Published:Updated:

கள்ளச் சந்தையில் ரத்த வியாபாரம்!

நெல்லை டெங்கு அலெர்ட்

கள்ளச் சந்தையில் ரத்த வியாபாரம்!

நெல்லை டெங்கு அலெர்ட்

Published:Updated:
##~##

தென் மாவட்ட மக்கள் குறிப்பாக நெல்லை ஏரியாவாசிகள் நிம்மதியாகத் தூங்கிப் பல நாட்கள் ஆகிவிட்டன. காரணம், டெங்கு காய்ச்சலும், அதனைப் பரப்பும் 'ஏடிஸ்’ வகை கொசுக்களும்தான். 

இந்த நோய் இப்போது அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கி இருப்பதால், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரம் ஆக் கியுள்ளது, மாநில அரசு. நீர்நிலை களில் கொசுமருந்து தெளிப்பது, குடிநீரை இரண்டு நாட்களுக்கு மேல் தேக்கிவைக்காமல் இருப்பது, சிரட்டை, பழைய டயர், பிளாஸ்டிக் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மும்முரமாக நடக்கிறது. ஆனாலும், டெங்கு பாதிப்பால் ஏற்படும் உயிர்ப் பலிகள் எகிறிக்கொண்டே இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கள்ளச் சந்தையில் ரத்த வியாபாரம்!

இந்த நிலவரம் குறித்து நெல்லையில், மருத்துவத் துறையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரிகள் சிலரி டம் பேசினோம். ''தினமும் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இங்கே சிகிச்சைக்காக வருகிறார்கள். நோயின் பாதிப்பு அதிகரித்த பிறகே பலரும் வருவதால் உயிரிழப்பைத் தடுக்க முடியவில்லை.

குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு வந்து சேரக் கூடிய நோயாளிகள் குறித்த தகவல்கள் மட்டுமே வெளியே தெரிகிறது. வயதானவர்களும் நோய்ப் பாதிப்புடன் நிறையவே வருகிறார்கள், சிகிச்சை பலனின்றி இறந்து போகிறார்கள். ஆனால், இது குறித்து முறையான அறிவிப்பு வெளிவருவது இல்லை. உண்மையில் இந்தப் பகுதியில் இறந்த வர்களின் எண்ணிக்கை 100-க்கு மேல் இருக்கும்'' என்று குமுறுகிறார்கள்.

கள்ளச் சந்தையில் ரத்த வியாபாரம்!

இப்போது, நெல்லை அரசு மருத்துவ மனையில் குழந்தைகளுக்காக மூன்று சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்ட பிறகும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் கணிசமாகக் குறைவதால், அவர் களுக்கு உடனடியாக ரத்தம் செலுத்த வேண்டியிருக்கிறது. ரத்தம் கொடுப்பது மட்டுமே இந்த நோய்க் கான மருத்துவம் என்பதால், நெல்லை மாவட்டத்தில் ரத்தத்துக்குக் கடும் தட்டுப்பாடு.

கள்ளச் சந்தையில் ரத்த வியாபாரம்!

ரத்த வங்கிகளில் ஒரு யூனிட் ரத்தம் 3,000 ரூபாயைத் தாண்டிப்போகிறது. குறிப்பிட்ட சில குரூப் ரத்தத்துக்கு கடும் டிமாண்ட் இருப்பதால், என்ன விலை கொடுத்தாவது வாங்கிச் செல்லும் மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலை சாதகமாக்கிக்கொண்ட விஷமிகள், கள்ளச் சந்தையில் ரத்தத்தை அமோகமாக விற்பனை செய்து வருகிறார்கள்.

கள்ளச் சந்தையில் ரத்த வியாபாரம்!

இந்த டெங்குவை வைத்து நெல்லையில் திடீர் அரசியல் ஒன்றும் ஆரம்பம் ஆனது. மத்திய சுகாதாரத் துறையின் சார்பில், டாக்டர் அகர்வால் தலைமையிலான ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தனர். அந்தக் குழுவினர் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு இந்த நோயைக் கட்டுப்படுத்துவதுபற்றி ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தி.மு.க-வினர், மாநிலங்களவை எம்.பி-யான தங்கவேலுவை அழைத்து வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வைத்தனர். அவர், 'டெங்கு பாதிப்பு பற்றி ஏற்கெனவே நான்தான் மாநிலங்கள்அவையில் பேசி, மத்திய சுகாதாரக் குழுவை அனுப்பி வைக்கும்படி கேட்டேன்’ என்று தெரிவித்தார்.

இதனால், கடுப்படைந்த நெல்லை தொகுதி எம்.பி-யான ராமசுப்பு, 'டெங்கு பாதிப்பு பற்றி நான் நாடாளுமன்றத்தில் பேசியதோடு, மத்திய சுகா தாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆஸாத்தை சந்தித்து மத்திய சுகாதாரக் குழுவை அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். அதன்படிதான் இந்தக் குழு வந்திருக்கிறார்கள்’ என்று ஒரே போடாகப் போட்டார்.

ம்... உயிர்களை காப்பாற்றும் விஷயத்தில் கூடவா அரசியல்?

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism