கே.எஸ்.இராதாகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு,

அபிராமபுரம், சென்னை-18. விலை

60

காவிரி, கண்ணகி கோயில், முல்லை பெரியாறு, சேது சமுத்திரத் திட்டம், கச்சத் தீவு, நதி நீர்ப் பிரச்னைகள், தமிழக மீனவர்... என தமிழகத்தின் வாழ்வாதாரத் தேவைகளாகவும், தீராத பிரச்னைகளாகவும் இருப்பனவற்றைத் தேடித் தேடிக் கனமான புத்தகங்களாகத் தொகுத்துத் தரக்கூடியவர் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். தூக்குத் தண்டனை குறித்த முக்கியமான பதிவாக, 'தூக்குக்கு தூக்கு’ புத்தகத்தை இப்போது கொடுத்து இருக்கிறார்.

இப்போது, உலக அளவில் 1,252 பேர் தூக்குத் தண்டனையை எதிர்பார்த்து தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மரணக்கயிறு இவர்களின் கழுத்தை நெருக்குவதன் மூலமாக இந்த உலகத்தில் குற்ற நடவடிக்கைகள் குறைந்து போகுமா அல்லது கொலை, கொள்ளையே இனி நடக்காதா என்ற யதார்த்தமான கேள்விச் சட்டத்துக்குள் இந்தப் புத்தகம் செதுக்கப்பட்டு உள்ளது. இப்போது, இந்தியச்

சிறைக ளில் 50 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர். 20 கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காகக் காத்திருக்கின்றன. எனவே, 50 உயிர்களைக் காப்பாற்றப் போகிறோமா அல்லது காவு கொடுக்கப் போகிறோமா? முடிவெடுக்க அவசரப் படுத்துகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்!

அரசியலில் இருந்தபோதும், நீதிபதியாய் ஆனபோதும், பதவியில் ஓய்வு பெற்ற பிறகும், 'தூக்குத் தண்டனை கூடாது’ என்பதில் கறாராக இருப்பவர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். 'கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது’ என்று சொல்லி, வால்மீகியை உதாரணமாகக் காட்டுவார். கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி பிற்காலத்தில் திருந்தி ராமாயணம் படைத்தைப் போல்... எல்லாக் குற்றவாளிகளுக்கும் வாழும் வாய்ப்பைக் கொடுத்துப் பாருங்களேன் என்ற நல்ல எண்ணமே மரண தண்டனைக்கு எதிராகப் பலரையும் பேசத் தூண்டுகிறது. வெறும் மனு என்று சொல்லாமல், 'கருணை மனு’ என்று காரணப்பெயர் சூட்டப்பட்டு இருப்பதும் அதனால்தானே!

ராஜீவ் கொலை வழக் கில் சிக்கிய மூன்று பேரைக் காப்பாற்றக் கிளம்பிய தமிழ்ஆர்வலர்களின் திடீர் கோரிக்கை அல்ல இது. ஸ்டோக்ஹோம் சர்வதேச அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மாநாட்டில் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் வாஜ்பாய், வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆகியோர் சென்றிருந்த காலம் முதலான வரலாற்றை கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நம் முன் கொண்டுவருகிறார். இளந்தத்தன் என்ற புலவனுக்கு உறையூர் அரசன் மரண தண்டனை கொடுக்க, அதை, கோவூர்கிழார் வாதாடிக் காப்பாற்றிய சங்க காலம் வரைக்கும் பின்நோக்கிப் பார்க்கும் எத்தனையோ உதாரணங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. ராஜாஜியும் கல்கியும் எழுதிய குறிப்புகளும் உண்டு. மூன்று முறை தூக்கு மேடை வரை சென்று, கடைசியில் காப்பாற்றப்பட்ட குருசாமி நாயக்கர் என்பவரின் கதை இதில் முழுமையாக இருக்கிறது. சட்டப் போராட்டத்தையும் மீறிய கண்ணீர்ப் போராட்டமாக இருக்கிறது குருசாமியின் வாழ்க்கை.

137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்தியாவையும் நகர்த்தும் நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகம்.

- புத்தகன்