பா.ம.க-வினரைப் பாடாய்ப்படுத்தி வரும் சி.வி.சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் படுகொலை விவகாரத்தில், மீண்டும் ஓர் எதிர்பாராத திருப்பம். ஏற்கெனவே, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட ரகு மர்மமான முறையில் இறந்தார். இப்போது, மூன்றாவது குற்றவாளியான விழுப்புரத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டு விட்டார்.

2006-ம் ஆண்டு மே 8-ம் தேதி. தமிழக சட்ட மன்றத் தேர்தல் பரபரப்பாக நடந்த இரவு, ஆதர வாளர்களுடன் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டுமுன் நின்று பேசிக்கொண்டு இருந்தார் சி.வி.சண்முகம். அப்போது, ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் சி.வி.சண்முகத்தைக் கொலை வெறியோடு தாக்க முயல... அங்கு நின்ற கார் ஒன்றின் கீழே படுத்துத் தன்னைக் காத்துக்கொண்டார். அந்த நேரத் தில், சண்முகத்தின் உறவினரும், அ.தி.மு.க. தொண்டருமான முருகானந்தத்தை அந்தக் கும்பல் வெட்டிச் சாய்த்தது. இந்தக் கொலை தொடர்பாக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ராமதாஸின் மருமகன் பரசுராமன், ராமதாஸின் தம்பி சீனுவாசன், பா.ம.க. வேட்பாளர் கருணாநிதி மற்றும் பிரதீபன், ரகு உட்பட பா.ம.க-வைச் சேர்ந்த 21 பேர் மீது ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சி.வி.சண்முகம்.

ஆனால், அப்போது ஆளும் கட்சியான தி.மு.க-வில் பா.ம.க. அங்கம் வகித்ததால், விசாரணை சரிவர நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்தச் சமயத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ரகு என்பவர் மர்மமான முறையில் இறந்துபோனார். அதன்பிறகு, 'சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்’ என்று, உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் இரண்டு முறை மனுத்தாக்கல் செய்ததன் காரணமாக, அந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாறியது. தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு அ.தி.மு.க-வும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.

இந்தநிலையில், திண்டிவனம் வந்த சி.பி.ஐ. டீம் தங்களது விசாரணையைத் துரிதப்படுத்தியது. கூலிப் படையைச் சேர்ந்த எட்டு பேரோடு, ராமதாஸின் தம்பி சீனுவாசனும், பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் கருணாநிதியும் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு, கடந்த 2-ம் தேதி ராமதாஸின் உதவி யாளர் நடராஜனிடமும், பேரன் பிரதீபனிடம் விசாரித்த சி.பி.ஐ. டீம், மே 11, 12 ஆகிய தேதிகளில் ராமதாஸிடமும் விசாரித்தனர். அடுத்த கட்டமாக ராமதாஸின் மனைவி சரஸ்வதி விசாரிக்கப்படலாம் என்ற பரபரப்பு நிலவியது. ஆனால், தங்களது விசாரணை அறிக்கையை செங்கல்பட்டு நீதிமன் றத்தில் தாக்கல் செய்த சி.பி.ஐ. டீம், பின்னர் தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டனர்.

இந்தச் சூழலில்தான், மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த இளஞ்செழியன், கடந்த 5-ம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன், தனது குடும்பத்துக்கு ஒரு கடிதமும், போலீஸாருக்கு ஒரு கடிதமும் எழுதிவைத்து இருப்பது தான் இப்போது பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.

போலீஸ் தரப்பில் பேசினோம். ''இறந்துபோன இளஞ்செழியன், ஏற்கெனவே சென்னை புழல் சிறையில் இருந்தபோதும் தற்கொலைக்கு முயற்சி செய் தார். அதன்பிறகு, அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மனநிலை சரியில்லை என்று கூறி, ஜாமீன் வாங்கினார்கள். இளஞ்செழியன் ஆரம்பத்தில் மருதூர் மின்னல் ராஜா என்பவரிடம் கையாளாக இருந்தார். அந்த மின்னல் ராஜா திடீரெனக் கூலிப் படையினர் சிலரால் கொலை செய்யப்பட்டார். அதில் இளஞ்செழியனும் ஒரு குற்றவாளி.

முருகானந்தம் கொலை சம்பவத்துக்குப் பிறகு இளஞ்செழியனுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் வந்தனவாம். விசாரணையில், உண்மையைச் சொல்லக் கூடாது என்று சிலர் மிரட்டி இருக்கிறார்கள். இதை எல்லாம் தன்னுடைய நண்பர்களிடம் அடிக்கடிச் சொல்லி புலம்பி இருக்கிறார் இளஞ்செழியன். அத்துடன், இளஞ்செழியனின் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் இருந்தும் யாரும் அவரைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. மின்சார வசதிகூட இல்லாத தனி அறையில்தான் வாழ்ந்து வந்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் திடீரெனத் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார்'' என்கின்றனர்.

இளஞ்செழியன் எழுதி வைத்திருக்கும் கடிதத்தில், தன்னை யார் யாரெல்லாம் மிரட்டினார்கள் என்று விரிவாகவே குறிப்பிட்டு இருக்கிறார். சி.பி.ஐ. அதிகாரிக்கு எழுதப்பட்டுள்ளது இந்தக் கடிதம். ''புழல் சிறையில் இருக்கும்போது குமரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூலம் என்னை பலவந்தமாக மிரட்டி என்னிடம் வெள்ளைப் பேப்பர்-2, பச்சைப் பேப்பர்-2ல் கையெழுத்து மற்றும் கைரேகை வாங்கி உள்ளனர். கையெழுத்து போடவில்லை என்றால் என் குடும்பத்தினரை ஏதாவது செய்து விடுவதாக மிரட்டினான். .... என்னை ஒருமுறை சிறையினுள் அவர்கள் ஆதரவாளர்கள் மூலம் கொலை செய்ய முயன்றனர். நான் தப்பி விட்டேன்... குமரனின் ஆதரவாளர்கள் தொல்லை தாங்க முடியவில்லை..... அவர்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ....... இவர்களை நீங்கள்தான் தண்டிக்க வேண்டும். என்னைப் போல நிறையப் பேரை இதுபோல் செய்திருக்கிறார்கள். தற்கொலை மாதிரி நாடகம், வண்டிகள் மூலமாக விபத்து ஏற்படுத்துவது... இப்படி எனக்குத் தெரிந்து மூன்று பேரைக் கொன்று இருக்கிறார்கள். .... அவர்களே என்னை பெயிலில் எடுத்தனர். வெளியே வந்தவுடன் இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர்கள் ஆதரவாளர்கள் மூலம் என்னை ரோட்டில் வைத்து மிரட்டி ஓடவிட்டனர். ...வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.....'' என்று திகில் கிளப்பி உள்ளார் இளஞ்செழியன்.

''இளஞ்செழியனின் கடிதத்தை சி.பி.ஐ. போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினால், கண்டிப்பாக பல உண்மைகள் வெளிவரும். பா.ம.க-வின் பெரிய தலைகள் சிக்குவார்கள்'' என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

பா.ம.க-வுக்கு செம சிக்கல்தான்!

- அற்புதராஜ், படங்கள்: ஜெ.முருகன்