மரீயா பிரிலெழாயெவா (தமிழில்: பூ.சோமசுந்தரம்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்,

41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. விலை

180

விளக்குக் கம்பத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அனைவரும் அதை அதிர்ச்சியுடன் பார்த்தனர். பதைபதைப்புடன் பேசிக்கொண்டனர். கூட்டத்துக்குள் ஒரு சிறுவன் வந்தான். அவனை வித்தியாசமாகவும் ஏக்கமாகவும் பார்த்து வழிவிட்டனர். சுவரொட்டியில் இருந்த வாசகங்களைப் பார்த்ததும் மூச்சிரைத்துப்போனான் சிறுவன். 'ஜார் மூன்றாம் அலெக்ஸாந்தரைக் கொலை செய்ய முயன்ற ஐந்து மாணவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது’ என்று எழுதி இருந்தது. அந்த ஐந்து மாணவர்களில் ஒருவன் பெயர், அலெக்ஸாந்தர் உல்யானா. அந்தச் சுவரொட்டியைப் பார்த்துக்கொண்டு இருந்த சிறுவனின் அண்ணன். அந்தத் தம்பிதான், அடுத்த ஜார் மன்னரை வீழ்த்திய லெனின்!

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி அல்ல.இதுவரை வெளியான வரலாற்றுப் புத்தகங்கள் அனைத்துமே அதைத்தானே சொல்கின்றன. 1905-ம் ஆண்டு தோற்றுப்போன புரட்சி முதல், 1917-ல் வெற்றி பெற்ற புரட்சி வரையிலான ரஷ்யாவில் ஜார் மன்னரை வீழ்த்த விளாதீமிர் இல்யீச் லெனின் என்ற மனிதன் நடத்திய சாகசங்களின் கதைதான் இது.

ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு லெனின் தப்பிச் செல்வதும் அங்கு தலைமறைவாய்ச் சுற்றித் திரிவதும் எந்த சினிமாவுக்கு உள்ளும் அடங்காதது. 'எனக்கு வயதான முதியவர் கெட் அப் போட்டு விடுங்கள்’ என்று அவசரத்துடன் ஒரு 'மேக்கப் மேன்’ முன் லெனின் உட்கார... 'நான் கிழவர்களை இளைஞர்களாகக் காட்டுபவன். உங்களைப் போன்ற இளைஞனை கிழவனாகக் காட்டுவது தவறு’ என்று அவர் லாஜிக் சொல்ல... லெனின் பட்ட அவஸ்தை பரிதாபமாக இருக்கிறது. தலைமறைவு வாழ்க்கையில் கொசுக்கள் படுத்தும்பாட்டை, 'கொடூர அரசாங்கத்தைச் சமாளித்தாலும் இந்தக் கொசுக்களைச் சமாளிப்பது கஷ்டம்’ என்று தடித்துப்போன கைகளைத் தடவியபடி லெனின் ஜோக் அடிக்கிறார்.

லெனினும் - குரூப்ஸ்கயாவும் சந்தித்துப் பேசி நடந்து செல்வதை பலரும் காதலர்களுக்கான உரையாடல் என்றே நினைக்க... ஆட்சியைக் கவிழ்க்கும் காரியங்களுக் கான ரகசியத் தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அது முதல், இறப்புக்கு முன் படுக்கையில்கிடந்த லெனினுக்கு 'பிராவ்தா’ செய்தித்தாளை உரக்கப் படித்துக் காட்டியதுவரை குரூப்ஸ்கயா காதல் பட்டுப்போகாமல் இருந்தது. 'முன்னேறுங்கள். முன்னேறிக்கொண்டே இருங்கள்’ என்று லெனின் அடிக்கடிச் சொல்லும் வார்த்தைகள், இதன் ஒவ்வொரு பக்கத்திலும் எதிரொலிக்கிறது.

புரட்சியாளர்களின் வரலாறு சீரியஸாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? கம்யூனிஸத் தத்துவம், தர்க்கம், தலைமை மோதல்கள்... என எல்லாவற்றையும் வெளியேவைத்துவிட்டு லெனின் என்ற மனிதன் வளர்ந்த கதையை சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் மரீயா. லெனினைப் பற்றியே எத்தனையோ நூல்களை எழுதியவர் இவர். இன்னும் எத்தனையோ பேர் எழுதவும் தகுதியானவரே லெனின்!

- புத்தகன்