Published:Updated:

பாட்னா குண்டுவெடிப்பு: மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது!

பாட்னா குண்டுவெடிப்பு: மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது!
பாட்னா குண்டுவெடிப்பு: மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது!
பாட்னா குண்டுவெடிப்பு: மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது!

பாட்னா: பாட்னா தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

பீகார் மாநிலம், பாட்னாவில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் கடந்த 27ஆம் தேதி நடந்தது. அப்போது பாட்னா ரயில் நிலையம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்த இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.

இதில் முதல் குண்டு வெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதி அனுல் தாரிகியூவை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து முக்கிய தஸ்தாவேஜுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர்.

##~~##
இந்நிலையில், பீகார் மாநிலம், கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள அலஉலி கிராமத்தில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு பீகார் மாநில போலீசாரும், மத்திய புலனாய்வு பிரிவு போலீசாரும் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த அர்சத் அகமது என்பவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் ‘பாட்னா தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய தீவிரவாதியான இம்தியாஸ் அன்சாரியின் நண்பர் அர்சத் அகமது என்பதும், இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. மேலும் அவனுக்கு, டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.