Published:Updated:

சாதியம்: கைகூடாத நீதி

ஜூ.வி. நூலகம்

ஸ்டாலின் ராஜாங்கம், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669 கே.பி.சாலை,

நாகர்கோவில்-1. விலை

சாதியம்: கைகூடாத நீதி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

120

##~##

பாரம்பர்யம், பண்பாடு, கலாசாரம், உண்மை, நேர்மை... என்று எந்தச் சாயத்தைப் போட்டுப் பூசினாலும் இந்தியச் சமூக அமைப்பில் எல்லாவற்றுக்கும் பிரதான பாத்திரம் வகிப்பது சாதிதான்! இந்தியன், தமிழன் என்ற அனைத்தும் தங்களது சாதிக் குணத்தை மறைக்கும் ஒருவகைத் தந்திரமாகவே அனைத்து நிகழ்வுகளுக்கும் அடிநாதமாகச் செயல்படுகிறது. பணமும் படிப்பும் இன்று இரண்டு கண்களாகத் தங்களின் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கும் பெற்றோர்... மூன்றாவதாக சாதிப் பெருமையையும் ஒருசேரப் புகட்டி வளர்க்கிறார்கள். அதனால்தான் பெரியார், ''சாதியைக்கூட ஒழித்துவிடலாம். சாதிப் பெருமை​யையும் அதன் குணம் என்று சொல்லப்படுபவற்றையும் ஒழிப்​பது கஷ்டம்!'' என்றார். இந்தக் கஷ்டத்தை சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் தலித் மக்கள் எப்படி அனுபவிக்கிறார்கள், ஏன் அனுபவிக்கிறார்கள், எதனால் அல்லது யாரால் அனுபவிக்​கிறார்​கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டும் கட்டுரைகள் இவை!

'நாட்டையே உலுக்கிப் பின்னர் காணாமல்போன 50 தலைப்புச் செய்திகள் பற்றிய சிறப்பிதழை செய்தி

சாதியம்: கைகூடாத நீதி

இதழொன்று அண்மையில் வெளியிட்டு இருந்தது. அதில் தலிச் செய்தி ஒன்றுகூட இல்லை. அந்த அளவுக்குத் தலித்துகள் மீதான வன்முறை இங்கு சாதாரணமாக இருக்கிறது!’ என்கின்ற கோபத்துடன் தனது கட்டுரைகளை ஸ்டாலின் ராஜாங்கம் தொடங்குகிறார்.

சமரசங்கள் அற்று,  தேர்தல் அரசியலில் இருந்து தூர நின்று உண்மையை எழுதக்கூடிய பத்தி எழுத்தாளர்களுள் ஒருவர் ஸ்டாலின் ராஜாங்கம். தலித் வாழ்வு சார்ந்த உரையாடல்களை, வெறும் கழிவிரக்கத்துடன் மட்டும் அணுகாமல் அதை எந்தெந்தக் கோணத்தில் எல்லாம் பார்க்க வேண்டும் என்பதை வழிகாட்டும் எழுத்துக்கள். திராவிட அரசியலும் தமிழ்த் தேசிய அரசியலும் சமூக யதார்த்தத்தை மௌனமாக்கி வருவதை ஒவ்வொரு கட்டுரைகளிலும் கடுமையாகச் சாடுகிறார்.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காச்சி​னேந்தல்... ஆகிய கிராமங்களில் தேர்தலே நடத்த முடியாமல், ஆதிக்க சாதியினர் தடை போட்டதும் அங்கு அரசாங்க இயந்திரம் முழுமையாக இறங்கி... தேர்தல் நடத்தியதும் அனைவரும் அறிந்தது. ஆனால் இந்தக் கட்டத்தை அடைவதற்கு இடைப்பட்ட காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திக்காட்டிய போராட்டங்களின் பட்டியல் மலைப்பைத் தருகின்றன. எந்தச் சமூக நீதிச் சாதனைப் பெரு​விழாவும் நடப்பதற்கு முன்னால் ஏராளமான ஆண்டுகள், வெ​குஜன ஊடகங்களின் கவனிப்​பைப் பெறாமல் ஏராள​மான முன்னெடுப்புகள் செய்யப்​படுகின்றன என்பது உண்மை.

ஜல்லிக்கட்டு, தமிழர் வீரம் சார்ந்த விஷயமாக மட்டுமே அனை​வராலும் பார்க்கப்படுகிறது. 'இவ்விழாவை அடிப்​படையாகக்​கொண்டு கட்டப்படும் சாதி சார்ந்த மரியாதைகளும் அந்த​மரி​யாதை​யோடு சேர்த்து அடை​யாளப்படுத்தப்படும் வீரமும் ஆதிக்க சாதியினர் சார்​பான​தாகவே இருக்கிறது’ என்கிற இன்னொரு யதார்த்தமான பக்​கத்தை ஸ்டாலின் சுட்டிக் காட்டு​​கிறார்.

அத்வானியின் ராமன், கருணா​நிதியின் ராஜராஜசோழன், ராம​தாஸ் திடீரென முன்னெடுத்த தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், திருமாவளவனின் தலித் தாண்டிய ஆர்வங்கள், திராவிட, தமிழ்த் தேசிய, கம்யூனிஸ மௌனங்கள்.. என்று நிகழ்கால அரசியல் மொத்தத்தையும் இன்னொரு கோணத்தில் நின்று உள்வாங்கிக்கொள்வதற்கு இந்தக் கட்டுரைகள் தூண்டுகின்றன.

ஒவ்வொருவர் மனச்சாட்சியை நோக்கியும் வாள் வீசுகிறது இந்தப் புத்தகம்.

- புத்தகன்