Published:Updated:

நடிகர் கமல்ஹாசன் மகள் சுருதிஹாசனை தாக்கியவர் கைது!

நடிகர் கமல்ஹாசன் மகள் சுருதிஹாசனை தாக்கியவர் கைது!
நடிகர் கமல்ஹாசன் மகள் சுருதிஹாசனை தாக்கியவர் கைது!
நடிகர் கமல்ஹாசன் மகள் சுருதிஹாசனை தாக்கியவர் கைது!

மும்பை: நடிகர் கமல்ஹாசன் மகள் நடிகை சுருதிஹாசனை மும்பை அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து தாக்கிய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை சுருதிஹாசன் மும்பை பாந்திரா கடற்கரையோர பகுதியில் உள்ள மேரி நிகேதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 19 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அவரது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. கதவை திறந்து பார்த்தபோது வாசலில் அடையாளம் தெரியாத ஒருவர், சுருதிஹாசனின் தோள்பட்டையை பிடித்தபடி அவரை தாக்க முற்பட்டார். உடனே சுதாரித்து கொண்ட சுருதிஹாசன், அந்த நபரை வேகமாக பிடித்து தள்ளி விட்டு, கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து அந்த ஆசாமி அங்கிருந்து தப்பித்து விட்டார். இதையடுத்து, நடிகை சுருதிஹாசன், பாந்திரா போலீசில் புகார் செய்தார். தாக்குதல், மானபங்கம் செய்ய முயற்சி, அத்துமீறி நுழைதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுருதிஹாசனை தாக்கியவரை நேற்று மும்பை தாராவியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் அசோக் சந்தர் திருமூக்கே (வயது 45) என்று தெரியவந்தது.

##~~##
இதுபற்றி அசோக் சந்தர் திருமூக்கே, போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ''நான் மும்பையில் உள்ள போரிவிலி திரைப்பட நகரில் உதவியாளராக வேலை செய்து வருகிறேன். சுருதிஹாசனுக்கு உதவியாளர் தேவை என்று கேள்வி பட்டேன். எனது தம்பி வேலை எதுவும் இன்றி இருக்கிறான். இதனால் அந்த வேலையை அவனுக்கு வாங்கி கொடுக்க முயற்சி செய்தேன்.
இதற்காக சுருதிஹாசனை நேரில் சந்திக்க முடிவு செய்தேன். படப்பிடிப்பு நடந்த இடங்களுக்கு சென்று அவரை சந்திக்க முற்பட்டேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. இதனால் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரில் சென்று சுருதிஹாசனை சந்திக்க முற்பட்டேன். அவரை நான் தாக்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
கைதான அசோக் சந்தர் திருமூக்கேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.