Published:Updated:

''சீழ் உள்ள இடத்தில்தானே அறுவைசிகிச்சை பண்ணணும்!''

கல்விப் போராட்டம்... லத்தியால் கலைத்த போலீஸ்!

''சீழ் உள்ள இடத்தில்தானே அறுவைசிகிச்சை பண்ணணும்!''

கல்விப் போராட்டம்... லத்தியால் கலைத்த போலீஸ்!

Published:Updated:
##~##

ரிமைக்காகப் போராடினால், ஏனோ போலீஸுக்குப் பிடிப்பதே இல்லை. கல்வி உரிமை வேண்டி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தை முற்றுகையிட முயன்ற புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியினரைக் காட்டுத்தனமாகத் தாக்கி இருக்கிறது போலீஸ்! 

'கல்விக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம்... உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையைக் காப்போம்’ என்ற வாசகங்களைத் தாங்கிய போஸ்டர்கள் சென்னை கல்லூரிச் சாலை, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் கடந்த 27-ம் தேதி இரவு ஒட்டப்பட்டது. அதில், '28-ம் தேதி காலை பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்’ என்று அறிவிக் கப்பட்டு இருந்தது. இதனால் பதறிப்போன காவல் துறை, காலை 9 மணிக்கே பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முன் போலீஸ் படையைக்  குவித்து விட்டது. இயக்குநரகத்தின் வாசல்களை மறித்தும் போலீஸ் வேன்கள் நிறுத்தப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சீழ் உள்ள இடத்தில்தானே அறுவைசிகிச்சை பண்ணணும்!''

காலை 10 மணிக்கு, கையில் பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்திக்கொண்டு கோஷமிட்டவாறு புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியினர் வந்தனர். கைக்குழந்தைகளுடன் திரளான பெண்களும், பள்ளிச்சிறுவர்களும் கூட வந்திருந்​தனர். நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் வெங்கடாஜலபதி, 'முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டாம். கல்வித் துறை இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள். நான் ஏற்பாடு செய்கிறேன். உங்களில் யாராவது ஐந்து பேர் மட்டும் வாருங்கள்’ என்று, போராட்டக்காரர்களை சமாதானப்​படுத்திப் பார்த்தார்.  ஆனால், அதை ஏற்கவில்லை போராட்டக்காரர்கள். இதைஅடுத்து, அவர்கள் இயக்குனரகத்துக்குள் நுழைந்து முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றபோது, காவல்துறையின் லத்திகள் சுழலத் தொடங்கின. அதன்பிறகு நடந்ததைத் தான் புகைப்படங்களாகப் பார்க்கிறீர்கள்! இப்படி ஒரு கொடூரத் தாக்குதல் தேவையா என்று துணை ஆணையர் பாஸ்கரனிடம் கேட்ட போது, ''போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற​வில்லை. அது சட்டப்படி குற்றம். அதனால்தான் அவர்களைக் கைது செய்துள்ளோம்'' என்றார்.  

''சீழ் உள்ள இடத்தில்தானே அறுவைசிகிச்சை பண்ணணும்!''
''சீழ் உள்ள இடத்தில்தானே அறுவைசிகிச்சை பண்ணணும்!''
''சீழ் உள்ள இடத்தில்தானே அறுவைசிகிச்சை பண்ணணும்!''

புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் கார்த்தி​கேயனைத் தொடர்புகொண்டு பேசினோம். '' ஏழை மக்களுக்குக் கல்வி என்பதே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. அதற்கு நீதி கேட்டுத்தான் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்றோம். நாங்கள் வேறு எந்த வன்முறைச் செயல்களிலும் ஈடுபடவில்லை. ஆனால், எதற்காகவும் எந்தப் போராட்டமும் நடத்தவே கூடாது என்கிறது காவல்துறை. அதனால்தான் அன்றைக்கு நாங்கள் ஜனநாயக வழியில் நடத்திய போராட்டத்தை, காவல் துறையினர் தடியடி நடத்திக் கலைத்தார்கள். பெண்கள், குழந்தைகள் மீதுகூட இரக்கம் காட்டவில்லை. போராட்டம் நடத்த வேண்டும் என்றால், கலெக்டர் ஆபீஸுக்கு அருகிலும், மெமோரியல் ஹால் அருகிலும்தான் நடத்த வேண்டும் என்கின்றனர். அங்கு போராட்டம் நடத்தினால், அது யாருக்கும் தெரியாது. கல்வியைத் தனியாருக்கு தாரை வார்க்க உடந்தையாக இருப்பது பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம்தான். சீழ் பிடித்துள்ள இடத்துக்குத்தானே அறுவை சிகிச்சை தேவை. அதனால்தான் நாங்கள் அங்கு போராட்டம் நடத்தினோம்'' என்று விளக்கம் அளித்தார்.

போராட்டக்காரர்களைக் 'கவனிப்பது’ அல்ல... போராட்டத்துக்கான காரணங்களைக் கவனிப்பதுதான் நல்ல அரசுக்கு அழகு!

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism