Published:Updated:

''அது வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது!''

''அது வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது!''

''அது வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது!''

''அது வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது!''

Published:Updated:
''அது வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது!''

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மத் ஜான் குறித்து ஒரு கட்டுரை கடந்த 30-05-2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியானது. அது குறித்துக் கூடுதலாக சில விளங்கங்களை, கடிதம் மூலம் நமக்கு அனுப்பி இருக்கிறார் அமைச்சர்.

''சர்ச்சைக்கு உரிய இடம் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது. இந்தச் சொத்தை யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாது. ராணிப்பேட்டை நகருக்குள் திண்டிவனம் - நகரி ரயில்பாதை அமைப்பதால், அந்தப் பகுதியில் உள்ள 70 ஏழை மக்களின் குடிசைகள் அகற்றப்பட்டன. அந்த ஏழை மக்களின் வாழ்விட உதவிக்காக, ராணிப்பேட்டை ஜமாத்தைச் சேர்ந்தவர்கள், ராணிப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட வேப்பூரில் உள்ள வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான இடத்தின் முத்தவல்லி திரு.முனீர் அவர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, அந்த இடத்தில் இந்த ஏழைகள் வீடு கட்டிக்கொள்ள ஒப்புதல் பெற்றுத் தந்தனர். வக்ஃபுவின் முத்தவல்லி அனுமதிக்குப் பிறகு, அங்கு அந்த ஏழைகள் குடிசை போட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலூரைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான இந்த இடத்தை முற்றிலும் தவறான வழியில் தனக்கு உரித்தாக்கிக்கொண்டு ஏதோ அவருக்குச் சொந்தமான இடத்தில் குடிசைகள் போட்டு இருப்பதாக, அன்று ஒரு புகார் கொடுத்து இருக்கிறார். அதில் என் பெயர் கிடையாது. அதற்குப்பிறகு, மீண்டும் ஒரு புகார் மனுவை பிறரின் தூண்டுதலின் பேரில் என் பெயரையும் அதில் இணைத்துக் கொடுத்து இருக்கிறார். மேலும், இந்தக் குடிசைகள் போடும்போது நான் நேரில் சென்று பார்த்ததாகக் குறிப்பிட்டு இருப்பதும் ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டு. நான் அங்கு நேரில் செல்லவும் இல்லை. பார்க்கவும் இல்லை'' என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism