Published:Updated:

ஆயுள் தண்டனை என்றால், இனி 30 ஆண்டுகளா?

ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

லகம் முழுவதும் தூக்குத் தண்டனைக்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அதனால், மிகக் கொடூரமான குற்றம் புரிந்தவர்களுக்கும், இப்போது ஆயுள் தண்டனைதான் வழங்கப்படுகிறது. 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டால், நன்னடத்தையைக் காட்டி அரசு உத்தரவு மூலம் ஆயுள் தண்டனையில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்பதுதான் பொதுவான நடை முறை. ஆனால் இப்போது, ''ஆயுள் தண்டனைக் கைதி, குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்'' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லவே, ஆடிப்போய் நிற்கி றார்கள்  தண்டனை பெற்றவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும்! 

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே ரத்தன் பூர் போலீஸ் சரகத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வெளியானது. மீரட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் டெல்லியைச் சேர்ந்த

ஆயுள் தண்டனை என்றால், இனி 30 ஆண்டுகளா?

இளைஞருக்கும் காதல். இருவரும் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறக்கவே, காதலி கர்ப்பம் அடைந்து விட்டார். அதனால், 'உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று வற்புறுத்தி இருக்கிறார்.

'ஹரித்துவாரில் போய் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று காரில் அழைத்துச் சென்றவர், இடையிலேயே, 'கர்ப்பத்தைக் கலைத்துவிடு’ என்று மிரட்டி இருக்கிறார். ஆனால், அதற்கு சம்மதிக்காத அந்தப்பெண், பெற்றோரிடம் உண்மையைச் சொல்லி, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லி இருக்கிறார். ஆத்திரம் அடைந்த காதலனும், உடன் சென்ற இன்னொரு நண்பரும் சேர்ந்து ஜாக்கியால் அந்தப் பெண்ணைத் தாக்கி, ஆசிட் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்த போலீஸ், பலத்த காயங்களுடனும் பாதி எரிந்த நிலையிலும் இருந்த அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். வாக்குமூலம் கொடுத்துவிட்டு, அந்தப் பெண் இறந்து போனார். அதைத் தொடர்ந்து காதலனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். கொடூரமாகக் கொலை செய்த இருவருக்கும் கீழ் கோர்ட்டில் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற அப்பீலில், காதலனுக்குத் தூக்குத் தண்டனையும் நண்பருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சௌகான் மற்றும் இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர், தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையும் மீண்டும் உறுதி செய்து அப்பீல் மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர். அப்போது, ''இருவரும் தூக்குத் தண்டனை பெற்றிருக்க வேண்டும் என்றாலும் சூழ்நிலை காரணமாக நண்பருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நபர் 30 ஆண்டுகள் வரை நிச்சயமாக சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இந்தத் தண்டனையில் எந்தவிதமான தளர்வும் வழங்கப்படாமல் உறுதியாக நிறைவேற்றப்பட வேண்டும்'' என்று தீர்ப்பு வழங்கினர்.

ஆனால், இந்தத் தீர்ப்பு குறிப்பிட்ட வழக்குக்கு மட்டுமே பொருந்தும் என்று பலரும் சொல்கிறார்கள். 'அனைத்து ஆயுள் தண்டனைக் குற்றவாளிகளும் இனி 30 வருடங்கள் நிச்சயமாகச்  சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பதால், மற்றவர்களுக்கு இந்தத் தீர்ப்பு பொருந்தாது என்கிறார்கள். 'இனி வழங்கப்படும் அனைத்து ஆயுள் தண்டனைக்கும் இந்த தீர்ப்பையே மேற்கோள் காட்டி 30 ஆண்டுகள் விதித்து விடுவார்கள்’ என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக் கிறார்கள்.

இந்தக் குழப்பத்தை உச்ச நீதிமன்றம்தான் உடனே தீர்த்து வைக்க வேண்டும்!

- சரோஜ் கண்பத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு