அதே வேதனையின் தொடர்ச்சி, மீண்டும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. பொதுமக்கள் குற்றம் செய்தால் தேடித்தேடி கைது செய்து தண்டிக்கும் காவல்துறை, தங்களுக்குள் ஒருவரே அந்தத் தப்புக்குக் காரணமானவர் என்று சொல்லப்படும் போது எந்த மாதிரிப் பதுங்குகிறது என்பதற்கு உதாரணம் கடமலைக்குண்டு வசந்தியின் வாழ்க்கை!

'அப்பாவியாய் ஒரு பேருந்து நிலையத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த என்னை, அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்தே கற்பழித்துவிட்டார்கள். இதை மறைக்க என் மீதே பொய்வழக்கு போட்டு விட்டார்கள்’ என்று அந்த அப்பாவிப் பெண் நம்மிடம் வாக்குமூலம் கொடுத்தார். இந்தச் செய்தியை, 'பேய்களைக் கைது செய்யுமா அரசு?’ என்ற கட்டுரையாக 8.7.2012 தேதியிட்ட ஜூ.வி.யில் வெளியிட்டு இருந்தோம். அபலைப் பெண்ணைக் கற்பழித்த மிருகங்களின் பெயரை அதில் நாம் குறிப்பிடவில்லை. ஆனால், 'இந்தப் பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கிறதா என்பதை உன்னிப்பாக கவனிப்போம்' என்று சொல்லி இருந்தோம்!

நாடும், போலீஸும் அவ்வளவு சீக்கிரம் திருந்தி விட்டால் எப்படி! இரண்டு வாரங்கள் கடந்த பிறகும்

அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால் அவரை மிரட்டுவதும் அவர் மீது பழி போடுவதும் நிற்கவில்லை!

வசந்தி கையை நீட்டிக் குற்றம் சாட்டுவது கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அமுதன் ஆகிய இருவரைத்தான்!

இந்த விவகாரத்தை மதுரை எவிடென்ஸ் அமைப்பு கையில் எடுத்துள்ளது. அதன் அமைப்பாளர் கதிர் நம்மிடம் பேசினார்.

''சொக்காயி என்ற பெண்ணிடம் கால் கொலுசை அடகு வைத்துள்ளார் வசந்தி. அதைத் திருப்புவதற்காகச் சென்றபோதுதான் போலீஸாரின் வன்புணர்ச்சி மற்றும் பாலியல் பலாத்காரக் கொடுமைக்கு ஆட்பட்டு உள்ளார். அந்தப் பெண்ணிடம் நான் விசாரித்தேன். சம்பவத்தின் அதிர்ச்சி நீங்காதவராக இருக்கிறார். பிப்ரவரி மாதம் நடந்த சம்பவத்துக்கு இப்போது வந்து புகார் கொடுப்பார்களா என்று போலீஸ் தரப்பு கிண்டலாகக் கேட்கிறது. இடைப்பட்ட இந்த மூன்று மாதங்களும் வசந்தியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்பதே உண்மை.

மூன்று நாட்கள் சட்டவிரோத போலீஸ் காவலில் வசந்தி வைக்கப்பட்டார். அதன்பிறகு இரண்டு நாட்கள் மருத்துவமனை சிகிச்சை. அதற்குப் பிறகு ஐந்து நாட் கள் கஸ்டடி, பிறகு 17 நாட்கள் நீதிமன்றச் சிறை. எந்தக் காவல் நிலையத்தில் வைத்து அவருக்கு பலாத்காரம் நடந்ததோ... அதே இடத்தில் 31 நாட்கள் இவர் தினமும் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டிய அவல நிலை. இப்படி போலீஸ் பார்வைக்குள்ளேயே இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் கொண்ட அந்த அப்பாவிப் பெண்ணால் எப்படி போலீஸ் மீது புகார் சொல்லியிருக்க முடியும்? 'புகாரை வாபஸ் வாங்கு' என்று அந்தப் பெண்ணிடம் பேரம் இன்னமும் நடப்பது எஸ்.பி-க்குத் தெரியுமா? 'வசந்தி மீது திருட்டுக் குற்றம் உள்ளது’ என்பதையே போலீஸ் திரும்பத் திரும்பச் சொல்கிறது. வசந்தி திருடினார் என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக்கொண்டாலும்கூட... அதற்காக அவரை பலாத்காரம் செய்யலாம் என்ற கொடிய தீர்ப்பு எந்த சட்டத்தில் உள்ளது?'' என்று கேட்கிறார் கதிர்.

''இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரிக்க வேண்டும். வசந்திக்கு பாதுகாப்புத் தர கோர்ட் உத்தரவிட வேண்டும்.'' என்ற கோரிக்கையை வைத்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டு உள்ளது.

இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார், இப்போது விடுமுறையில் இருக்கிறார். நாம் அவரைச் சந்திக்க முயல்வதை அறிந்து அவரே வேறொரு செல்போனில் இருந்து நம்மைத் தொடர்பு கொண்டார். ''வேணும்னே போட்ட புகார் இது. திருட்டு வழக்கில் இருந்து தப்பிக்கப் பொய் சொல்லுகிறாள்... அதான் எஸ்.பி-யே ஸ்டேட்மெண்ட் விட்டுட்டார்ல...'' என்றார் கூலாக. எஸ்.எஸ்.ஐ. அமுதனோ, 'தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ள'தாகவே எதிர்முனை சொல்கிறது. இவர்களுக்கு ஆதரவாக எஸ்.பி. பிரவீன் குமார் அபினபு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''பிப்ரவரி 12-ம் தேதி நரியூத்து பகுதியைச் சேர்ந்த புஷ்பம் கடமலைக்குண்டு போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த வசந்தி, தன் வீட்டில் புகுந்து கம்பு, கத்தி கொண்ட ஆயுதம் கொண்டு தாக்கி காயம் ஏற்படுத்தி கழுத்தைப் பிடித்து நெரித்து முணே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டுச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், 13-ம் தேதி மதியம் வசந்தியை கைது செய்து பெண் போலீஸார் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தன்னிடம் போலீஸார் தவறாக நடந்துகொண்டதாக வசந்தி கோர்ட்டிலும் சொல்லவில்லை. அவரை பரிசோதித்த அரசு மருத்துவனை டாக்டரிடமும் சொல்லவில்லை. நீதிமன்றக் காவலில் இருந்தபோதும் சொல்லவில்லை. இத்தனை நாட்கள் கழித்து உண்மைக்குப் புறம்பாக புகார் தெரிவித்து இருக்கிறார். நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே அவர் பொய் சொல்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க கடந்த 18-ம் தேதி எஸ்.பி-யை தொடர்பு கொண்டோம். அவர் 19-ம் தேதி காலை 11 மணிக்கு அலுவலகத்துக்கு வரச் சொன்னார். அவர் சொன்ன நேரத்தில் சென்றபோது, அலுவலக மீட்டிங்குக்காக திண்டுக்கல்லுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். மாலை வரை காத்திருந்துவிட்டு மீண்டும் எஸ்.பி-யை தொடர்பு கொண்டோம். ''ஆண்டிபட்டி டி.எஸ்.பி. விஜயபாஸ்கரிடம் விவரங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றார். டி.எஸ்.பி-யைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ''சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரைதான் டிரான்ஃபர் செஞ்சுட்டோமே...'' என்று இழுத்தவர், ''விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது'' என்று மட்டும் சொன்னார்.

இவ்வளவுதான் போலீஸ் சொல்லும் பதில். கடமலைக்குண்டு ஸ்டேஷன் முதல் மாவட்ட எஸ்.பி. வரை அத்தனை பேருமே ஏதோ ஒரு வகையில் குற்றத்தை மறைக்கத் துணை நிற்கிறார்கள். நீதி கிடைக்க வேண்டுமானால், முதல்வரே தலையிட்டால்தான் உண்டு என்ற கடைசி நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அந்த அபலைப் பெண்!

நம்பலாமா..?

- சண்.சரவணக்குமார்,

படங்கள்: வீ.சக்தி அருணகிரி