Published:Updated:

தமிழ்த் தாய்க்கு வந்த சோதனை!

பாடப் புத்தக சர்ச்சை

பிரீமியம் ஸ்டோரி
##~##

மாணவப் பருவத்தில், சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்தி பலரும் குறும்பு செய்வார்கள். சினிமா என்பதை 'மானிசி’ என்று எழுத்துக்களை மாற்றி சங்கேதமாகக் குறிப்பிட்டு விளையாடுவார்கள். சமச்சீர்க் கல்விக்கான பாடப் புத்தகத்தை தயாரித்த ஆசிரியர்களும் எதற்காக அப்படி ஒரு சங்கேத பாஷையைத் தேர்ந்து எடுத்​தார்​கள் என்பது புரியாத புதிர். ஆம், ப்ளஸ் டூ தமிழ்ப் பாடப் புத்தகத்தில், 'தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி’ மற்றும் 'தமிழ்த் தாய் வாழ்த்து’ இரண்டும் தலைகீழாக அச்சடிக்கப்பட்டு இருக்கிறது.   

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ் ஆர்வலரும் பா.ம.க. மாநில துணைச் செயலாளருமான வியனரசு, ''நடப்புக் கல்வி ஆண்டுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுக்கப்​பட்டு இருக்கும் தமிழ்ப் பாடப் புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியும் தமிழ்த்தாய் வாழ்த்தும் தலைமாற்றி அச்சடிக்கப்பட்டு உள்ளன.

தமிழ்த் தாய்க்கு வந்த சோதனை!

கடந்த வருடத்தில், அரசின் அலட்சியத்தால் சமச்சீர்க் கல்விக்கான பாடநூல்களில் பல பக்கங்களைக்

தமிழ்த் தாய்க்கு வந்த சோதனை!

கிழித்தும், சில பக்கங்களை மறைத்தும் குளறுபடி செய்தனர். இந்தமுறை பாடநூல் தயாரிப்புக் குழுவின் அலட்சியத்தால் இதுபோன்ற தவறு நிகழ்ந்து இருக்கிறது. இதுபோதாது என்று இன் னொரு அவமானமும் நிகழ்ந்துஉள்ளது. பாடத் தயாரிப்புக்கானபெயர்ப் பட் டியலில் தமிழ், ஆங்கிலம் கலந்து தங்கள் பெயரைப் பதிவுசெய்து இருக்கிறார்கள் ஆசிரியர் குழுவினர்.  ஆசிரியர்களே இப்படிச் செய்தால், மாணவர்களுக்கு தமிழ்உணர்வு எப்படி வரும்? கல்வியாளர்​களின் இத்தகையப் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாகவே மாணவர்களிடம் ஆங்கில மோகம் அதிகரிக்கிறது. இந்தத் தவறுகள் உடனடியாக சரிசெய்யப்படவில்லை என்றால், தமிழ் உணர்​வாளர்​களைத் திரட்டி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்'' என்றார் வேகமாக.

இதுபற்றி பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ''வழக்கமாக பாடநூல்கள் தமிழகத்தில் அச்சடிக்கப்படும். ஆனால், இந்த முறை ஆந்திராவைச் சேர்ந்த ஒரு அச்சகம் அதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. அதனால், ஹைதராபாதில் பாடநூல்கள் அச்சிடப்பட்டன. பிழை திருத்தும் பணியில் ஏற்பட்ட குளறுபடியால், ஒரு பக்கம் மட்டும் தலை​கீழாக அச்சாகி விட்டது. அதை மறைத்து புதிய பேப்பரை ஒட்ட ஏற்பாடாகி வருகிறது. இவை திருத்திக்​கொள்ளக்கூடிய சிறு தவறுகள்தான்!'' என்றார்கள் அலட்சியமாக.

தமிழ் என்றாலே அலட்சியம்தானோ?!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு