Published:Updated:

ஆஸ்ரா கர்க்கை மாற்றத் துடிக்கிறாரா அமைச்சர்?

திருப்பூர் திகு திகு...!

##~##

'மணல் கொள்ளை மற்றும் லஞ்சத் துக்கு எதிராகப் போராடிவரும் திருப்பூர் எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கை, அங்கு இருந்து மாற்றுவதற்காக ஆளும் கட்சிப் புள்ளிகள் உள்ளடி வேலைகளில் ஈடுபடு கிறார்கள்’ என்று பரவி இருக்கும் தகவல்தான், இப்போது திருப்பூர் ஹாட்! 

இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரவி. ''ஆஸ்ரா கர்க் எஸ்.பி-யாக வந்தபிறகு, குற்றங்கள் நிறைந்த மாவட்டமான திருப்பூரை இரும்புக்கரம் கொண்டு அடக்க ஆரம்பித்தார். லஞ்சம் வாங்குபவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். திருப்பூர் மாவட்டத்தின் மிகப் பெரிய பிரச்னையான மணல் கொள்ளையைத் தடுக்க ஆர்வம் காட்டினார். இது ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலருக்குப் பிடிக்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கரூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவில் வழியாகத்தான் கோவை மற்றும் கேரள மாநிலப் பகுதிகளுக்கு மணல் கொண்டுபோக முடியும் என்பதால், மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர மாக்கினார். அத்துடன், அரசு நிர்ணயித்த அளவுக்கு மேல் மணல் ஏற்றி வரும் லாரிகளுக்கு அபராதமும் விதிக்கத் தொடங்கினார். இதனால் கோபமான

ஆஸ்ரா கர்க்கை மாற்றத் துடிக்கிறாரா அமைச்சர்?

லாரி உரிமையாளர்கள், அவரின் நடவடிக்கையைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்தனர். இந்தப் பிரச்னையைப் பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கவனத்துக்கு கொண்டு போன தாகவும், அவர் ஆஸ்ரா கர்க்கைக் கூப்பிட்டுக் கடிந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள். ஆனாலும் எஸ்.பி. அசரவில்லை. இதனால் கொந்தளித்துப் போன மணல்காரர்கள், ஆஸ்ரா கர்க்கை இங்கிருந்து மாற்றாமல் விட மாட்டோம் என்று சென்னைக்குக் கிளம்பிப் போயிருக்கிறார்கள். அப்படி இந்த மணல் மாஃபியாக்களின் குரலுக்கும் பணத்துக்கும் செவிசாய்த்து, எஸ்.பி-யை இங்கிருந்து மாற்றினால் சும்மா இருக்க மாட்டோம்'' என்று எச்சரித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி-யான சுப்பராயனும் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார். ''நல்ல போலீஸ் அதிகாரிகள் எந்த ஊருக்கு வந்தாலும், அந்த ஊரில் இருக்கும் கொள்ளைக்கும்பலுக்கு அவர்களைப் பிடிக்காது. ஆஸ்ரா கர்க் வந்ததும் அவரை மாற்ற வேண்டும்

ஆஸ்ரா கர்க்கை மாற்றத் துடிக்கிறாரா அமைச்சர்?

என்று பலரும் துடித்தனர். இப்போது பொதுப்பணித் துறை அமைச்சர் மூலமாக மணல் மாஃபியாக்கள் அந்த வேலையில் இறங்கி இருக்கிறார்கள். இதற்கு அமைச்சர் துணை போகக் கூடாது'' என்று வேண்டுகோள் வைத்தார்.

கோவை மண்டல மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க அமைப்பாளர் பாரதியிடம் இதுபற்றிப் பேசினோம்.. ''ஆறு சக்கர லாரியில் மூன்று யூனிட் மணலும், டாரஸ் லாரியில் நான்கரை யூனிட் மணலும் எடுத்துச் செல்லலாம் என்று தமிழக அரசு வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறது. இது தெரியாமல், எஸ்.பி. லாரிகளை மடக்கி அபராதம் விதிக்கிறார். முதல்வரையும்

ஆஸ்ரா கர்க்கை மாற்றத் துடிக்கிறாரா அமைச்சர்?

அமைச்சரையும் சந்தித்து எங்கள் பிரச்னையை எடுத்து சொல்லப் போகிறோம்'' என்று மட்டும் சொன்னார்.

லாரி வேலை நிறுத்தம் நடந்த சூழ்நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு உடுமலைப்பேட்டை டூ தாராபுரம் ரூட்டில், அளவுக்கு அதிகமாக மணலை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி போயிருக்கிறது. மடத்துக்குளம் எஸ்.ஐ. மணிமாறன் அந்த லாரியை மறித்து விசாரித்து இருக்கிறார். ஓவர்லோடு என்று தெரிந்ததும், 9,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். லாரி டிரைவரோ பேரம் பேசி, 4,000 ரூபாயை எஸ்.ஐ-க்குக் கொடுத்து விட்டு மணலோடு கிளம்பி விட்டார். அந்த ஏரியாவைச் சேர்ந்த ஒருவர் இதைக் கவனித்து எஸ்.பி-க்குத் தகவல் சொல்லி விட்டார். அதிரடியாக களத்தில் குதித்த ஆஸ்ரா கர்க்,  அந்த லாரியைத் தேடிப்பிடித்து, லஞ்சம் கொடுத்ததை விசாரணையில் உறுதி செய்து, எஸ்.ஐ. மணிமாறனை சஸ்பெண்ட் செய்தார்.

அதோடு ஒயர்லெஸ்ஸில், 'லஞ்சம் வாங்கியதற்காக ஒரு போலீஸ் ஆபீஸர் சஸ்பெண்ட் செய்யப்படுவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் என்னிடம் கேளுங்கள். பணியில் என்ன சிரமம் இருந்தாலும், என்னிடம் சொல்லுங்கள். ஆனால், லஞ்சம் மட்டும் வாங்காதீர்கள். அதைப்போல ஒரு கேவலமான செயல் வேறு எதுவும் இல்லை’ என்றாராம்.

அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்திடம் பேசினோம். ''வேலைநிறுத்தம் செய்த மணல் லாரி உரிமை யாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் மணல் லாரியை ஓட்ட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். அவர்களும் வேலைநிறுத்தத்தை வாபஸ் வாங்கி விட்டனர். எஸ்.பி-யை நான் எப்படி மாற்ற முடியும்? அப்படி ஒரு விஷயத்தை யாரும் என்னிடம் கொண்டு வரவில்லை. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காவல்துறைக்கு நாங்கள் எப்போதும் இடையூறாக இருக்கவே மாட்டோம்'' என்று நிதானமாகச் சொன்னார்.

ஆஸ்ரா கர்க்கின் அதிரடி தொடரட்டும்!

- கே.ராஜாதிருவேங்கடம்,  ம.சபரி

படங்கள்: ஆர்.வி.சுப்பு, க.ரமேஷ்