நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஜெய லலிதா - சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சூடுபிடிக்கிறது!

கடந்த 6-ம் தேதி, சசிகலா ஆஜர் ஆவதற்கு நாள் குறிக்கப்பட்டது. சசிகலா நிச்சயமாக வருவார் என்று பலரும் காத்துக்கிடக்க, சசிகலாவும் இளவரசியும் ஆப்சென்ட். சுதாகரன் மட்டும் ஆஜர். காலை 11 மணிக்கு, குற்றவாளிக் கூண்டை நோட்டம் விட்ட படி நுழைந்தார் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா. சசிகலாவும் இளவரசியும் இல்லாததால், அவரின் முகம் சிவந்தது.

சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல் மணிசங்கர், ''சசிகலாவுக்கு இடது கண்ணில் 'ரெட்டினா’ பிரச்னை இருந்ததால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள உதி கண் மருத்துவமனையில், மே 26-ம் தேதி அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாகத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இரண்டு வாரங்கள் சசிகலா முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று அவரை பரிசோதித்த டாக்டர் ரவீந்திரன் மருத்துவச் சான்றிதழ் அளித்திருக்கிறார். எனவே சசிகலா இன்றைய விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு இரண்டு வாரங்கள் விலக்கு அளிக்க வேண்டும்'' என மருத்துவச் சான்றிதழோடு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அரசுத் தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யா, ''சசிகலாவுக்கு 'ரெட்டினா’ அறுவைசிகிச்சை செய்தது குறித்து தனியார் மருத்துவமனை கொடுத்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவரை பெங்களூருவுக்கு வரவழைத்து, அரசு மருத்துவமனையில் பரிசோதித்த பிறகே, அந்த ஆவணத்தை கோர்ட் ஏற்றுக்கொள்ள வேண்டும். சசிகலா வராத நாட்களில், மற்ற குற்றவாளி களிடம் கேள்வி கேட்க வேண்டும்'' என ஆச்சார்யா டென்ஷனாக, சுதாகரன் முகத்தில் திடுக்!

ஆச்சார்யாவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜெ. தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.குமார் எழுந்து, ''என்னுடைய நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் 'ரெட்டினா’ அறுவை சிகிச்சை செய்தார்கள். அப்போது அவர் தொடர்ந்து 80 மணி நேரம் கண்ணை மூடிக் கீழே குனிந்தவாறே இருக்க வேண்டி வந்தது. எனவே நோயின் தாக்கத்தை உணர்ந்து, நீதிபதி தேதியை நீட்டிக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா, ''வழக்கில் இன்னும் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் இருந்தும், சசிகலா இப்படி சாக்குப்போக்குச் சொல்லி சமாளிப்பது சரியல்ல. இனியும் இதுபோன்ற காரணங்களை கோர்ட் கட்டாயம் ஏற்றுக்கொள்ளாது. இதுவே உங்க ளுக்குக் கடைசியாக இருக்கட்டும். அடுத்த முறை சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும் கட்டாயம் ஆஜராக வேண்டும்'' என்று கண்டித்து ஜூன் 18-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

அதற்குள் சசிகலாவுக்கு இன்னொரு காரணம் கிடைக்காமலா போய்விடும்?

- இரா.வினோத்