மகளின் காதலை அப்பா தடுத்தார். அப்பா செய்த கொலைகளை மகள் அம்பலப்படுத்தினார். இந்த அதிர்ச்சியான காட்சி இப்போது அரங்கேறி உள்ளது!

சதீஷ், பார்கவி இருவரும் காதலர்கள். அவர்கள் திருமணத்துக்கு பார்கவியின் தந்தை முருகன் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். உடனே உதவி தேடி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காதலர்களைச் சேர்த்துவைக்கும் நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்துபவர்கள், காதல் ஜோடியையும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முருகனையும் அழைத்து நிகழ்ச்சி நடத்தினார்கள். அப்போது, பார்கவி சொன்ன ஒரு தகவல்தான், தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.!

''என்னுடைய தந்தை காதலுக்கு எதிரானவர். எங்களைப் போன்ற ஒரு காதல் ஜோடியைக் கொன்று வீட்டுக்குள் புதைத்து விட்டார்'' என்ற வார்த்தைகளை மிகச்சாதாரணமாகச் சொன்னார். ஆனால் சாதாரணமானதா இது?

இப்போது போலீஸ் இந்த விஷயத்தை விசாரணை செய்து வருகிறது. இதுபற்றி போலீஸார் சொல்வது இதுதான்...

''செஞ்சி அருகே உள்ள நாகலாம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். 15 வருடங்களுக்கு முன், 'நல்லான்பிள்ளை பெற்றாள்’ என்ற கிராமத்துக்குப் பிழைப்பு தேடிப் போனார். அதன் பிறகு குடும்பத்தோடு விழுப்புரம் அருகே உள்ள எம்.குச்சிபாளையத்துக்கு மாறி இருக்கிறார். நல்லான்பிள்ளை பெற்றாளில் முருகனுக்கு நண்பராக இருந்தவர் சேகர். அவரது மகள் லாவண்யா. இவர், சிலம்பரசன் என்ற இளைஞனைக் காதலித்து இருக்கிறார். இவர்களின் காதலுக்கு சிலம்பரசன் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதனால் இருவருக்கும் திருமணம் முடித்து, தனது நண்பர் முருகன் வீட்டுக்கு அடைக்கலமாக அனுப்பி வைத்திருக்கிறார் சேகர்.

லாவண்யா நிறைய நகைகளை அணிந்து வந்திருக்கிறார். அதைப் பார்த் ததும் முருகனுக்கு பேராசை வந்திருக்கிறது. அந்த நகைகளை அபகரிப்பதற்காக லாவண்யா, சிலம்பரசன் இருவரையுமே கொலை செய்து, வீட்டுக்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் புதைத்து விட்டார். தன்னுடைய பெண்ணைத் தேடி சேகர் வந்திருக்கிறார். சேகரை வெளியில் விட்டால் பிரச்னை வரலாம் என்று நினைத்து,

அவரையும் கொன்று வீட்டுக்குப் பின்புறம் புதைத்து விட்டார். சேகரைத் தேடி வந்த மனைவியிடம், 'எல்லோரும் எப்போதோ கிளம்பிப் போய்விட்டார்கள்’ என்று சொல்லி சமாளித்து விட்டார். இந்தச் சம்பவம் நான்கு வருடங்களுக்கு முன் நடந்திருக்கிறது. இந்த சம்பவத்தைத்தான் முருகனின் மகள் பார்கவி இப்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்'' என்கிறார்கள்.

பார்கவி, தன்னுடைய அப்பா மூன்று கொலை களைச் செய்தவர். அதனால் இனி அவருடன் செல்ல மாட்டேன் என்று டி.வி. நிகழ்ச்சியில் கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முருகன், கொலைக் குற்றச்சாட்டு சொல்லப்பட்ட பிறகும் எந்த அதிர்வையும் காட்டாமல் கடைசிவரை நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது ஆச்சர்யமானது.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த ஜீவா, உடனே விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர்தான் முருகனால் கொலை செய்யப்பட்ட சேகரின் மனைவி, லாவண்யாவின் தாய். இவர் புகார் கொடுத்த தகவல் தெரிந்ததும், முருகன் தலைமறைவாகி விட்டார். இந்தப் புகாரை வைத்து முருகன் வீட்டில் தேடுதல் வேட்டை தொடங்கியது போலீஸ். மூன்று உடல்களின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன!

கொலைகளை அம்பலப்படுத்திய பார்கவியிடம் பேசினோம்.

''நான் ப்ளஸ் டூ படிக்கும்போதே சதீஷைக் காதலித்தேன். எனது தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் ஏப்ரல் 14-ம் தேதி வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டி, ஒரு தனியார் டி.வி-யில் காதலர்களைச் சேர்த்துவைக்கும் நிகழ்ச்சியில் நானும் சதீஷ§ம் கலந்து கொண்டோம். அவர்கள் எனது தாய், தந்தையை அழைத்துப் பேசினார்கள். அப்போதுதான் எனது தந்தை செய்த கொலைகள் குறித்துத் தகவல் சொன்னேன். அதன்பேரில், போலீஸார் இப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். என் தந்தை என்னிடமே பல முறை தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அதை எல்லாம் எனது தாய் கண்டுகொள்வதே இல்லை. அதனால்தான் நான் அங்கே இருக்க முடியாமல் தப்பித்து வந்துவிட்டேன்'' என்று அழுதார்.

இத்தனை சிக்கல்களுக்கு இடையிலும் ப்ளஸ் டூ தேர்வில் 1,014 மதிப்பெண்கள் பெற்று இருக்கும் பார்கவி, இப்போது சதீஷ் வீட்டில் இருக்கிறார்.

ஒரு மீடியாவில் நேரடியான சாட்சி ஒருவரே வந்து சொன்ன பிறகுதான் போலீஸார் விசாரணை தொடங்கி இருக்கிறார்கள். மகள் காதலனுடன் ஓடிவிட்டாள் என்றும் கணவன் எங்கோ போய்விட்டார் என்றும் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார் ஜீவா. இன்று பார்கவி சொன்ன பிறகுதான் மூவரும் கொலை செய்யப்பட்டார்கள் என்பதே தெரிய வருகிறது.

இப்படிப் பதிவாகாத குற்றங்கள் இந்த நாட்டில் எத்தனையோ?

- அற்புதராஜ், படம்: ஜெ. முருகன்