Published:Updated:

பூச்சிகளின் தேசம்

பூச்சிகளின் தேசம்

கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, 1447, அவினாசி சாலை,

கிருஷ்ணம்மாள் கல்லூரி அருகில், பீளமேடு, கோவை - 4. விலை:

பூச்சிகளின் தேசம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

.120

##~##

ந்து அறிவுதானே என்று மட்டப்படுத்தப்படும் பூச்சி இனங்களின் மகத்துவத்தைச் சொல்லும் புத்தகம் இது!

கரையான் புற்றைப் பார்த்து இன்னமும் பாம்புப் புற்று என்று சொல்லி வருபவர்கள்தான் அதிகம். பாம்புகள் புற்று கட்டுவதும் இல்லை. அதில் நிரந்தரமாக வாழ்வதும் இல்லை. ஆனால், நம்முடைய சினிமாக்களில் மட்டும்தான் பாம்புகள் அனைத்துமே புற்றுகளில் வாழ்ந்து வருகின்றன. பாம்பு​களுக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்று கரையான்கள். அதன் லட்சக்கணக்​கான முட்டைகளை உண்பதற்​காகத்தான் அந்தப் புற்றுக்குள் பாம்புகள் நுழைகின்றன. இதை தத்ரூபமாக விவரிக்கும் சதாசிவம், கரையான் எப்படி இந்த புற்றுகளைக் கட்டுகிறது என்ற கட்டுமானத்தைச் சொல்லும் போது பிரமிப்பாக இருக்கிறது.

'கரையான் புற்று வெறும் மண்​ணால் பிசைந்து ஒட்டவைப்பது என்று எளிதாக எண்ணி​விடா​தீர்கள்.

பூச்சிகளின் தேசம்

மிதமான வெப்பம், மிதமான குளிர் நிலவும் சூழலைக் கண்டறிந்து தமது வாழ்விடங்களை நிர்மாணிப்பதில் கைதேர்ந்தவை பணிக்கரையான்கள். புல், மரத்துகள், மண் கலவை, உணவின் எச்சம், கரையான்கள் உமிழும் அமிலம் ஆகிய பொருட்​களைக் கொண்டு கூம்பு வடிவங்​களில் புற்றுகளைக் கட்டமைக்​கின்றன கரையான்கள். புற்றின் உயரத்துக்கு ஏற்ப அடித்தளத்தையும் தீர்மானிக்கின்றன. புற்றின் சுரங்கப் பாதையில் உள்ள தனித்தனி வாழ்விடங்களுக்கும் பூஞ்சைத் தோட்டத்துக்கும் காற்றைக் கொண்டு செல்லவே புற்றில் நிறையத் துளைகளை உருவாக்கு​கின்றன. காற்றின் போக்குக்கு ஏற்ற மாதிரி அவ்வப்​போது துளைகளை மாற்றி அடைத்துக் கொள்ளும் நுண்ணறிவு கரையான்களுக்கு உண்டு. அதிக மழை பெய்யும் இடங்களில் குடை மாதிரியும் அதிக வெயில் அடிக்கும் பகுதிகளில் சூரிய ஒளி பட்டுச் சிதற கூர்மையாகவும் புற்றுகளை கட்டுமான உத்திகளோடு உருவாக்குகின்றன’ - என்ற தகவல்கள் நவீன கட்டுமான உத்திகளுக்குப் போட்டி போடும் தகுதிகளுடன் அமைந்துள்ளன. இவ்வளவையும் கட்டும் பணிக் கரையான்களுக்குப் பார்வை கிடையாதாம்!

எறும்புகள் ராணுவ வரிசைப்படி அணிவகுக்கும் காரணமும், மழையை முன்கூட்டியே உணர்ந்து கட்டடங்களின் மேல்பகுதிக்கு அவை இடம் பெயரும் திறமையும், உலகமே அணு ஆயுத்தால் சிதைக்கப்​பட்டாலும் அதில் இருந்து எஞ்சி இருக்கும் ஒரே உயிரினமான கரப்பான் பூச்சி இருக்கும் என்பது போன்ற ஆச்சர்யத் தகவல்கள் இந்தப் புத்தகம் முழுக்கவே காணக் கிடைக்கிறது. 'காடு பார்த்தல்’ என்பது இன்று வளர்ந்து வரும் ஒரு நல்ல பொழுதுபோக்குக் கலை. அந்தப் பாணியில் இந்தக் கட்டுரைகள் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன.

'அபூர்வமான தகவல்கள், சுவாரஸ்யமான விஷயங்​களுக்​காக மட்டும் இந்தப் புத்தகம் எழுதப்படவில்லை’ என்று சொல்லும் சதாசிவம், 'இயற்கையில் இருந்து வாழ்​கிறேன் என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் இயற்கையிடம் இருந்து அனைத்தையும் பெறுகிறான். மனிதனைக் காட்டிலும் முன்னேற்றம் அடைந்த உயிரினம் பூமியில் இல்லை. மனிதனின் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் போட்டிகளிலும் மற்ற உயிரினங்கள் ஈடுபடப் போவதில்லை. ஆனால் எதிர்காலம் என்பது, மனிதர்களுக்கு மட்டுமல்ல... பூமியில் உள்ள சகல உயிர்களுக்கும்தான். எல்லா உயிர்களோடும் பூமியைப் பகிர்ந்து கொள்ளும் மேலான, பண்பட்ட, வாழ்வு நெறியை மனிதகுலம் கடைப்பிடிக்க வேண்டும்’ என்கிறார்.

அனைத்து உயிரிகளையும் அன்பால் அரவணைக்கத் தூண்டும் புத்தகம் இது!

- புத்தகன்