Published:Updated:

விடுதலைப் போரின் வீர மரபு

விடுதலைப் போரின் வீர மரபு

விடுதலைப் போரின் வீர மரபு

விடுதலைப் போரின் வீர மரபு

Published:Updated:
##~##

கீழைக்காற்று வெளியீட்டகம், 10 அவுலியா தெரு, எல்லீசு சாலை,

சென்னை - 2. விலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விடுதலைப் போரின் வீர மரபு

. 65  

தியாகிகளையும் துரோகிகளையும் அடை​யாளம் காட்டும் புத்தகம். இந்திய விடு​தலைப் போராட்டத்தை, காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தில் இருந்து மட்டுமே தொடங்கும் வரலாற்றுப் பதிவுகள் அதிகமாகி விட்ட காலத்தில், அந்த யுத்தத்துக்கு முன்னால் இந்த நிலப்பரப்பில் சுமார் 100 ஆண்டு காலம் ஆயுதப் போராட்டம் நடந்துள்ளது என்பதை விளக்கும் ஆவணங்கள் குறைவு. அப்படியே வந்தாலும் அவை ஏற்கெனவே சொல்லப்பட்ட கட்டபொம்மன், பூலித்தேவன், மருதுபாண்டியர் போல அறியப்பட்ட செய்திகளாகவே இருக்கும். அந்த எல்லைகளைத் தாண்டி எழுதப் பட்ட கட்டுரைகள் இவை.

விடுதலைப் போரின் வீர மரபு

தென் தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வாள் வீசிய​வர்​​களைப் பற்றி, 'வெள்​ளை​யர்க்கு வரி கொடுக்க மறுத்​தவர்கள், தங்களது ஆட்சி அதிகாரம் பறிபோய்விடும் எனப் பயந்த​வர்கள்தான். அவர்​களுக்கு நாடு விடுதலை அடைய​வேண்டும் என்ற பரந்துபட்ட நோக்கம் இல்லை’ என்று சிலர் இன்னமும் எழுதி வருகிறார்கள். ஆங்கிலப் படைகளை காலனி ஆதிக்கப் படைகளாகவும், அவர்களது சர்வாதிகாரத்துக்கு எதிராகவே நம்முடைய குறுநில மன்னர்களும் பாளை​யக்​காரர்​களும் போர் தொடுத்​தார்கள் என்பதை இந்தப் புத்தகத்தின் மூலமாகத் தெரிந்து​கொள்ள முடிகிறது. அதைவிட முக்கியமாக, அனைத்துப் போராளிகளும் இணைந்து ஒரு கூட்டணியை அமைக்க முயற்சித்த நிகழ்வு பிரமிப்பை உண்டாக்குகிறது.

கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்றவர்கள் இணைந்து 'தீபகற்பக் கூட்டணி’ என்ற ஒன்றை அமைக்க முயற்சித்தார்கள். இது பழனியில் நடந்தது என்றும் அந்தக் கூட்டணி மட்டும் அமைந்திருந்தால், தென்பகுதிக்குள் பிரிட்டிஷாரின் வருகை தவிர்க்கப்பட்டு இருக்கும். 'பழனி சதித்திட்டம்’ என்று பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளால் சொல்லப்படும் இந்தக் கூட்டணியின் முதல் தாக்குதல், துரதிர்ஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவியதால்... அனைவரும் தூக்கிலிடப்பட்டார்கள். தூந்தாஜி வாக் மற்றும் கோபால் நாயக்கர் பற்றிய தகவல்கள் புதிதாக இருக்கின்றன.

அதேபோல், வறுமையின் காரணமாக வாடிய வ.உ.சி-க்கென தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பணம் திரட்டிக் கொடுத்ததை, காந்தி அவருக்குத் தரவில்லை. தூக்கு மேடையில் இருந்த பகத்சிங்கை காப்பாற்ற முயற்சிக்காத காந்தி, அந்தத் தண்டனையை நிறைவேற்றும் நேரத்தைத் தள்ளி வைக்குமாறு மட்டுமே கேட்டுக்கொண்டார். வ.உ.சி-க்கு சிலை வைக்கும் ம.பொ.சி-யின் முயற்சியை அன்றைய தமிழ்​நாடு காங்கிரஸ் தலைவர் சத்திய​மூர்த்தி தடுத்தார் என்பன போன்ற சர்ச்சைக்​குரிய அதிர்ச்சித் தகவல்களை இந்தப்புத்தகம் நெடுகிலும் வாசிக்க முடிகிறது.

'இதோ, கட்டபொம்மன் வீழ்ந்த மண்ணில் இருந்து வ.உ.சி. எழுகிறார். பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கத்தை இந்த மண்ணில் ஒலித்த திப்புவைத் தொடர்ந்து, ரகசியப் புரட் சியின் சோஷலிசத்தை முழங்க பகத்சிங் வருகிறார். இந்திய விடுதலைப்

போராட்ட மரபில்தான் எத்தனை மின்னல்கள், இடிமுழக்கங்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் மழை மேகத்தைக் கலைத்துச் சென் றிருக்கிறது துரோகத்தின் காற்று’ என்று முடிகிறது இந்தப் புத்தகம்.

காலனி ஆதிக்கத்தை எதிர்த்து அன்று இவர்கள் போராடினார்கள். நவீன காலனி ஆதிக்​கத்துக்கு எதிரான போராட்டத்தை எப்போது தொடங்கப்​போகிறீர்கள் என்ற கேள்வியை விதைக்கவே பழைய வரலாறு மீண்டும் பரிமாறப்படுகிறது!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism