Published:Updated:

வணக்கம், பஸ்தார்

வணக்கம், பஸ்தார்

வணக்கம், பஸ்தார்

வணக்கம், பஸ்தார்

Published:Updated:

ராகுல் பாண்டிடா (தமிழில்: மு.ந.புகழேந்தி), எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி - 642 002. விலை

வணக்கம், பஸ்தார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

120.

##~##

மாவோயிஸ்ட்கள் யாரையாவது கடத்தி​னால் மட்டும்தான், வடகிழக்கு மாகாணங்கள் பற்றி நமக்கு ஞாபகம் வரும். கடத்தப்பட்டவர் விடுதலை ஆனதும், மீண்டும் மறந்து போகும். ஆனால், இந்தியாவின் கால்வாசிப் பகுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஓர் உள்நாட்டு யுத்தம் சத்தம் இல்லாமல் நடந்து வருகிறது, அழிவின் தொகை அறிவிக்கப்படாமல்!

மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் என்று ஆரம்ப காலத்​திலும் நக்சலைட்கள் என்று அதற்குப் பிறகும், இப்போது மாவோயிஸ்ட்கள் என்றும் அடையாளப்​படுத்தப்​படும் இந்த ஆயுதம் தாங்கிகளின் போராட்ட இலக்கும், நடைமுறைச் சித்தாந்தங்களும் என்ன என்பதை, 'ஓப்பன் மேகசின்’ இதழின் மூத்த சிறப்பு நிருபர் ராகுல் பாண்டிடா மிக விரிவாக எழுதி இருக்கிறார். அதன் தமிழாக்கம்தான் இந்தப் புத்தகம்.

வணக்கம், பஸ்தார்

'இந்திய மாவோயிஸ்ட் இயக்கத்தின் வெளிவராத 50 ஆண்டு கால வரலாறு’ என்ற அடைமொழிக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் ராகுல் பாண்டிடா இதை எழுதி இருக்கிறார். இந்தியாவில் மாவோ​யிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கொபாட் காண்டியை, அவருக்குத் தகவல்கள் எடுத்துச் செல்லும் சிறுவனே போலீஸுக்குக் காட்டிக் கொடுத்த காட்சியில் இருந்து இந்தப் புத்தகம் விரிகிறது. அப்பாவிகளை, 'மாவோயிஸ்ட்கள்’ என்று சொல்லி சுட்டுக்கொல்ல... 'அப்பாவிகள்’ மாவோயிஸ்ட்களாக மாறிய காட்சிகள் அங்குலம் அங்குலமாக விவரிக்கப்படுகின்றன.

கம்ப்யூட்டர் இல்லாமல், தொழில்நுட்பம் இல்லாமல், பட்டதாரிகளின் தயவு இல்லாமல் பல்லாயிரம் கோடி சம்பாதிக்க முடியும் என்று காட்டியவர்கள், இயற்கை வளங்களைச் சுரண்டிச் செல்லும் நிறுவனங்கள். இந்த நிறுவனங்களுக்கு எதிராகத்தான் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியைத் தூக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அந்த மண்ணின் மைந்தர்களான பழங்குடியினர் வில், அம்பு, வாள்களுடன் கை கோத்துள்ளார்கள் என்றும் பாண்டிடா விவரிக்கிறார். நக்சல்பாரி, ஸ்ரீகாகுளம் தொடங்கி இன்றைய பஸ்தார் வரை சிவப்புப் புரட்சியாளர்கள் நிழல் படிந்த இடங்கள் மொத்தத்துக்கும்  பயணம் செய்த அனுபவம் இந்தப் புத்தகத்தின் மூலம் கிடைக்கிறது. சாரு மஜும்தார், கொண்டபள்ளி சீத்தாராமையா, கணபதி, கிஷன்ஜி, அனுராதா போன்ற புரட்சியாளர்களின் முகங்களையும் பார்க்க முடிகிறது.

அதிகாரிகளைக் கடத்துபவர்கள், போலீஸ்காரர்களைக் கொல்பவர்கள் என்ற பொதுஅடையாளங்களில் இருந்து மாவோயிஸ்ட்களின் கோரிக்கை நியாயங்களை இந்தப் புத்தகத்தில் வெளிச்சப்படுத்தினாலும், முழுமையாக அவர்களை பாண்டிடா ஆதரிக்கவில்லை. பல இடங்களில் விமர்சிக்கவும் செய்கிறார். காரணம், பல்வேறு பகுதிக்கும் சென்று அவர்களைச் சந்தித்ததனாலேயே, மாவோயிஸ்ட்களின் முழுபலமும் பலவீனமும் புரிந்து இருக்கிறது. வடபுலத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை என்பதாக இல்லாமல் சமூக ஒழுங்குப் போராட்டமாகப் பார்க்கத் தூண்டுகிறது இந்தப் புத்தகம்!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism