Published:Updated:

நடிகர்களுக்குக் கிடைக்குமா விலக்கு?

சீரியஸ் ஆகும் 'கறுப்பு' விவகாரம்

நடிகர்களுக்குக் கிடைக்குமா விலக்கு?

சீரியஸ் ஆகும் 'கறுப்பு' விவகாரம்

Published:Updated:
##~##

போலீஸுக்கு புது வேலை கிடைத்துள்ளது... கார் கண்ணாடித் தாள்களைக் கிழிப்பது! 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பேரில், நாடு முழு​வதும் கார் கண்ணாடிகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்குத் தடை இருக்கிறது. அதனால் இப்போது கார் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருக்கும் கறுப்பு ஸ்டிக்கர்களை அகற்றும் வேலையிலும் போலீஸ் இறங்கி விட்டது. இந்தநிலையில், முன்னணி நடிகர்கள் சிலர், 'எங்கள் கார்களுக்கு கறுப்பு ஸ்டிக்கர்கள் அவசியம். எங்களுக்கு விலக்குஅளிக்க வேண்டும்’ என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் முறையிட்டு உள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் வாகனச் சட்டத்தில், வாகனங்களின் ஒவ்வொருபாகமும் எப்படி இருக்க வேண்டும் என்​பதற்கு, தனித்தனி விதிகள் இருக்கின்றன. அதில் விதி எண் 100, கார் கண்ணாடிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகத்தெளிவாக வரையறுத்துள்ளது. அதன்படி, கார்களின் முன் பக்கம் மற்றும் பின்பக்கக் கண்ணாடிகள் 70 சதவிகிதம் வரை தெளிவாகக் காட்சிகள் தெரியும்படி இருக்க வேண்டும். ஜன்னல் கண்ணாடிகள் 50 சதவிகிதம் தெளிவாகக் காட்சிகள் தெரியும் வகையில் இருக்க வேண்டும். கார்களின் கண்ணாடியில் கறுப்பு தவிர, வேறு எந்த வகையான கலர் ஸ்டிக்கர்களும் ஒட்டக் கூடாது.

நடிகர்களுக்குக் கிடைக்குமா விலக்கு?

இந்த நேரத்தில்தான், வி.ஐ.பி-கள், வி.வி.ஐ.பி-கள் விவகாரம் மற்றொரு பிரச்னையாகக் கிளம்புகிறது. ''சட்டத்தில் இவர்களுக்கு என்று தனிச்சலுகை இல்லை. ஆனால், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, யார், யாருடைய கார்களின் கண்ணாடிகளுக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி வழங்கலாம் என்பதை ஒரு குழு அமைத்து முடிவு செய்துகொள்ளலாம். அந்தக் குழுவில் மத்திய, மாநில உள்துறைச் செயலாளர்கள், மாநிலக் காவல்துறைத் தலைவர், காவல்துறை ஆணையர்கள் இடம்பெற வேண்டும்'' என்று இதுகுறித்த நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

'தங்களுக்குச் சலுகை வேண்டும்’ என்று தமிழகத்தின் முக்கியக் கலைஞர்​கள் சென்னை காவல் துறை ஆணையர் திரிபாதியிடம் கோரிக்கை விடுத்தபோது, முறையாக தீர்ப்பு நகல் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாராம். கறுப்பு ஸ்டிக்கர் விவகாரத்தில் யாருக்காவது சலுகை காட்டப்பட்டு இருக்கிறதா என்று போக்குவரத்து காவல்துறை கூடுதல் துணை ஆணையர் சிவானந்தத்தைத் தொடர்பு கொண்டு கேட்டோம். ''இதுவரை யாருக்கும் அதுபோன்ற சலுகை காட்டவில்லை. சலுகை கொடுக்கும்படி எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. காவல்துறை வாகனங்களில் கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததைக்கூட அகற்றி விட்டோம்'' என்றார்.

ஒருவேளை நடிகர்களுக்கு விலக்கு அளிக்கப்​படவில்லை என்றால்... ஏதாவது ஒரு சிக்னலில் நமீதா, நயன்தாராவைப் பார்த்து டிராஃபிக் ஜாம் ஆனால்..?

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism