Published:Updated:

பொறுத்து இருந்து பாருங்க...!

ஆவேசத்தில் பிரியா மகாலட்சுமி

பொறுத்து இருந்து பாருங்க...!

ஆவேசத்தில் பிரியா மகாலட்சுமி

Published:Updated:
##~##

'அம்மா பெயரைச் சொல்லி ஒரு போன்!’ - கடந்த ஜூ.வி-யின் கவர் ஸ்டோரி இது. மேடத்தின் (ஜெயலலிதா) மகள் என்று சொல்லி பலரிடமும் போனில் பேசியதாகச் சொல்லப்படும் பிரியா மகாலட்சுமியை விசாரணை வளையத்துக்குள் போலீஸ் கொண்டு வந்திருப்பதைக் குறிப்பிட்டு இருந்தோம். 

பிரியா மகாலட்சுமி மீது புகார் கொடுத்ததாக கோவிந்தன் என்ற பெயர் தெரிய வந்தது. அவரைத் தேடிப்பிடித்​தோம். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர்தான் கோவிந்தன். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். ''ஆளும் கட்சித் தலைமைக்கு நெருக்கமான உறவுக்காரப் பெண் கிருஷ்ணகிரியில் ஒரு நிறுவனம் நடத்துவதாகவும், அதற்குத் தேவைப்படுவதாகவும் சொல்லி மூன்று பேர் என்னைச் சந்தித்து ஐந்து கோடி ரூபாய் பணம் கேட்டாங்க. 'அந்தப் பொண்ணு நினைச்சா எவ்வளவு வேணும்னாலும் புரட்ட முடியும். ஆனால் முதல்வர் வேறு வேலையில் பிஸியா இருக்கிறதால, அவங்ககிட்ட பணம் கேட்கத் தயங்கிட்டுத்தான் உங்ககிட்ட கேட்குறாங்க. மேல இருந்து பணம் வந்ததும் உங்களுக்குக் கொடுத்துடுவோம்’னு சொன்னாங்க. நீங்க விரும்பினா அந்தப் பெண்ணை சந்திக்க ஏற்பாடு செய்றோம்னு சொன்னாங்க. ஏதோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொறுத்து இருந்து பாருங்க...!

தப்பு நடக்குதுன்னு என் மனசுக்குப் பட்டதால மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுதேன்.

அடுத்த தடவை அந்த மூணு பேரும் என்னை ஓர் இடத்துக்கு வரச் சொன்னாங்க. நானும் போலீஸுக்குத் தகவல் சொல்லிட்டுப் போனேன். போலீஸ் உள்ளே வந்து அந்த மூணு பேரையும் பிடிச்சிட்டாங்க. அதுக்குப்பிறகு, மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பேசிய ஒரு பொண்ணு, 'நான் யாரு தெரியுமா... எங்க ஆளுங்களையே அரெஸ்ட் பண்றதுக்கு உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது?’னு மிரட்டி இருக்கு. ஆனாலும், போலீஸ் தயவுதாட்சண்யம் காட்டாம அந்த ஆட்களை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அடுத்த சில நாட்களில் போனில் மிரட்டிய அந்தப் பெண்ணையும் கைது பண்ணிட்டாங்கனு கேள் விப்​பட்டேன்'' என்றார்.

முதல்வரின் மகள் என்று சொல்லி மிரட்டிய பிரியா மகாலட்சுமி மீது,  வழக்குப் பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்து இருக்கின்றனர். பிரியா மகாலட்சுமியின் தந்தை பெயர் ராமச்சந்திரன் என்று போலீஸ் பதிவில் இருக்கிறது.

''சாதாரணமா ஒரு பிக்பாக்கெட் கேஸ் பிடிச்சாகூட பத்திரிகைகாரங்களைக் கூப்பிட்டு போட்டோ எடுத்துக் கொள்ளும் போலீஸார், இந்த விஷயத்தை ரொம்பவே கமுக்கமாக அடக்கி வாசித்து இருக்கிறார்கள். பிரியா மகாலட்சுமியை சத்தமில்லாமல் கைது செய்து சேலம் ஜெயிலுக்குக் கொண்டு போனது வரை யாருக்கும் வெளியில் தெரியாது. சேலம் ஜெயில்ல அடைச்ச பிறகும் கூட பிரியாவைப் பார்க்க கட்சிக்காரங்க நிறையப் பேர் வந்துட்டுப் போறாங்க. 'அம்மா கொடநாட்டுல இருக்​கிறதால என்னைக் கைது செஞ்ச விஷயத்தை அவங்களுக்குத் தெரியாம மறைச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இதுக்குக் காரணமானவங்க என்ன ஆகப்போறாங்கன்னு பொறுத்து இருந்து பாருங்க...’ என்று இப்போதும் பார்க்க வருபவர்களிடம் சொல்கிறாராம் பிரியா. அவரைக் கைது செய்த

பொறுத்து இருந்து பாருங்க...!

இன்ஸ்பெக்டர் மெடிக்கல் லீவில் போய் விட்டார். இன்ஸ்பெக்டர் லட்சுமிதான் இந்த வழக்கை இப்போது விசாரிக்கிறாங்க'' என்று, அந்த கில்லாடிப் பெண் விவகாரத்தைச் சொன்னார்கள் விவரமறிந்தவர்கள்.

இன்ஸ்பெக்டர் லட்சுமியைத் தொடர்பு கொண்​டோம். ''அந்தக் கேஸை விசாரிச்சு முடிச்சி ஃபைலை எங்க டி.எஸ்.பி-கிட்ட கொடுத்துட்டேன். இதுதொடர்பா எதுவாக இருந்தாலும் நீங்க அவர்கிட்டேயே பேசிக்கொள்ளுங்கள்'' என்று நழுவிக் கொண்டார்.

பென்னாகரம் டி.எஸ்.பி. நடராஜனிடம் பேசினோம். ''நீங்க சொல்ற கேஸ் பற்றிய விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. நான் இன்னும் விசாரிக்கவில்லை'' என்று நம் குழப்பத்தைக் கூட்டினார் அவர்.

பிரியா மகாலட்சுமி என்ற ஒரு பெண்ணை ,மோசடி செய்ததாக கைது செய்து விட்டாலும், இதுகுறித்து பேசவோ... அவர் முகத்திரையை முழுதாகக் கிழிக்கவோ போலீஸாருக்கு ஏன்தான் இந்த உதற​லோ?

- கே.ராஜாதிருவேங்கடம், எஸ்.ராஜாசெல்லம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism