Published:Updated:

டிஸைன்.. டிஸைனா ஏமாத்துறாங்க!

பிடிபட்ட ஸ்ரீரங்கம் தினேஷ்குமார்

டிஸைன்.. டிஸைனா ஏமாத்துறாங்க!

பிடிபட்ட ஸ்ரீரங்கம் தினேஷ்குமார்

Published:Updated:
##~##

'உதயநிதி ஸ்டாலி னின் மனைவி கிருத்திகா பேசுறேன்’ என்று, கடந்த மூன்று மாதங்களாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களை ஏமாற்றி வந்த மிமிக்ரி ஆசாமி ஸ்ரீரங்கம் தினேஷ்குமாரை திருவல்லிக் கேணி போலீஸார் வளைத்து பிடித்துள்ளனர். 'மகளிரணியைச் சேர்ந்த நூர்ஜஹான் சொன்னதன் பேரில்தான் இதையெல்லாம் செய்தேன்’ என்று போலீஸாரிடம் அந்த மிமிக்ரி ஆசாமி சொல்ல... கிறுகிறுத்துக் கிடக்கிறது தி.மு.க. வட்டாரம்!   

முதலில் சம்பந்தப்பட்ட பிரபலங் களிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடிகர் வடிவேல்: ''மூணு மாசத்துக்கு முன்னாடி 'நான் கிருத்திகா உதயநிதி’ பேசுறேன்னு ஒரு பொண்ணு போன்ல பேசவும் எனக்கு வெலவெலத்துப் போச்சு. 'சும்மாதான் கால் பண்ணேன். ஏதாவது படம் பண்ணணும்னா சொல்லுங்கண்ணே! என் ஃபிரண்ட்ஸ்கிட்டச் சொல்லி ஹெல்ப் பண்றேன்’னு

டிஸைன்.. டிஸைனா ஏமாத்துறாங்க!

சொல்லுச்சு. எனக்கு அப்பவே டவுட்டாயிடுச்சு. அதுக்கப்புறம் இன்னொரு தடவை போன் பண்ணி, எனக்கு சூர்யா நம்பர் கொடுங்க, பிரசாந்த் நம்பர் கொடுங்கன்னு கேட்டுச்சு. உடனே, உதயநிதிக்கு போன் அடிச்சு விஷயத்தைச் சொல்லிட்டேன்.''

எஸ்.வி.சேகர்: ''மூணு மாசத்துக்கு முன்னால கிருத்திகா உதயநிதினு அறிமுகப்படுத்திகிட்டு செல்போன்ல பேசின பொண்ணு, 'என் கணவர் உதயநிதி நடிச்ச  படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு கண்டிப்பா வரணும்’னு சொன்னாங்க. 'எனக்கு அ.தி.மு.க-வுல அழைப்பு வரக்கூடும். அதனால் விழாவுக்கு வர முடியாது’னு சொல்லிட்டேன். அப்புறம் ஒருநாள், 'ஜெயலலிதாவை சந்திக்கணும். ஆனா, எப்படி மூவ் பண்றதுன்னு தெரியல. நீங்க இதுல ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா?’னு கேட்டாங்க. அதிர்ச்சியான நான், 'உனக்கு ஜெயலலிதாவைப் பார்க்கணும்னா மெரீனாவில் உள்ள காந்தி சிலை பக்கத்துல போய் நில். சி.எம்.கான்வாய் அந்த வழியா போகும்போது அவங்களைப் பார்க்கலாம்’னு கிண்டலா சொல்லிட்டு வெச்சுட்டேன். பிறகு, உண்மையான கிருத்திகா நம்பரை வாங்கி, அவரிடம் நடந்த விவரங்களைச் சொன்னேன். 'உங்ககிட்ட நான் பேசலை, அங்கிள்’னு சொன்னாங்க.''

இதுபோலவே, கடந்த 20 நாட்களுக்கு முன், முன்னாள் அமைச்சர்  கீதா ஜீவனைத் தொடர்புகொண்டு பேசி உள்ளது அந்தப் பெண் குரல். 'என்னுடைய தம்பி இன்பநிதியும் அவனோட நண்பர்களும் திருச்செந்தூர் வர்றாங்க. அவங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செஞ்சு கொடுங்க’ என்று கட்டளை போட்டுள்ளார். இதையடுத்து, திருச்செந்தூர் வந்த ஆறு பேர் கொண்ட கும்பலுக்கு, கீதா ஜீவன் சகல வித சௌகரியங்களையும் செய்து கொடுத்தது தனி தமாஷ்.

டிஸைன்.. டிஸைனா ஏமாத்துறாங்க!

பிடிபட்ட கதை:  இப்படி பிரபலங்களுடன் பேசிக்கொண்டிருந்த அந்த மர்மக்குரலுக்குச் சொந்தக் காரர் பணம் பறிக்க ஆரம்பித்தபோதுதான் பிரச்னை வெளிவரத் தொடங்கியது. தினேஷ்குமாரை போலீஸில் பிடித்துக்கொடுத்த உதவிஇயக்குநர் மௌரியன் அதைப்பற்றி விவரிக்கிறார்.

''என் சொந்த ஊர் திருச்செந்தூர். 13 வருஷமா சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருக் கேன். கடந்த 13-ம் தேதி ஊர்ல இருந்து பேசின என் அண்ணன் ராபர்ட், 'உதயநிதியோட மைத்துனர் இன்பநிதி தன் நண்பர்களோட திருச்செந்தூர் வந்திருந்தார். அவர்கிட்ட உன்னைப்பத்தி சொன் னேன். உன்னைப் பேசச் சொன்னார்’ என்று செல்போன் நம்பர் கொடுத்தார்.  

'ரெட் ஜெயண்ட் மூவிஸ்ல படம் இயக்கும் வாய்ப்பு வாங்கிக் கொடுங்க’னு அவர்கிட்ட கேட் டேன். கொஞ்ச நேரம் கழித்துப் பேசியவர், 'அக்கா உங்களைப் பேச சொன்னாங்க’னு ஒரு மொபைல் நம்பர் கொடுத்தார். அதுல பேசினேன். அப்புறம் இன்பநிதி(?) ஒருநாள், 'அண்ணே... கேட்கவே தயக்கமாக இருக்குது. எனக்கு அவசரமாக ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுது. ரெண்டு நாளில் திருப்பித் தந்துடுறேன்’னு சொன்னார். என்கிட்ட 50 ஆயிரம்தான் இருக்குன்னு சொன் னேன். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரச்சொல்லி பணத்தை வாங்கிக்கிட்டார்.  

இந்த சம்பவத்துக்குப் பிறகுதான், 'கிருத்திகா பெயரைப் பயன்படுத்தி போலி யான நபர்கள் பேசுவதை நம்ப வேண்டாம்’ என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். உடனே அந்த அறிவிப்பில் இருந்த வழக்கறிஞர் ரமன்லாலைத் தொடர்புகொண்டு விவரங்களைச் சொன்னேன். அவரது ஆலோசனைப்படி, அவனிடம் தொடர்ந்து பேசி மடக்கிப் பிடித்தோம்'' என்றார்.

கைது செய்யப்பட்ட தினேஷ§க்கு சொந்த ஊர்  ஸ்ரீரங்கம். கிருத்திகா என்ற பெயரிலும், இன்பநிதி என்ற பெயரிலும் இவரே மாறிமாறிப் பேசி இருக்கிறார். 'தி.மு.க. மகளிர் அணியில் உள்ள நூர்ஜஹான்தான் என்னை இப்படி பேசச் சொன்னார்’ என்று அவர் சொல்லவும்... போலீஸ் அதுபற்றியும் விசாரிக்கும் மூடில் இருக்கிறது.

மாநில மகளிர் அணி தலைவியாக இருக்கும் நூர்ஜஹானிடம் நாம் இதுபற்றி கேட்டபோது பதறியவர், ''அவன் என்கிட்ட உதயநிதி குரல்ல பேசி, 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தைப் பத்தி கருத்து கேட்டான். நானும் தளபதியோட மகனே கருத்து கேட்கிறாரேனு சந்தோஷப்பட்டேன். அடுத்து, 'நான் கிருத்திகாவின் தம்பி இன்பநிதி’னு ஒரு போன் வந்தது. அதுக்கப்புறம் எங்க வீட்டுக்கு நேர்ல வந்து இன்பநிதினு சொல்லி என்னோடு சேர்ந்து போட்டோ எடுத்துக்கிட்டான். அப்புறம் ஒருநாள் தளபதியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்துச்சு. அவர் ஒரு தொலைபேசி உரையாடலை எனக்குப் போட்டுக் காட்டினார். அதில், என்கிட்ட பேசின அதே குரல். என் பெயரை முன்வைத்து, ஒரு வி.ஐ.பி-யிடம் பேசும் உரையாடல் இருந்தது. நான் பதறிப்போய்... நடந்ததை எல்லாம் தளபதியிடம் சொன்னேன். அவர், 'இனியாவது எச்சரிக்கையா இருங்க. யாரோ ஒருத்தன் உங்கள் பெயரைச் சொல்லி விளையாடுகிறான். நானும் போலீஸில் புகார் செய்கிறேன்’ என்றார். அவன் ஏன் என் பெயரைப் பயன்படுத்தினான் என்பதுதான் எனக்குப் புரியவில்லை'' என்றார் நொந்தவராக.

அம்மா குரலில் ஒரு வெள்ளந்தி வெள்ளியங்கிரி என்றால்... இந்த முகாமுக்கு ஒரு வில்லங்க தினேஷ்! இனி பெரிய ஆளுங்கனு போன் வந்தா  ஜாக்கிரதை, டோய்!  

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism