நீதித் துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அசைத்துப்பார்த்திருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பட்டாபி ராமாராவ் விவகாரம். சுரங்க ஊழலில் சிக்கிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியிடம்

10 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு இவர் ஜாமீன் வழங்கியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, நாட்டையே அதிரவைத்துள்ளது.

ஒரு காலத்தில் கர்நாடக அரசியலைக் கலக்கிய ரெட்டி சகோதரர்களில் மூத்தவரான ஜனார்த்தன ரெட்டிக்கு கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கோடிகளைக் கொட்டும் சுரங்க பிசினஸ் இருக்கிறது. கடந்த வருடம், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓபுலாபுரம் மைனிங் நிறுவனத்தில் நடந்த சுரங்க முறைகேடு காரணமாக சி.பி.ஐ. அதிகாரிகளால் வளைக்கப்பட்டார் ஜனார்த்தன ரெட்டி. ஜாமீனில் வெளியே வர படாத பாடுபட்டார். ஒரு வழியாக சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பட்டாபி ராமாராவ் மூலம் ஜாமீன் வாங்கி, மே 11-ம் தேதி வெளியே வந்தார்.

'ஜனார்த்தன ரெட்டிக்கு எதிராக வலுவான ஆதாரங்களும் அசைக்க முடியாத குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டது எப்படி?’ என்று கர்நாடக,ஆந்திர மீடியாக்கள் சி.பி.ஐ-யைத் துளைத்தன. அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணையில் இறங்கியது.

இதுகுறித்துப் பேசும் சி.பி.ஐ. வட்டாரத்தினர், ''நீதிபதி குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை அலசினோம். அதில் பட்டாபி ராமாராவின் மகனின் பேங்க் ஆஃப் பரோடா கணக்கில் கடந்த மாதம் மூன்று கோடி ரூபாய் வரவாகி இருந்தது. அதே போன்று நீதிபதியின் தம்பியான சீனிவாச ராவின் கணக்கில் மூன்று கோடி ரூபாய் போடப்பட்டு இருந்தது. மேற்கொண்டு விசாரணையில் இறங்கியபோதுதான் 10 கோடி ரூபாய் வரை கை மாறி இருப்பது தெரிய வந்தது. ஜனார்த்தன ரெட்டியின் சகோதரரான சோமசேகர ரெட்டி, பட்டாபி ராமாராவுக்கு நெருக்கமான முன்னாள் நீதிபதி ஒருவர் மூலமாக டீலிங்கை ஆரம்பித்து இருக்கிறார். இது தவிர, ஆந்திராவின் முக்கிய அமைச்சரும், ஒரு பிரபல தாதாவும் டீலிங்கை முடித்துத் தர குறிப்பிட்ட தொகையை வாங்கி இருக்கிறார்கள். அதனால் இந்த விவகாரத்தில் மேலும் சில தலைகள் சிக்கும். எந்த நேரமும் பட்டாபி கைது செய்யப்படலாம்'' என்றார்கள்.

இப்போது பட்டாபி ராமாராவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருக்கிறார் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகூர். இந்தக் குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் சொல்லாமல் இருக்கிறார் பட்டாபி.

நீதிபதியும் குற்றவாளி என்றால், எங்கேதான் சென்று முறையிடுவது?

- இரா.வினோத், படம்: ஜஸ்டின்