ஒரு காதல் மறுப்பு... மூன்று கொலை களை அம்பலப்படுத்திய கதையை கடந்த இதழில் குறிப்பிட்டு இருந்தோம். அந்தக் கொலைக்கான காரணம் புதுப்புது விதமாக வெடிக்க ஆரம்பித்து இருப்பது இந்த வாரத்தின் திருப்பம்!

விழுப்புரம் அருகே உள்ள எம்.குச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பார்கவி, சதீஷ் என்ற வாலிபரைக் காதலித்தார். காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே... வீட்டைவிட்டு வெளியே சென்றார்கள். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச் சியில் கலந்துகொண்ட பார்கவி, 'என் அப்பா ஒரு கொலைகாரர். அவரது சொந்த ஊரான நல்லான்பிள்ளை பெற்றானில் இருந்து லாவண்யா - சிலம்பரசன் என்ற காதல்ஜோடி ஆதரவு தேடி வந்தது. அவர்களை எங்கள் வீட்டில் தங்கவைத்த என் அப்பாவே அவர்களைக் கொலை செய்துவிட்டார். லாவண்யாவைத் தேடி வந்த அவரது தந்தை

சேகரையும் கொலை செய்தார். மூவரின் உடல்களையும் வீட்டுக்கு அருகிலேயே புதைத்து வைத்தார்’ என்று பகீர் கிளப்பினார். நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை சர்வசாதாரணமாக அந்தப் பெண் சொன்னார்.

அதைஅடுத்து, பதறித் துடித்த லாவண் யாவின் அம்மா ஜீவா, விழுப்புரம் தாலுக்கா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க... முருகன் வீட்டைத் தோண்ட ஆரம்பித்தது போலீஸ். மூன்று எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், 'மூவரையும் கொலை செய்தது ஏன்?’ என்று முருகன் கொடுத்த வாக்குமூலம்தான் வழக்கில் திகீர் திருப்பம்!

நகைக்காகவா, செக்ஸுக்காகவா?

முருகன் சொன்னதாக போலீஸ் சொல்வது இதுதான்...

''நல்லான்பிள்ளை பெற்றான் கிராமத்தில் இருந்த போதே லாவண்யாவை எனக்குத் தெரியும். நான் அந்த ஊரைவிட்டு வந்த பிறகு, சிலம்பரசனைக் காதலித்தார் லாவண்யா. இது அவர்களின் பெற்றோருக்குத் தெரியவர, எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இருவரும் திருமணம் செய்துகொண்டு என்னிடம் அடைக்கலம் தேடி வந்தனர். சிலம்பரசன் வெளியே போயிருந்த சமயத்தில் லாவண்யாவை ஆசைக்கு இணங்குமாறு அழைத்தேன். அதற்கு லாவண்யா மறுத்து விட்டாள். இந்த விஷயம் சிலம்பரசனுக்கு தெரிந்து விட்டது. இருப்பினும் அவனுக்குச் சரக்கு வாங்கித் தருவதாலும், செலவுக்குப் பணம் கொடுப்பதாலும் என்னுடைய நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை.

லாவண்யாவின் அப்பா சேகருக்கு இந்த விஷயம் எல்லாம் போய்ச் சேர... என் வீட்டுக்கு வந்து தட்டிக்கேட்டார். அதோடு, எனக்குக் கடனாகக் கொடுத்து இருந்த பணத்தையும் உடனே தரும்படி வற்புறுத்தினார். இதனால், எனக்கு ஆத்திரம் வந்தது. சிலம்பரசனின் உதவியோடு சேகரைக் கொலை செய்தேன். வீட்டை ஒட்டி இருந்த கிணற்றில் பிணத்தைப் போட்டு எரித்துவிட்டேன். இந்தச் சம்பவம் லாவண்யாவுக்கு தெரியவர, அவள் ஆத்திரப் பட்டாள். நானும் சிலம்பரசனும் சேர்ந்து லாவண் யாவைத் தீர்த்துக் கட்டினோம். வீட்டுக்கு முன்னால் இருந்த தண்ணீர் பைப் அருகில் புதைத்தோம். அதன் பிறகு சிலம்பரசன் அடிக்கடி குடிபோதையில் இந்தக் கொலைகளை ஞாபகப்படுத்தி வந்தான். அதனால் வேறு வழியில்லாமல் என் தம்பி மதியரசன் உதவியோடு சிலம் பரசனையும் கொன்று வீட்டுக்குப் பின்னால் குழி தோண்டிப் புதைத்து விட்டேன்'' - இவ்வாறு முருகன் வாக்குமூலம் கொடுத்தாக போலீஸார் சொல்கிறார்கள்.

'புதைச்சதை அம்மாதான் சொன்னாங்க!’

'எதுதான் உண்மை?’ என்ற கேள்வியோடு, முருகனின் மகள் பார்கவியிடம் பேசினோம். ''பத்தாம் வகுப்பு வரை நான் பாட்டி வீட்டில்தான் தங்கிப் படித்தேன். கோடை விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தப்ப, அப்பா தினமும் குடிச்சுட்டு அம்மாகிட்ட சண்டை போடுவார். அதுபற்றி அம்மாகிட்ட விசாரிச்சப்பத்தான், 'ஒருத்தரை கொலை பண்ணி வீட்டுக்குப் பின்னாடி உங்க அப்பா புதைச்சு வெச்சிருக்காரு’ன்னு சொன்னாங்க. அப்ப நான் சின்ன பொண்ணு என்பதால், பயந்துக்கிட்டு வெளியே சொல்லலை.

ப்ளஸ் டூ படிக்கும்போது சதீஷைக் காதலிச்சேன். அதுக்கு எங்க அப்பா ஆரம்பத்துலயே சாதியைக் காரணம் காட்டி மறுத்தார். கொஞ்ச நாள் போனதும் சம்மதிச்சார். ஆனா, திடீர் திடீரென மறுப்பதும் சம்மதிப்பதுமாக இருந்தார். அந்த சமயத்துலதான் என்கிட்டயே பல தடவை தப்பா நடக்கவும் முயற்சி செஞ்சார். இதைப் பொறுத்துக்க முடியாமல்தான் நானும் சதீஷ§ம் ரகசியமாத் திருமணம் செஞ்சுக்கிட்டோம். ஆனா எங்கப்பா, சதீஷ் என்னைக் கடத்திட்டதா போலீஸ்ல புகார் கொடுத்திட்டார். அதுக்குப்பிறகுதான் டி.வி. நிகழ்ச்சிக்குப் போய் உண்மையை சொல்ல வேண்டியதாப்போச்சு!'' என்ற போது அவரது கண்கள் கலங்கின!

'என் மகன் கொலை செய்திருக்க மாட்டான்!’

அடுத்ததாக நல்லான்பிள்ளை பெற்றான் கிராமத்துக்குச் சென்றோம். அங்குள்ள பாஞ்சாலி தெருவில் லாவண்யா, சிலம்பரசன் இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளன. சற்று தூரம் சென்றால், முருகனின் பெற்றோர் வீடு. மூன்று வீடுகளுமே பூட்டி இருந்தன. முருகனின் அம்மா தேவிகா, வீட்டைப் பூட்டிவிட்டு, எங்கோ சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் சொல்கிறார்கள்.

வேலைக்குச் சென்றிருந்த சிலம்பரசனின் தாய் பூங்காவனம் சற்று நேரத்தில் வந்தார். இந்த விஷயங்களை நாம் சொன்னோம். ''சிலம்பரசன் சின்னப் பையனா இருக்கும்போதே அவங்க அப்பா இறந்துட்டார். எனக்கு இருந்த ஒரே ஆதரவு என் பையன்தான். அவனைக் கொன்னது மட்டும் இல்லாம, அவனும் சேர்ந்துதான் கொலைகளைச் செஞ்சான்னு தப்புத் தப்பா சொல்றாங்களே... இது அடுக்குமா?'' என்று குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கி விட்டார்.

'பெண்ணைத் தேடிப் போனவர் திரும்பவே இல்லை!’

லாவண்யாவின் அம்மா ஜீவா, செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாகத் தகவல் கிடைக்க... அங்கு சென்று அவரிடம் பேசினோம். ''இப்ப சிலம்பரசன் குடும்பம் இருக்குற வீட்டுலதான் அப்போ முருகன் இருந்தாரு. அதனால, எங்களுக்கு முருகன் நல்ல பழக்கம். அதுக்கு அப்புறமாதான் சிலம்பரசன் குடும்பம் அந்த வீட்டை வாங்கிட்டு வந்தாங்க. முருகன்கிட்டயோ சிலம்பரசன்கிட்டயோ என்னோட பொண்ணு ஒரு நாள்கூட பேசியதை நான் மட்டும் இல்லீங்க... இந்த ஊரும் பார்த்து இருக்காது. செஞ்சிக் கோட்டையில என் பொண்ணும் சிலம்பரசனும் இருந்ததா அந்த ஊர் போலீஸார் கூப்பிட்டுச் சொன்ன பிறகுதான் எங்களுக்கும் சிலம்பரசன் குடும்பத்தாருக்கும் விஷயமே தெரியும்.

அப்போ என் பொண்ணு பத்தாவது படிச்சுக்கிட்டு இருந்தா. ஸ்கூல் முடிய ஒரு மாசம் இருக்கும். அப்போதான் அவங்க ரெண்டு பேரும் ஓடிப் போயிட்டாங்க. அதுக்குப் பிறகு ஒரு வாரம் கழிச்சு என் வீட்டுக்காரர் அவங்களைத் தேடிப் போனார். அவருக்குப் போன் வந்ததால் போனாரோ, தானாவே போனாரோ எனக்குத் தெரியாது. ஆனா, போனவங்க யாருமே திரும்பலை!

என் வீட்டுக்காரர் வீட்டைவிட்டுப் போய் கொஞ்ச நாள் கழிச்சு, என் வீட்டுக்கு முருகன் வந்தான். அவன்கிட்ட, 'இருபதாயிரம் ரூபாய் வேணும்னாலும் கொடுக்கிறேன். என் பொண்ணைக் கண்டுபிடிச்சுக் கொடு’ன்னு சொன்னேன். அதுக்குப் பிறகு ஒரு மாசம் இருக்கும். திரும்ப முருகன் வந்து, 'உன்னோட பொண்ணும் அந்தப் பையனும் என் வீட்லதான் இருக்காங்க’ன்னு சொன்னான். 'அவங்களை இங்கே கூட்டி வந்தா பிரிச்சுவிட்டுருவாங்க. அதனால, அவங்க எங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும்’னு சொல்லி அனுப்பிட்டேன். இப்போ டி.வி-யில பார்த்த பிறகுதான் அவங்களைக் கொன்னுட்டாங்கன்னு தெரிஞ்சு போலீஸுக்குப் போனேன்'' என்றபோது அவரால் அழுகையை அடக்க முடியவில்லை.

''சிலம்பரசன் கொலை பண்ணியிருக்க மாட்டான்!’

நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தினர் சிலரிடம் பேசினோம். ''லாவண்யா நல்ல பொண்ணு. அது யாருகிட்டேயும் அதிகமாப் பேசாது. அதே மாதிரி சிலம்பரசனும் ரொம்ப அமைதியான பையன். இந்த ஊருக்கே செல்லப்பிள்ளைனு சொல்லலாம். அவன் முருகனோடு சேர்ந்து கொலை செஞ்சான் என்பதை எங்களால நம்பவே முடியல. 'செத்தவங்க எந்திருச்சு வந்து பேசவா போறாங்க?’னு முருகன் பொய் சொல்றான். முருகன்தான் இங்க இருக்கும்போது டிப்-டாப்பா மைனரு மாதிரி வருவான். எந்த வேலையும் செய்ய மாட்டான்'' என்கின்றனர்.

இந்த மூன்று கொலைகள் தவிர, வேறு யாரையாவது முருகன் கொலை செய்து புதைத்து வைத்திருக்கிறாரா என்ற சந்தேகமும் போலீஸாருக்கு இருக்கிறது. அதனால், மீண்டும் முருகனின் வீட்டை முழுமையாகத் தோண்டி ஆராய போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.

மர்மம் தொடர்கிறது!

- அற்புதராஜ்

படங்கள்: ஜெ.முருகன், ஆ.நந்தகுமார்