மின் வெட்டு போதாது என்று இப்போது மீட்டர் வெட்டு தமிழர்களைப் பதம் பார்க்கிறது.

அதென்ன மீட்டர் வெட்டு?

இந்த ஜூன் மாதம் முதல் புதிதாக மின் இணைப்பு கேட்பவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம், மீட்டர்களைக் கொடுப்பது இல்லை. இந்த மீட்டர்களை நுகர்வோர்களே தனியாரிடம் இருந்து வாங்கிக்கொடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு வாங்க வேண்டும் என்பதுதான் கொடுமை!

சிங்கிள் பேஸ் மின்சார இணைப்புக்கு

1,550 கட்டணம். இதில் மீட்டருக்கு என வசூலிக்கப்படுவது

வரியுடன் சேர்த்து

786. இதேபோல் த்ரீ பேஸ் இணைப்புக்கு

7,540 டெபாசிட் தொகை. இதில் மீட்டர் கட்டணம்

2,217. ஆனால், இதை வெளியில் வாங்கும்போது சிங்கிள் பேஸுக்கு

400-ம் த்ரீ பேஸுக்கு

1,580-ம் கூடுதல் செலவு ஆகிறது.

தாம்பரம் அருகே கன்னடபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் கதையைக் கேளுங்கள். ''எங்க வீட்டில் மின்சார மீட்டர் ஆறு மாதங்களுக்கு முன்பே பழுதாகிவிட்டது. தகவல் சொன்னதும் பழுதான மீட்டரை மின் வாரிய ஊழியர்கள் கழற்றிக்கொண்டு போய்விட்டனர். புது மீட்டருக்கான டெபாசிட் தொகையை நான் செலுத்தி விட்டேன். ஆனால், இன்னமும் புதுமீட்டர் பொருத்தவில்லை. இப்போது, இதற்குமுன் நான் செலுத்திய சராசரி யூனிட்களின் அடிப்படையில் மின்கட்டணம் வசூலிக்கிறார்கள். நான் மின் பயன்பாட்டை குறைத்தாலும் அதிகமாகத்தான்

பணம் செலுத்த வேண்டி இருக்கிறது. நானும் பல முறை சொல்லிப் பார்த்து விட்டேன். ஆனால், காரியம் நடப்பதுபோல் இல்லை'' என்று வருத்தப்பட்டார்.

மின் வாரிய ஊழியர்களிடம் விசாரித்தபோது, ''கடந்த ஐந்தாறு மாதங்களாகவே மின் மீட்டர் பற்றாக்குறை நிலவுகிறது. பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதைப் பார்த்தால் எங்களுக்கே பரிதாபமாக இருக்கிறது. இதற்கு முன் தமிழக மின் வாரியம் டெண்டர் விட்டு மீட்டர்களை வாங்கி, அதைப் பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு வழங்கும். கொஞ்ச நாட்களாகவே கொள்முதலை நிறுத்திவிட்டனர். இதனால், மீட்டர் சப்ளை இல்லாமல் போய்விட்டது. இப்போது தனியார் ஏஜென்ட்களிடம் நுகர்வோரே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. மீட்டர் பழுது அடைந்து விட்டால், அதைக் கழற்றி நுகர்வோர் கையில் கொடுத்து விடுவோம். அவர்தான் பழுது நீக்கிக் கொண்டுவர வேண்டும் அல்லது புது மீட்டர் வாங்கிவர வேண்டும். இதுதான் இப்போதைய நடைமுறை'' என்று விளக்கம் தந்தனர்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விசாரித்தோம். ''கடந்த ஆறேழு மாதங்களாகவே, நாங்கள் டெண்டர் விட்ட நிறுவனங்கள், மீட்டர்களை சரிவர சப்ளை செய்யவில்லை. அதனால்தான் தமிழகம் முழுக்க மின்சார மீட்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்கள் நீண்ட காலம் காத்திருக்க முடியாதே. அதனால், ஏற்கெனவே டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆறு நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்களே மின் மீட்டரை வாங்கிக் கொடுத்தால், அதைப் பரிசோதனை செய்த பிறகு வீடுகளில் பொருத்திக் கொடுக்கிறோம். பொது மக்களுக்கு எல்லா இடங்களிலும் மின்சார மீட்டர்கள் தாராளமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஏரியாவுக்கு இரண்டு ஏஜென்சிகளை நியமிக்கும்படி தயாரிப்பு நிறுவனங்களிடம் கூறி இருக்கிறோம்.

பொதுமக்கள் செலுத்திய மீட்டருக்கான பணத்தைத் திருப்பிக் கொடுக்கப்போவது இல்லை. அவர்கள்அடுத்து செலுத்தும் மின்கட்டணத்தில் அதை ஈடுசெய்ய இருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.

''பொது மக்களுக்கு அதிக விலைக்கு மின் மீட்டர்கள் விற்கப்படுகிறதே?''

''சிங்கிள் பேஸ் மீட்டருக்கு அடிப்படை விலையாக 785 ரூபாய் நிர்ணயித்து இருக்கிறோம். தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஏஜென்ட்களின் செயல்பாட்டு செலவு எல்லாம் சேர்ந்தால், சுமார் 1,200 ரூபாய் வரைக்கும் விற்பார்கள். அதுக்கு மேல் விற்க மாட்டார்கள்'' என்று சமாளித்தார்கள்.

தமிழக மின் வாரியத்துக்கு மின் மீட்டர்களை உற்பத்தி செய்து கொடுக்க முடியாத நிறுவனங்களால், பொது மக்களுக்கு மட்டும் எப்படி மீட்டர்களைத் தயாரித்துக் கொடுக்க முடியும்? ஒரு பொருளின் அடிப்படை விலையே 785 ரூபாய் எனும்போது அதற்கான செயல்பாட்டுச் செலவு 400 ரூபாயாக எப்படி இருக்க முடியும்? ஏன் அல்லது யாருக்காக இப்படி அதிகம் பணம் வசூலிக்கிறார்கள்? அதிக லாபத்தில் யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது? கொடுக்காத மீட்டருக்காக மக்களிடம் எதற்காகப் பணம் வாங்க வேண்டும்? பின் அதனை எதற்காக மின்சாரப் பயன்பாட்டில் இருந்து கழிக்க வேண்டும்?

இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லப்போவது யார்?

- சி.சரவணன்