'எங்களுடைய அரசியல் எதிரிகளைச் சுட்டும், குத்தியும், அடித்தும் கொலை செய்திருக்கிறோம். கட்சிக்கு எதிரான துரோகிகளைப்பற்றி ஒரு லிஸ்ட் தயாரித்து, அந்த வரிசைப்படிக் காரியத்தை முடித்திருக்கிறோம். செய்ததை, ரொம்பத் தைரியமாகச் செய்தோம் என்று சொல்வதுதான் மார்க்சிஸ்ட் ஸ்டைல்’ என்று மாவட்டச் செயலாளர் ஒருவர் வெளிப்படையாக வாக்குமூலம் கொடுக்கவே, மிகக்கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது, கேரள மார்க்சிஸ்ட் கட்சி!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ஒஞ்சியம் பகுதியைச் சேர்ந்தவர் டி.பி.சந்திரசேகரன். மார்க்சிஸ்ட்

கம்யூனிஸ்ட் கட்சியில் வெகு துடிப்புடன் செயல்பட்டவர். உட்கட்சிப் பிரச்னையால் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து விலகி புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து, ஒரு நாள் பைக்கில் சென்றுகொண்டு இருந்த சந்திரசேகரனை, நடுரோட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிச் சாய்த்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டது ஒரு கும்பல். 'பழைய பகையை மனதில் வைத்து மார்க்சிஸ்ட் புள்ளிகள்தான் போட்டுத்தள்ளிவிட்ட£ர்கள்’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துவந்த கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியினர், ஆங்காங்கே கூட்டங்களை நடத்தி, தங்களுக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று பிரசாரம் செய்து வந்தனர்.

தொடுபுழா அருகே கடந்த 26-ம் தேதி நடந்த கூட்டத்தில் மைக் பிடித்த இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் எம்.எம்.மணி, இதுவரை கட்சிக்குத் துரோகம் நினைத்த 13 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகப் பேசவே, அதிர்ந்து நிற்கிறது மாநில மார்க்சிஸ்ட் கட்சி.

இந்த விவகாரம் வெடித்ததைத் தொடர்ந்து கடந்த 1982-ம் ஆண்டு முதல் நடந்துள்ள அரசியல் கொலை வழக்குகளை மறுவிசாரணை நடத்த கேரள டி.ஜி.பி. ஜேக்கப் புன்னூஸ் உத்தரவு போட்டுள்ளார். இதுகுறித்துப் பேசும் இடுக்கி மாவட்ட போலீஸ் அதிகாரிகள், ''மணியின் பேச்சை ஆதாரமாகக் கொண்டு ஆரம்ப காலத்தில் நடந்த மூன்று கொலைகள் தொடர்பாக, அவர் மீது தொடுபுழா போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து உள்ளார்கள். ஐ.என்.டி.யு.சி. ராஜகுமாரி, இளைஞர் காங்கிரஸ் உடும்பன், சோலை மண்டலத் தலைவர் பேபி அஞ்சேரி, சின்னக்கானல் மண்டல காங்கிரஸ் தலைவர் நானப்பன் போன்ற கொலை வழக்குகளைத் தோண்டி எடுக்கப்போகிறோம். மணி எங்கள் விசாரணை வளையத்துக்குள் வந்ததும், அத்தனை விஷயங்களையும் வாங்கி விடுவோம்'' என்கின்றனர்.

மணியிடம் பேசினோம். ''நான் அந்த மீட்டிங்கில் பேசியதைத் தவறாகப் புரிந்துகொண்டதுதான் பிரச்னை'' என்றார்.

''வீடியோ பதிவு இருக்கிறதே...'' என்று கேட்க, ''அதைத்தான் சொல்கிறேன். நான் பேசியதின் அர்த்தம் நீங்கள் நினைப்பது அல்ல'' என்று ஜகா வாங்கினார்.

மணியின் பேச்சு நிச்சயம் புலனாய்வு செய்யப்பட வேண்டும்!

- எஸ்.ஷக்தி