Published:Updated:

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பக்ருதீன், பிலால் மாலிக் சேர்ப்பு!

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பக்ருதீன், பிலால் மாலிக் சேர்ப்பு!
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பக்ருதீன், பிலால் மாலிக் சேர்ப்பு!
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பக்ருதீன், பிலால் மாலிக் சேர்ப்பு!

சேலம்: சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில், தீவிரவாதிகள் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தீவிரவாதிகள் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு சம்பந்தமாக பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று வருகிறது.

##~~##
இதையடுத்து, இவர்கள் இருவரையும் இன்று சேலம் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்துகின்றனர். இதையொட்டி சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.