இது சங்கரராமன் வழக்கின் ரேஸ்!

வழக்கை எப்படியாவது விரைந்து முடித்துவிட வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் தரப்பு துடிக்கிறது. வழக்கை முறையாக நடத்த வேண்டும் என்று சங்கரராமனின் குடும்பத்தினர் துடிக்கிறார்கள். இதற்குள் சிக்கிக்கொண்டு உள்ளது இந்த வழக்கு!

காஞ்சி சங்கர மடத்து மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ம் ஆண்டு வரதராஜப் பெருமாள் கோயிலில் கொலை செய்யப்பட்டார். ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்யப்பட்ட அந்த வழக்கின் விசாரணை, புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான இந்த வழக்கு விசாரணை முக்கியக் கட்டத்தை எட்டிய நிலையில், முக்கிய சாட்சிகளான சங்கரராமனின் மனைவி பத்மாவும் அவரது மகன் ஆனந்த சர்மாவும் பிறழ் சாட்சியம் அளித்து அதிர்ச்சி தந்தனர். அதன்பிறகு, 'கொலை மிரட்டல் காரணமாகவே நாங்கள் பிறழ் சாட்சியம் அளித்தோம்’ என்று கூறி... தங்களை மறுபடி விசாரிக்க வேண்டும் என்று மனுச்செய்து உள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சி.எஸ்.முருகன் தலைமையில், கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. குற்றம்

சாட்டப்பட்டவர்களில் ஜெயேந்திரர் உள்ளிட்ட ஏழு பேர் ஆஜராகவில்லை. மனுதாரர் பத்மாவின் தரப்பில், 'சாட்சியங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் ஆவணத்தை சிறப்பு வழக்கறிஞரான தேவதாஸிடம் கேட்டு இருந்தோம். இதுவரை அவர் கொடுக்கவில்லை. அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவரை மாற்ற வேண்டும்’ என்று முறையிடப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த நீதிபதி சி.எஸ்.முருகன், 'சிறப்பு வழக்கறிஞரை மாற்றும் அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் மனு அளித்துப் பெற்றுக்கொள்ளுங்கள். சாட்சியங்களை மறு விசாரணை செய்யவும் இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’ என்று

கூறினார். அதைத் தொடர்ந்து மறுவிசாரணை குறித்த விவாதங்கள் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஒரு குற்ற வழக்குக்கு மையப்புள்ளியே அரசு தரப்பில் ஆஜராகும் சிறப்பு வழக்கறிஞர்தான். அவரையே மாற்றவேண்டும் என்று பத்மா தரப்பு சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு என்ன காரணம் என்று பத்மாவின் உறவினர் கண்ணனிடம் பேசினோம். ''பண பலமும் அதிகாரமும் இணைந்தால் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இந்த வழக்குதான் உதாரணம். இப்போதைய ஆளும்கட்சியின் முந்தைய ஆட்சியில் போடப்பட்ட இந்த வழக்கின் நேர்மை, கடந்த தி.மு.க. ஆட்சியில் இல்லை. அதனால் வழக்கு திசை மாறிப்போனது. அதன் உச்சகட்டமாக, நீதிமன்ற வளாகத்திலேயே பத்மாவும் ஆனந்தும் மிரட்டப்படவே, வேறு வழியின்றி பிறழ் சாட்சியம் அளிக்க வேண்டியது ஆயிற்று. புதிய ஆட்சியில் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தங்களை மீண்டும் விசாரிக்கக் கோரி இவர்கள் மனு செய்தனர். மறுவிசாரணை கேட்பது சட்டப்படியான உரிமை. ஆனால் அதில்தான் எத்தனை இழுத்தடிப்புகள். வழக்கின் இத்தனை சிக்கல்களுக்கும் காரணம் அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ்தான். பிறழ் சாட்சியங்களை அரசு வழக்கறிஞர் விசாரித்து இருந்தால், அத்தனைப்

பிரச்னைகளும் தவிர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் அவர் எதிர்த்தரப்புக்குச் சாதகமான வகையில்தான் செயல்பட்டார். வழக்கின் ஆவணம் எதைக் கேட்டாலும் அவர் தருவது இல்லை. அரசு வழக்கறிஞராக இருப்பவர், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். காஞ்சிபுரத்துக்கு இவர் அடிக்கடி போகும் மர்மம் என்ன என்று ஆராய வேண்டும். அரசு வழக்கறிஞரை மாற்றி மறுவிசாரணை நடத்தினால் மட்டுமே இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும். வழக்கை இழுத்தடிப்பதற்காக இந்த மனுக்களைத் தாக்கல் செய்வதாகக் கூறுவது வேடிக்கையானது. நாங்கள் உயிர் பயத்தோடு இவ்வளவு தூரம் வந்துபோவது சாதாரண விஷயம் அல்ல'' என்றார்.

பத்மா தரப்பு வழக்கறிஞர் மணிகண்ட வரதன், ''இதுவரை 84 பேர் இந்த வழக்கில் பிறழ் சாட்சிகளாக மாறி இருக்கின்றனர். பிறழ் சாட்சிகளை அரசு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவில்லை. செய்யாதது ஏன் என்ற கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பில் காட்டப்படும் குறைந்தபட்ச ஒத்துழைப்பைக் கூட அவரிடம் எதிர்பார்க்க முடியவில்லை. அதனால்தான் மறுவிசாரணை கோரியும் அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரியும் தொடர்ந்து நீதிமன்றத்தை வலியுறுத்துகிறோம்'' என்றார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் தேவதாஸிடம் பேசினோம். ''இந்த வழக்கில் நான் சட்டத்தின்படியும் மனசாட்சிப்படியும் சிறப்பாகவே பணியாற்றி வருகிறேன். சாட்சி ஆவணங்களை நானாகத் தருவதற்குச் சட்டத்தில் இடம் இல்லை. அதனால், நீதிமன்றத்தில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினேன். சாட்சிகளை மறு விசாரணை செய்யக் கோருவதற்குக் குற்றவாளிகள் தரப்பு, அரசுத் தரப்பு மற்றும் நீதிபதிக்குத்தான் உரிமை உண்டு. சட்டப்படி இவர்களுக்கு அந்த உரிமை இல்லை. பிறழ் சாட்சிகளைநான் விசாரிக்கவில்லை என்பது தவறு. திறந்த நீதிமன்றத்திலேயே குறுக்கு விசாரணை செய்து, அது நீதிமன்றத்திலும் பதிவாகி இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு எனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறுவது அபாண்டம். இதுவரை ஒரு முறைகூட காஞ்சி மடத்துக்கு நான் சென்றது இல்லை. உண்மையில் இந்த வழக்கை பிறழ் சாட்சி சொல்லித் தாமதப்படுத்தியது பத்மா தரப்புதான். இவர்கள் மீதுதான் சந்தேகம் எழுகிறது'' என்றார்.

மடங்களில் விவகாரங்கள் அத்தனை சீக்கிரத்தில் முடியாதோ?

- நா.இளஅறவாழி, கிருபாகரன்

படங்கள் : ஜெ.முருகன்