Published:Updated:

''அப்பா - மகள் உறவை கொச்சைப்படுத்தும் தியாகு!''

தொடரும் வில்லங்கம்

##~##

தாமரை - தியாகு பிரச்னை இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை. சில பல பஞ்சாயத்துகளுக்குப் பிறகு தியாகு மீண்டும் தாமரையின் வீட்டுக்குத் திரும்பிவிட்டாலும், பிரச்னைகள் துரத்திக்கொண்டே இருக்கின்றன. கடந்த இதழில் வெளியான தியாகுவின் பேட்டியைப் பார்த்து விட்டு அவரது அமைப்பைச் சேர்ந்தவர்கள் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்கள். 'தியாகுவின் விரிவான பேட்டியை ஜூ.வி. இதழில் படித்தோம். அதில் அவர் பல்வேறு உண்மைகளை மறைத்து விட்டார்’ என்பது அவர்களின் குற்றச்சாட்டு. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கதிர் நிலவன் நம்மிடம், ''தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்து தியாகுவை நீக்கிவிட்டோம். இனி, அவருக்கும் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, நேற்று

''அப்பா - மகள் உறவை கொச்சைப்படுத்தும் தியாகு!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பேசி... இன்று எடுத்த முடிவு அல்ல. பல மாதங்களாக அலசி ஆராய்ந்து, இயக்கத்தின் அமைப்புக்குழு ஒன்றுகூடி எடுத்த முடிவு. 

விஜயலட்சுமிக்கும் தியாகுவுக்கும் இருக்கும் உறவைப் பற்றி இங்கே பேசியே ஆக வேண்டும். வீட்டைவிட்டு ஓடி வந்த விஜயலட்சுமிக்கு 'வெற்றிச் செங்கொடி’ என்று பெயரை மாற்றி, தன் கூடவே வைத்துக்கொண்டார் தியாகு. இயக்கத்தின் கூட்டங்களுக்கு எல்லாம் கூடவே அழைத்து வந்தார். வெளியூர் கூட்டங்களுக்குப் போகும்போதும், ஒரே அறையில்தான் இருவரும் தங்குவார்கள். இது எங்கள் அமைப்பில் யாருக்கும் பிடிக்கவில்லை. அப்போதே அவரைக் கண்டித்தோம். 'தாமரைக்கும் எனக்கும் சரிவரவில்லை. நான் தாமரையை விட்டுப் பிரியப்போறேன். இனி வெற்றிச் செங்கொடிதான் கடைசி வரை என்னுடன் இருப்பார். அவளை என் வளர்ப்பு மகளாகத் தத்து எடுக்கப்போகிறேன்’ என்று சொன்னார். தாமரைக்கும் தியாகுவுக்கும் இருக்கும் பிரச்னையில் இயக்கம் தலையிட முடியாது. ஆனால் திருமணமான ஒரு பெண்ணை, கணவனைவிட்டுப் பிரித்துக் கூட்டி வந்து வைத்துக்கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்க

''அப்பா - மகள் உறவை கொச்சைப்படுத்தும் தியாகு!''

மாட்டோம். 'எத்தனையோ பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அடைக்கலம் கொடுக்க, தமிழ்த் தேசிய இயக்கம், அபலைச் சங்கம் கிடையாது’ என்று சொல்லிப் பார்த்​தோம். ஆனால், அவர் கேட்பதாக இல்லை. அதனால்தான் அமைப்பில் இருந்து அவரை நீக்கிவிட்டோம். அவருடன் இருக்கும் நாலு பேரை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் நடத்தி இருக்கிறார். ஆனால், அது செல்லாது. எங்களிடம்தான் மெஜாரிட்டி இருக்கிறது'' என்று ஆக்ரோஷமாகச் சொன்னார்.

இதுவரை இந்த விவகாரம் குறித்துப் பேசாமல் இருந்த தாமரையைச் சந்தித்து வெளிப்​படையான விளக்கத்தைக் கேட்​டோம். ''இப்போது, இயக்க வேலைகளை முடித்து விட்டு தியாகு வீடு திரும்பிவிட்டார். என்னுடன்தான் இருக்கிறார். இப்போதுதான் என் குழந்தை சிரிக்கிறான், சாப்பிடுகிறான். நாடு கடந்த தமிழீழப் பேரவை நியமனங்கள் குறித்துதான் எங்களுக்குள் பிரச்னை வந்தது என்று சிலர்

''அப்பா - மகள் உறவை கொச்சைப்படுத்தும் தியாகு!''

சொல்​கிறார்கள். அது உண்மை அல்ல. நாடு கடந்த தமிழீழப் பேரவையில் எம்.பி-யாக என்னை நியமிப்பது என்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் நான்தான், 'அரசியலில் நேரடியாக ஈடுபடுவது என் நிலைப்பாடு கிடையாது. எந்தக் காலத்திலும் எந்த அமைப்பிலும் எந்தப் பொறுப்பிலும் இருக்கப்போவது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று சொல்லி மறுத்தேன்.

பிறகு அவர்களே, 'இந்தப் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நீங்களும் தியாகுவும் சேர்ந்து பரிந்துரை செய்யுங்​கள்’ என்று கேட்டார்கள். நான் சிலரைப் பரிந்துரைத்தேன். ஆனால் தியாகு, அவரது மகள் சுதா காந்தியைப் பரிந்துரை செய்தது எனக்குத் தெரியாது. இதற்கு மேல் இந்த விவகாரத்தை நான் பேசுவது நாகரிகமாக இருக்காது'' என்று முடித்துக்​கொண்டார்.

தாமரைக்கு  நெருக்கமான நட்பு வட்டாரத்தில் பேசி​னோம். ''தியாகு தன் பேட்டியில், 'விஜயலட்சுமிக்கும் எனக்கும் இருப்பது அப்பா - மகள் உறவு’ என்று சொல்லி இருந்தார். உண்மையில், அப்பா - மகள் உறவைக் கொச்சைப்படுத்திவிட்டார் தியாகு. தாமரையோ, இயக்கத்தில் இருக்கும் தோழர்களோ ஆதாரம் இல்லாமல் எந்த விஷயத்தையும் பேச மாட்டார்கள். விஜயலட்சுமியோடு, தியாகுவுக்கு நெருக்கமான பழக்கம் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் அத்தனையும் தாமரையிடம் இருக்கின்றன. ஆனால், இந்தப் பிரச்னையை மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என்றுதான் மௌனமாக இருக்கிறார்.  

இப்போது இன்னொரு பிரச்னை வெடித்திருக்கிறது. தியாகுவின் முதல் மனைவி லதாவின் மகளான சுதா காந்தி, இயக்கத்தில் இருக்கும் ஒரு பையனைக் காதலிக்கிறார். ஆனால், அந்தப் பையனைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்று சுதாவின் அம்மா லதா கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் தியாகுவோ, அந்தப் பையனுக்குத்தான் சுதாவைக் கல்யாணம் பண்ணிவைப்பேன் என்று சொல்கிறார். தாமரைகூட, 'அவரது அம்மா முடிவுப்படி செயல்படுங்கள்’ என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால், தியாகு யார் சொல்​வதையும் கேட்பதாகத் தெரியவில்லை. இதுவும் குடும்பத்​துக்குள் சிக்கலை உருவாக்கி உள்ளது'' என்று சொன்னார்கள்.

முற்றுப்புள்ளி போட முடியாத அளவுக்கு சிக்கல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது தியாகுவுக்கு!

- கே.ராஜாதிருவேங்கடம்