ற கே.ஆர்.விஜயாவின் இயல்பு, சரிதா, அர்ச்சனா, ஷோ​பா ஆகியோர் காட்டிய யதார்த்தம் என்று, பல்வேறு படங்களின் மூலமாக வரிசைப்​படுத்தி விட்டு, 'இந்த வரிசை வளராமல் போனதற்கு தமிழ் சினிமா கதாநாயகர்கள்தான் காரணம்’ என்று குற்றம் சாட்டுகிறார். 'தனித்திறமை கொண்ட கதாநாயகி வளர்வது தங்களது ஹீரோ பிம்பத்துக்கு ஆபத்தானது என்பதால், எந்த நடிகரும் அதை விரும்புவது இல்லை. எனவேதான் ஒரே மாதிரி​யான படங்கள் உருவாக்கப்படும் துரதிர்ஷ்டத்துக்குள் தமிழ் சினிமா சிக்கிக்கொண்டது’ என்கிறார்.

அதற்காக கலைப்படங்கள்தான் எடுக்க வேண்டும் என்ற கட்சியில் அசோக​மித்திரன் இல்லை. நல்ல நாவல்களைத்தான் சினிமாவாக எடுக்க வேண்டும் என்றும் இவர் வாதிடவில்லை. 'திறமையுடன் எழுதப்​பட்ட ஒரு திரைப்பட ஸ்கிரிப்ட், ஒரு நாவல் போலப் படிப்பதற்குச் சுவை​யுள்​ளதாக இருக்கலாம். ஆனால், நாவலாக எழுதப்பட்டவை எல்லாமே சினிமா இலக்கணத்துக்குப் பொருந்தும் என்று எதிர்பார்க்க முடியாது. மிகச்சில விதிவிலக்குகளைத் தவிர, நல்ல நாவல்கள் நல்ல திரைப்படங்களாக உருவெடுப்பது இல்லை'' என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.

கதாநாயகன், படத் தயாரிப்பாளர் ஆகிய இருவரையும் விட பார்வையாளனுக்கே இந்தக் கவலையைப் போக்கும் சக்தி அதிகம் உண்டு. 'திரைப்படம் ஒரு அசேதனப் பொருள். அதாவது அது தானாக இயங்க முடியாது. அதைப் பார்ப்​போர் ஊட்டும் சக்திதான் அதற்கு உயிரும் பிரக்ஞையும் ஆகும்’ என்கிறார் அசோகமித்திரன்.

சினிமா ரசிகர்களுக்கு அத்தகைய சக்தியை ஊட்டும் கட்டுரைகள் இவை!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism